சம்சேர் காசி

வங்காள ஆட்சியாளர்

சம்சேர் காசி ( Shamsher Gazi) 1712-1760) ( பதியின் புலி என்றும் அழைக்கப்படுகிறார். )[1]. இவர் ரோசனாபாத் மற்றும் திரிபுராவின் ஆட்சியாளர் ஆவார். இது நவீன வங்காளதேசம் மற்றும் இந்தியாவின் சில பகுதிகளை உள்ளடக்கியது. இவரது ஆட்சிக்காலம் (1748-1760) இடைக்கால திரிபுராவின் வரலாற்றில் "மிகவும் சுவாரசியமான அத்தியாயம்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.[2] இவர் கொமில்லா, நவகாளி மற்றும் சிட்டகொங் போன்ற பகுதிகளில் "புகழ்பெற்ற கொள்ளையர்" என்று குறிப்பிடப்படுகிறார்.[3]

பதியின் புலி
சம்சேர் காசி
தாய்மொழியில் பெயர்শমসের গাজী
பிறப்பு1712
குங்குரா, திரிபுரா இராச்சியம்
இறப்புசுமார் 1760 (அகவை 47–48)
இறப்பிற்கான
காரணம்
பீரங்கியால் கொல்லப்பட்டார்
பதவிக்காலம்ரோசனாபாத்தின் சக்லாதர்
முன்னிருந்தவர்நாசிர் முகமது
பின்வந்தவர்கிருஷ்ண மாணிக்கியா
தெற்கு சாகல்னையாவில் உள்ள ஒரு ஒரு விடுதியில் அமைக்கப்பட்டுள்ள சம்சேர் காசியின் கோட்டை மாதிரி

ஆரம்ப கால வாழ்க்கை

காசி 1712 இல் குங்குரா என்ற கிராமத்தில் வங்காள முஸ்லிம் விவசாயிகளின் குடும்பத்தில் பிறந்தார். இவரது தந்தை பெயர் பேயார் (பிற ஆதாரங்கள் பிர் என்று கூறுகின்றன) முகம்மது கான் மற்றும் தாயின் பெயர் கயாரா பீபி என்பதாகும்.[4] சிறுவயதிலிருந்தே, இவர் ரோசனாபாத்தின் சக்லாவின் நில உரிமையாளர் நசீர் முகமதுவின் கீழ் பணியாற்றத் தொடங்கினார்.[5] வங்காளத்தின் முன்னாள் நவாப்பிற்கு பண அன்பளிப்பு வழகியதன் மூலம் நசீர் முகமது சக்லாவின் ஆட்சியாளரானார்.[6]

ஆட்சி

பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனத்தின் வருகையும், ஜமீந்தாரிகளின் "சுரண்டல் மற்றும் ஒடுக்குமுறைகள்" இந்தப் பகுதி விவசாயிகளின் வாழ்க்கையை கடினமாக்கி வைத்திருந்தது. சம்சேர் காசியின் திறமையான ஆட்சி அவர்களை இதிலிருந்து விடுவித்தது. பொருளாதாரத்தை சரியான முறையில் நிர்வகிக்க முடிந்தது. அத்தியாவசியப் பொருட்களின் விலைகளைக் குறைக்க வழிவகுத்தது.[7] இவர் இந்துக்கள் மற்றும் முஸ்லிம்கள் இருவரிடமும் தாராளமாக இருந்தார். குளங்களைத் தோண்டி, அதற்குத் தன் பெயரைச் சூட்டி, தனது தலைநகரான ஜகன்னாத்[3] சோனாபூரிலும் வெளியிலும் பல பள்ளிகளைக் கட்டினார்.'கையார் சாகர்' இப்பகுதியில் உள்ள பெரிய குளங்களில் ஒன்றாகும்.[5]

இரண்டாம் இந்திர மாணிக்கியாவின் சகோதரர் கிருஷ்ண மாணிக்கியா, திரிபுராவின் பழைய தலைநகரான உதய்பூரை (பழைய இரங்கமதி) மீண்டும் கைப்பற்ற இரண்டு முறை முயன்றார், ஆனால் 1748 இல் காசியால் தோற்கடிக்கப்பட்டார் [6] தக்சின்சிக் மற்றும் மெகர்குல் ஆகிய பகுதிகள் மீதான தனது பிடியை உறுதிப்படுத்தி, சம்சேர் திரிபுராவின் ஆட்சியாளரானார். [8] மெசுபாகுல் அக் என்பவரின் பர்போ தேஷ் என்ற புத்தகத்தின்படி, "கொள்ளையடிக்கும் மோக்குகள் மற்றும் பார்கீகளிடமிருந்து" எதிர் கொள்ளும் தாஅக்குதல்களை காசி தாக்குதல்களை முறியடித்தார். [9] 1748 ஆம் ஆண்டில், திரிபுராவின் கட்டுப்பாட்டை சம்சேர் காசி கைப்பற்றினார்.[10] இராச்சியத்தின் குடிமக்களிடமிருந்து எதிர்ப்பை எதிர்கொண்ட காசி, இலட்மண் மாணிக்கியா அரியணையில் அமர்த்தினார். இருப்பினும் உண்மையான அதிகாரம் தானே கொண்டிருந்தார்.. இலட்மண் மக்களின் ஆதரவைப் பெறத் தவறிய போதிலும், இது மூன்று ஆண்டுகள் தொடர்ந்தது. இருப்பினும் அவரது ஆட்சி குறுகியதாக இருந்தபோதிலும், அசல் மாணிக்கிய வம்சம் 1760 இல் அதிகாரத்தை மீட்டெடுத்தது.[11][12]

அகர்தலாவுக்கு ஓடிய கிருஷ்ண மாணிக்கியா, வங்காள நவாப் மீர் காசிமிடம் உதவி கோரினார். நவாபுடனான போரில் காசிமை சூழ்ச்சியால் வென்று பீரங்கியால் கொல்லப்பட்டார்.

மேற்கோள்கள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=சம்சேர்_காசி&oldid=3816609" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்