ச. கனகரத்தினம்

இலங்கை தமிழ் அரசியல்வாதி
(சதாசிவம் கனகரத்தினம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

சதாசிவம் கனகரத்தினம் (Sathasivam Kanagaratnam, பிறப்பு: 28 டிசம்பர் 1946) இலங்கைத் தமிழ் அரசியல்வாதியும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார்.

சதாசிவம் கனகரத்தினம்
S. Kanagaratnam
வன்னி மாவட்ட இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில்
2004–2010
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு28 திசம்பர் 1946 (1946-12-28) (அகவை 77)
நல்லூர், இலங்கை
தேசியம்இலங்கைத் தமிழர்
அரசியல் கட்சிஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி
பிற அரசியல்
தொடர்புகள்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு

ஆரம்ப வாழ்க்கையும் குடும்பமும்

கனகரத்தினம் யாழ்ப்பாணம் நல்லூரில் பிறந்தவர்.[1][2] செங்குந்தா இந்துக் கல்லூரியில் கல்வி கற்றார்.[2] இவரது சகோதரர் செல்வநாயகம் (செல்லக்கிளி) விடுதலைப் புலிகளின் ஆரம்பகால உறுப்பினர் ஆவார். செல்லக்கிளி 1983 திருநெல்வேலித் தாக்குதலில் கொல்லப்பட்டார்.[2] கனகரத்தினத்திற்கு இரண்டு ஆண் பிள்ளைகளும் ஒரு பெண் பிள்ளையும் உள்ளனர்.[2]

அரசியலில்

கனகரத்தினம் 2004 நாடாளுமன்றத் தேர்தலில் விடுதலைப் புலிகளால் பரிந்துரைக்கப்பட்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளராக வன்னி மாவட்டத்தில் போட்டியிட்டு,[3] இவர் 30,390 விருப்பு வாக்குகள் பெற்று வெற்றி பெற்று நாடாளுமன்றம் சென்றார்.[4]

ஈழப்போரின் நிறைவுக் கட்டத்தில் கனகரத்தினமும், அவரது குடும்பமும் முள்ளிவாய்க்கால் பகுதியில் 300,000 இற்கும் அதிகமான பொது மக்களுடன் சேர்ந்து இலங்கை இராணுவத்தினரின் பாதுகாப்பு வலயத்தினுள் சிக்கியிருந்தனர்.[5] 2009 மே மாதம் போர் முடிவர்டைந்ததை அடுத்து இவர் காணாமல் போனார்.[6] இவர் பின்னர் காவல் துறையினரால் அகதி முகாமில் இருக்கக் கண்டுபிடிக்கப்பட்டு, கொழும்புக்குக் கொண்டு செல்லப்பட்டார்.[7][8] இவர் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ச உத்தரவின் பேரில் அவசரகாலச் சட்டத்தின் கீழ் விடுதலைப் புலிகளுக்கு உதவி செய்தமைக்காகத் தடுத்து வைக்கப்பட்டார்.[9][10][11] எட்டு மாதங்கள் தடுத்து வைக்கப்பட்டிருந்த பின்னர் 200 சனவரியில் 2010 அரசுத்தலைவர் தேர்தலில் மகிந்த ராசபக்சவிற்கு ஆதரவளிக்க வாக்குறுதி பெறப்பட்டு விடுதலை செய்யப்பட்டார்.[3][12][13] இவருக்கு வவுனியாவில் வடமாகான ஆளுனரின் வீட்டுத் திட்டத்தில் ஒரு வீடு ஒன்றில் தங்க வைக்கப்பட்டார்.[14][15]

கனகரத்தினம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்து விலகி ராசபக்சவின் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணியில் சேர்ந்தார்.[16] 2010 நாடாளுமன்ரத் தேர்தலில் ஐமசுகூ வேட்பாளராக வன்னி மாவட்டத்தில் போட்டியிட்டு 3,570 விருப்பு வாக்குகள் பெற்றுத் ஐமசுகூ வேட்பாளர்களில் ஆறாவதாக வந்து தோல்வியடைந்தார்.[17]

மேற்கோள்கள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=ச._கனகரத்தினம்&oldid=3552507" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்