சட்டமன்ற அரண்மனை (சண்டிகர்)

சண்டிகர் சட்டமன்ற அரண்மனை (ஆங்கிலம்:Palace of Assembly (Chandigarh)) என்றறியப்படும் இந்த வளாகம், சண்டிகரில் அமைந்துள்ளது. சண்டிகரின் சட்டமன்ற வளாகமாக பயன்படும் இது, பிரான்சின் சுவிசில் பிறந்த எழுத்தாளரும், கட்டிடக்கலைஞருமான லெ கொபூசியே என்பவரால் வடிவமைக்கப்பட்டதாகும்.[1]

சண்டிகர் சட்டமன்ற அரண்மனை கட்டிடம்
சண்டிகர் சட்டமன்ற அரண்மனை கட்டிடம்

பின்னணி

1947 இல் இந்திய விடுதலைக்குப்பின் நடந்த பஞ்சாப் பிரிவினையால் லாகூர் பாக்கித்தானுடன் இணைந்தது. இந்தியப் பஞ்சாப் மாநிலத்திற்கு, ஒரு புதிய தலைநகர் தேவையாய் இருந்தது. ஆகவே, அப்போதைய இந்திய முதல் பிரதமரான ஜவகர்லால் நேரு லெ கொபூசியேவை சண்டிகரில் ஒரு புதிய நகரம் உருவாக்க ஏற்பாடு செய்தார். அதன் தொடர்ச்சியாக கொபூசியேயும் அவரது அணியும், ஒரு பெரிய சட்டசபை மற்றும் உயர் நீதிமன்ற கட்டிடம் மட்டுமல்லாமல் பல்வேறு முக்கிய கட்டிடங்களையும் கட்டினார்கள். பின்பு வந்த காலங்களில், அப்பகுதியில் நவீனத்துவம் வாய்ந்த பல கட்டிடங்கள் உருவாக்கப்பட்டாலும் 'காபிடல் காம்பளக்ஸ்' எனும் இக்கட்டிடம் சிறப்பு வாய்ந்ததாகவே கருதப்படுகிறது.[1]

கலைநுட்பம்

சுற்றுக்கண்டம் (Sector) 1-ல் இடம்பெற்றுள்ள இந்த கட்டிடத் தொகுதி, 'கேபிடல் காம்ப்ளக்ஸ்'(Capitol Complex) எனும் பெயரில் பிரபலம் பெற்றதாக கருதப்படுகிறது. சிக்கலான மூன்று கட்டிடக் கலைநுட்பமும், கலைப்படைப்புகளும் அடங்கியுள்ள இக்கட்டிடத்தில் பஞ்சாப் மற்றும் அரியானா மாநிலங்களின் ஆட்சிப்பீடங்கள் இயங்குகின்றன.[2] திட்டமிட்டு வடிவமைக்கப்பட்ட நகரமான சண்டிகர் நகரத்தின் பிரதான அடையாளமாக விளங்கும் இந்த வளாகம், கம்பீரமாக வீற்றிருக்கிறது. இப்படி ஒரு ஒருங்கிணைந்த வளாக அமைப்பிற்கான பெருமை முழுதும் வடிவமைத்த லெ கொபூசியே சாரும் என்பதும் குறிப்பிடத்தக்கது.[3]

முக்கிய மூன்று

தலைமைச்செயலகம், சட்டப்பேரவை மற்றும் உயர்நீதிமன்றம் ஆகிய மூன்று முக்கியமான அரசாங்க அமைப்புகள் இந்த வளாகத்தில் இடம் பெற்றுள்ளன. இந்த மூன்று அமைப்புகளுக்குள் நுழைந்து பார்க்க சுற்றுலாப்பயணிகளுக்கு அனுமதி இல்லை என்றாலும், கைச்சின்னம் அமைந்துள்ள இடத்திலிருந்து இந்த அரசாங்க மாளிகை வளாகங்களை பார்க்கமுடியும்.உள் நுழைந்து பார்க்க வேண்டுமெனில் சுற்றுலா அலுவலகம் அல்லது உரிய அதிகாரிகளிடம் விசேட அனுமதி பெற்று செல்லலாம். 9 வது செக்டாரில் உள்ள சுற்றுலாப் பயணிகள் பணியகம் அல்லது 17 வது செக்டாரில் உள்ள சுற்றுலா மையம் போன்ற இடங்களில் இதற்கான விதிமுறைகளுக்கேற்ப அனுமதி பெறலாம்.[4]

சான்றாதாரங்கள்

உசாத்துணை

🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்