சமயமின்மை

சமயமின்மை (Irreligion) (சமயப் பற்றின்மை அல்லது சமயப் புறக்கணிப்பு) என்பது சமய அமைப்புகள் எதையும் பின்பற்றாத, சமயம் பற்றி கவலை கொள்ளாத, சமயப் புறக்கணிப்பு அல்லது சமய அமைப்புகளை எதிர்க்கும் நிலைப்பாடு ஆகும்.[2]இறைமறுப்பு, சமய அமைப்புகளோடு ஒத்துழையாமை கொள்கை, சமயச்சார்பற்ற மனிதநேயம் ஆகியன சமய நம்பிக்கைப் புறக்கணிப்பு எனும் வகைக்குள் அடங்கும். எதிர்-இறையியல் (antitheism), சமயக் அதிகாரப்படிநிலை எதிர்ப்பு, சமய அமைப்புகள் எதிர்ப்பு ஆகியன சமய எதிர்ப்பு நிலைப்பாடு எனும் வகைக்குள் அடங்கும். சமய கவலை அற்ற நிலையில் (அக்கறையின்மை - முக்கியமின்மைவாதம்) சமயம் பற்றி அலட்டிக் கொள்ளாமை அல்லது சமயத்தில் ஆர்வமின்மை ஆகியன அடங்கும். அறியவியலாமைக் கொள்கை, மூட-இறையியல் வாதம் (Ignosticism), இறையியலற்ற வாதம் (Nontheism), சமய ஐயவாதம், கட்டற்ற சிந்தனைவாதம் ஆகியன சமயத்தில் நம்பிக்கையின்மை எனும் வகைக்குள் அடங்கும். சமயமின்மை சூழலுக்கு ஏற்ப சமய நம்பிக்கைகளின் வடிவங்களையும் கொண்டிருக்கலாம். 18ம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் நிலவிய இயற்கையினை மட்டுமே இறையாகவும் அதற்கு மீறிய ஒரு சக்தி இல்லை என்றும் கொண்டிருந்த நிலைப்பாடு (Deism) இதற்கு சிறந்த எடுத்துக்காட்டாகும்.[3]

சமயத்துக்கு மக்கள் தரும் முக்கியத்துவம். வெளிர் பச்சை நிறம் குறைந்த முக்கியத்துவத்தையும், கரும் பச்சை நிறம் அதிக முக்கியத்துவத்தையும் காட்டுகின்றது. (2009ஆம் ஆண்டு தரவு)[1]

2012 ஆண்டு மதிப்பீடு உலக மக்கட்தொகையில் 36% சமயமற்றோர் எனவும் 2005 க்கும் 2012 க்கும் இடைப்பட்ட காலத்தில் இது 9 விழுக்காடு அதிகரித்துள்ளது எனவும் கண்டுகொள்ளப்பட்டுள்ளது.[4]2010 ஆண்டு அறிக்கை சமயமற்றோரில் பலர் சில இறை நம்பிக்கைகளைக் கொண்டுள்ளனர் எனவும், ஆசியாவிலும் பசபிக்கிலும் இருந்து அதிகளவான சமயமற்றோர் காணப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளது.[5]மற்றுமொரு மூலத்தின் அடிப்படையில், சமயமற்றோரில் 40–50% ஏதாவது ஒரு கடவுள் அல்லது உயர் சக்தியில் நம்பிக்கை கொண்டுள்ளனர்.[6]

மக்கள் தொகையியல்

கீழேயுள்ள அட்டவணை நாடுகளின் சனத்தொகையின் சமயமின்மையினை கூடியதிலிருந்து குறைந்ததற்கு வரிசைப்படுத்திக் காட்டுகின்றது.

நாடுசமயமின்மை
சனத்தொகை வீதம்
மூலம்
 சுவீடன்46–85 (சராசரி 65.5)[7]
 செக் குடியரசு64.3[8]
 வியட்நாம்46.1–81 (சராசரி 63.55)[7][8]
 டென்மார்க்43–80 (சராசரி 61.5)[7]
 அல்பேனியா60[9][10][11]
 செருமனி59[12]
 ஐக்கிய இராச்சியம்39–65 (சராசரி 52)[13]
 சப்பான்51.8[8]
 அசர்பைஜான்51[14]
 சீனா8–93 (சராசரி 50.5)[7][8][15]
 எசுத்தோனியா49[7]
 பிரான்சு43–54 (சராசரி 48.5)[7]
 உருசியா48.1[8]
 பெலருஸ்47.8[8]
 பின்லாந்து28–60 (சராசரி 44)[7]
 அங்கேரி42.6[8]
 உக்ரைன்42.4[8]
 நெதர்லாந்து39–44 (சராசரி 41.5)[7][16]
 லாத்வியா40.6[8]
 தென் கொரியா36.4[8]
 பெல்ஜியம்35.4[8]
 நியூசிலாந்து34.7
[17]
 சிலி33.8[8]
 லக்சம்பர்க்29.9[8]
 சுலோவீனியா29.9[8]
 வெனிசுவேலா27.0[8]
 கனடா23.9[18]
 எசுப்பானியா23.3[19]
 சிலவாக்கியா23.1[8]
நாடுசமயமின்மை
சனத்தொகை வீதம் (2006)
மூலம்
 ஆத்திரேலியா22.3
[20]
 மெக்சிக்கோ20.5[8]
 ஐக்கிய அமெரிக்கா19.6[21]
 லித்துவேனியா19.4[8]
 இத்தாலி17.8[8]
 அர்கெந்தீனா16.0[22]
 தென்னாப்பிரிக்கா15.1[23]
 குரோவாசியா13.2[8]
 ஆஸ்திரியா12.2[8]
 போர்த்துகல்11.4[8]
 புவேர்ட்டோ ரிக்கோ11.1[8]
 பல்கேரியா11.1[8]
 பிலிப்பீன்சு10.9[8]
 பிரேசில்8.0[24]
 அயர்லாந்து7.0[25]
 இந்தியா6.6[8]
 செர்பியா5.8[8]
 பெரு4.7[8]
 போலந்து4.6[8]
 ஐசுலாந்து4.3[8]
 கிரேக்க நாடு4.0[8]
 துருக்கி2.5[8]
 உருமேனியா2.4[8]
 தன்சானியா1.7[8]
 மால்ட்டா1.3[8]
 ஈரான்1.1[8]
 உகாண்டா1.1[8]
 நைஜீரியா0.7[8]
 வங்காளதேசம்0.1[8]

உசாத்துணை

இவற்றையும் பார்க்க

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=சமயமின்மை&oldid=3885168" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்