சக் பெரி

அமெரிக்க இசைக்கலைஞர் (1926-2017)

சக் பெரி [18 அக்டோபர் 1926 - 18 மார்ச் 2017] ஒரு அமெரிக்க பாடகரும் பாடலாசிரியரும் இசையமைப்பாளரும் ஆவார். இவர் 'ஊசல் சுற்றாட்டு இசையின்[1] தந்தை' என்று சிறப்பிக்கப்படுகிறார். மேபிலீன் (1955), ரோல் ஓவர் பீத்தோவன் (1956), ராக் அண்டு ரோல் மியூசிக் (1957), ஜானி பி. குட் (1958) உள்ளிட்ட சிறந்த பாடல்களைத் தந்துள்ளார். அவரது கித்தார் தனியிசைகளும் மேடை சாகசங்களும்[2] பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின. இவரது இசை ஆக்கங்களுக்காக 1986ஆம் ஆண்டு ராக் அண்டு ரோல் ஹால் ஆவ் ஃபேமில் இவரது பெயர் ஏற்றுக்கொள்ளப்பட்டது[3].

ஆரம்பகால வாழ்க்கை

அமெரிக்காவின் மிசூரி மாநிலத்திலுள்ள செயின்ட் லூயியில் வாழ்ந்த ஹென்றி வில்லியம் பெரி (தந்தை) மார்த்தா பெல் தம்பதியருக்குக் கடைசியாகப் பிறந்தார் சக் பெரி. சக்கின் தந்தை ஒரு ஒப்பந்தகராகவும் தாய் பள்ளி முதல்வராகவும் இருந்தனர்[4]. பள்ளியில் இருந்த காலத்தில் ஆயுதமேந்தியத் திருட்டிற்காக சீர்திருத்தப் பள்ளிக்குச் சென்றார். 1948ல் தெமெட்டா சக்ஸை மணந்தார்; சக்-தெமெட்டா தம்பதியருக்கு டார்லின் பெரி என்ற மகள் 1950ல் பிறந்தார்[5]. சிலகாலம் தொழிற்சாலைப் பணிகளையும் சிலகாலம் ஒப்பனை செய்யும் தொழிலையும் சக் செய்து வந்தார். 1950களின் தொடக்கத்தில் உள்ளூர் குழுக்களுடன் இணைந்து பாடி வந்தார். டீ போன் வாக்கரின் கித்தார் வாசிப்பும் சாகசங்களும் அவரைக் கவர்ந்தன. அவரது நண்பரான இரா ஹாரிசிடம் கித்தார் இசையைக் கற்றுத் தேர்ந்தார்.

சக் பெரி
1957ல் பெரி
பிறப்புசார்லசு எட்வர்டு ஆண்டர்சன் பெரி
(1926-10-18)அக்டோபர் 18, 1926
இறப்புமார்ச்சு 18, 2017(2017-03-18) (அகவை 90)
மற்ற பெயர்கள்ராக் அண்டு ரோலின் தந்தை
பணிபாடகர், பாடலாசிரியர், இசையமைப்பாளர்
இசை வாழ்க்கை
இசை வடிவங்கள்ஊசல் சுற்றாட்டு இசை
இசைக்கருவி(கள்)கிதார்
இசைத்துறையில்1953–2017
வலைத்தளம்
www.chuckberry.com

மேற்கோள்கள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=சக்_பெரி&oldid=3929486" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்