க. பத்மநாதன்

கனகசபை பத்மநாதன் (Kanagasabai Pathmanathan, 30 மே 1948 - 21 மே 2009) இலங்கைத் தமிழ் அரசியல்வாதியும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார்.

க. பத்மநாதன்
K. Pathmanathan
அம்பாறை மாவட்ட நாடாம்முமன்ற உறுப்பினர்
பதவியில்
2004–2009
பின்னவர்தோமசு வில்லியம், ததேகூ
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1948-05-30)30 மே 1948
இறப்பு21 மே 2009(2009-05-21) (அகவை 60)
மதுரை, தமிழ்நாடு, இந்தியா
தேசியம்இலங்கைத் தமிழர்
அரசியல் கட்சிதமிழ்த் தேசியக் கூட்டமைப்பு
வேலைஅரசு அதிகாரி

ஆரம்ப வாழ்க்கை

கனகசபை பத்மநாதன் அம்பாறை மாவட்டம், காரைதீவில் இளையதம்பி கனகசபை, சின்னத்தம்பி பத்மாவதி ஆகியோருக்குப் பிறந்தவர்.[1] தனது ஆரம்பக் கல்வியை காரைதீவு இராமகிருஷ்ண ஆண்கள் பாடசாலை, கல்முனை பாத்திமா கல்லூரி ஆகிய பாடசாலைகளில் கல்வி கற்றார். இலங்கைக் காவல்துறையில் பணியாற்றிய பின்னர் வவுனியா கட்டிடப்ப் பொருட்கள் திணைக்களத்தில் பணியாற்றினார்.[1] அரசியலுக்கு வரும் முன்னர் தேசிய வீடமைப்பு அதிகார சபையின் அம்பாறை மாவட்ட முகாமையாளராகப் பல ஆண்டுகள் பணியாற்றினார்.[2]

அரசியலில்

பத்மநாதன் 2004 நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளர்களில் ஒருவராக அம்பாறை மாவட்டத்தில் போட்டியிட்டு 29,002 விருப்பு வாக்குகள் பெற்று ததேகூ வேட்பாளர்களில் முதலாவதாக வந்து வெற்றி பெற்று நாடாளுமன்றம் சென்றார்.[3]

பத்மநாதன் 2009 மே 21 அன்று சிறிது கால சுகவீனமற்ற நிலையில் மதுரையில் காலமானார்.[2]

மேற்கோள்கள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=க._பத்மநாதன்&oldid=3547261" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்