சகுந்தலா பராஞ்சபே

சகுந்தலா பராஞ்சபே (Shakuntala Paranjpye, 17 சனவரி 1906 – 3 மே 2000) ஓரு இந்திய எழுத்தாளரும், நடிகையும், அரசியல்வாதியும் ஆவார். இவர் 1958-64 காலகட்டத்தில் மகாராட்டிர சட்டமன்ற உறுப்பினராக இருந்தார். மேலும் 1964-70 காலகட்டத்தில் மாநிலங்களவையில் நியமன உறுப்பினராக பணியாற்றினார்.[1][2][3] 1991 ஆம் ஆண்டில், குடும்பக் கட்டுப்பாடு துறையில் இவரது முன்னோடிப் பணியைப் பாராட்டி, இந்தியக் குடியரசின் மூன்றாவது-உயர்ந்த குடிமகன் விருதான பத்ம பூசண் விருது வழங்கப்பட்டது.[4]

சகுந்தலா பராஞ்சபே
शकुंतला परांजपे
மாநிலங்களவை உறுப்பினர்
பதவியில்
1964 - 1970
தொகுதிநியமிக்க உறுப்பினர்
(கலை & திரைப்படம்)
மகாராட்டிர சட்டப்பேரவை உறுப்பினர்
பதவியில்
1958 - 1964
தொகுதிநியமிக்க உறுப்பினர்
(கலை & திரைப்படம்)
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு17 சனவரி 1906
இறப்பு3 மே 2000 (வயது 94)
தேசியம்• பிரித்தானிய இந்தியர் (1906-1947)
இந்தியர் (1947-2000)
துணைவர்Youra Sleptzoff (divorced)
பிள்ளைகள்சாய் பராஞ்சபே
பெற்றோர்சர் ஆர். பி. பராஞ்சபே (தந்தை)
முன்னாள் கல்லூரிநியூன்ஹாம் கல்லூரி, கேம்பிரிட்சு
இலண்டன் பல்கலைக்கழகம்
வேலைஎழுத்தாளர், நடிகை, சமூக சேவகர்
விருதுகள்பத்ம பூசண் (1991)

வாழ்க்கைக் குறிப்பு

சகுந்தலா, கேம்பிரிச்சுப் பல்கலைக்கழகத்தில் கணிதத்தில் முதல் வகுப்பு மாணவராக இருந்த முதல் இந்தியரும் கல்வியாளரும் மற்றும் 1944-1947 காலகட்டத்தில் ஆத்திரேலியாவுக்கான இந்திய உயர் ஆணையராக இருந்த சர் ஆர். பி. பராஞ்சபேவின் மகள் ஆவார்.

1929இல் சகுந்தலா கேம்பிரிச்சிலுள்ள நியூன்ஹாம் கல்லூரியில் கணிதத்தில் பட்டம் பெற்றவர். அடுத்த ஆண்டு இலண்டன் பல்கலைக்கழகத்தில் கல்வியில் சான்றிதழ் பட்டம் பெற்றார்.

சகுந்தலா 1930களில் சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் உள்ள பன்னாட்டு தொழிலாளர் அமைப்பில் பணிபுரிந்தார்.[5] 1930கள் மற்றும் 1940களில் சில மராத்தி மற்றும் இந்தித் திரைப்படங்களிலும் நடித்தார்.

சகுந்தலா மராத்தியில் பல நாடகங்கள், ஓவியங்கள் மற்றும் புதினங்களை எழுதினார். இவருடைய சில வேலைகள் ஆங்கிலத்திலும் இருந்தன. குழந்தைகளுக்கான இந்தித் திரைப்படமான, யே ஹை சக்கட் பக்கத் பம்பே போ என்பது சகுந்தலாவின் மராத்தி கதையை அடிப்படையாகக் கொண்டு 2003 இல் வெளியிடப்பட்டது.

தனிப்பட்ட வாழ்க்கை

சகுந்தலா, உருசிய ஓவியரான யூரா இச்லெப்ட்சஃப் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்தத் தம்பதியருக்கு 1938 இல் சாய் பராஞ்சபே என்ற ஒரு மகள் பிறந்தார்.[6] மகள் பிறந்த சில காலம் கழித்து, சகுந்தலா தனது கணவனை விவாகரத்து செய்தார்.

சாய் பராஞ்சபே ஒரு பிரபலமான இந்தித் திரைப்பட இயக்குநரும் மற்றும் திரைக்கதை ஆசிரியரும் ஆவார். இவர் நகைச்சுவை மற்றும் குழந்தைகளுக்கான திரைப்படங்களுக்கு பெயர் பெற்றவர். 1991 ஆம் ஆண்டில், இந்திய அரசு சகுந்தலாவின் கலைத் திறமைகள் மற்றும் இவரது கதைகளுக்காக பத்ம பூசண் கௌரவத்தை வழங்கியது.[4]

படைப்புகள்

  • Three years in Australia, (ஆங்கிலம்), 1951
  • Sense and nonsense, (ஆங்கிலம்), 1970.[1]
  • Kāhi Āmbat, Kāhi Goad, (மராத்தி), 1979.
  • Desh-Videshichyā Lok-Kathā, (மராத்தி)

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=சகுந்தலா_பராஞ்சபே&oldid=3946491" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்