கௌடா (நகரம்)

இந்திய துணைக் கண்டத்தின் கிழக்குப் பகுதியில் உள்ள வங்காளத்தின் ஒரு வரலாற்று நகரம்

கௌடா (Gauḍa) ( கௌர், இலக்னௌதி மற்றும் சன்னதாபாத் என்றும் அழைக்கப்படுகிறது) என்பது இந்திய துணைக் கண்டத்தின் கிழக்குப் பகுதியில் உள்ள வங்காளத்தின் ஒரு வரலாற்று நகரமும், பாரம்பரிய மற்றும் மத்தியகால இந்தியாவின் மிக முக்கியமான தலைநகரங்களில் ஒன்றுமாகும். இது பல இராச்சியங்களின் கீழ் வங்காளத்தின் தலைநகரமாக இருந்துள்ளது. கௌட பிரதேசம் பல இந்தியப் பேரரசுகளின் ஒரு மாகாணமாகவும் இருந்தது. 7-ஆம் நூற்றாண்டில், கௌட இராச்சியம் வங்காள நாட்காட்டியின் தொடக்கத்துடன் ஒத்துப்போகும் அரசர் சசாங்கனால் நிறுவப்பட்டது. [1] கௌடா படிப்படியாக வங்காளத்திற்கும் வங்காளிகளுக்கும் ஒத்ததாக மாறியது. இது 1204 இல் தில்லி சுல்தானகத்தால் கைப்பற்றப்பட்டது.

கௌடா (நகரம்)
மேலிருந்து கடிகார திசையில்: இலுக்காசோரி நுழைவாயில், தக்கில் தர்வாசா, பிரோசு மினர், காதம் ரசூல் பள்ளிவாசல், சோட்டா சோனா பள்ளிவாசல், முகலாய தகாகானா, தர்பாசுபரி பள்ளிவாசல், கௌடா தூண், இலாட்டன் பள்ளிவாசல், பரோ சோனா பள்ளிவாசல், பல்லால் பதி
மாற்றுப் பெயர்இலக்னௌதி, சனாதாபாத்து
இருப்பிடம்மால்டா மாவட்டம், மேற்கு வங்காளம், இந்தியா
ராஜசாகி கோட்டம், வங்காளதேசம்
ஆயத்தொலைகள்24°52′0″N 88°8′0″E / 24.86667°N 88.13333°E / 24.86667; 88.13333
வகைகுடியேற்றப் பகுதி
நீளம்7 1/8 கி.மீ
அகலம்1 – 2 கி.மீ
வரலாறு
கட்டப்பட்டது7ஆம் நூற்றாண்டு
பயனற்றுப்போனது16ஆம் நூற்றாண்டு

1453 மற்றும் 1565 க்கு இடையில் 112 ஆண்டுகளுக்கு, கௌடா வங்காள சுல்தானகத்தின் தலைநகராக இருந்தது. 1500 ஆம் ஆண்டில், கௌடா 200,000 என்ற மக்கள்தொகையுடன் உலகின் ஐந்தாவது-அதிக மக்கள்தொகை கொண்ட நகரமாக இருந்தது.[2] [3] அத்துடன் இந்திய துணைக்கண்டத்தில் அதிக மக்கள்தொகை கொண்ட நகரங்களில் ஒன்றாகவும் இருந்தது. போத்துக்கீசர்கள் நகரத்தின் விரிவாக்கத்திற்கான கணக்குகளை விட்டுச் சென்றனர். சுல்தான்கள் ஒரு கோட்டை, பல பள்ளிவாசல்கள், ஒரு அரச அரண்மனை, கால்வாய்கள் மற்றும் பாலங்கள் ஆகியவற்றைக் கட்டினார்கள். கட்டிடங்கள் மெருகூட்டப்பட்ட ஓடுகளைக் கொண்டிருந்தன.

16-ஆம் நூற்றாண்டில் வங்காள சுல்தானகத்தின் வீழ்ச்சியின்போது முகலாயப் பேரரசு இப்பகுதியைக் கைப்பற்றும் வரை நகரம் செழித்து வளர்ந்தது. முகலாயப் பேரரசர் நசிருதீன் உமாயூன் இப்பகுதியை ஆக்கிரமித்தபோது, அவர் நகரத்தை சன்னதாபாத் ("பரலோக நகரம்") என்று மறுபெயரிட்டார். கௌடாவில் எஞ்சியிருக்கும் பெரும்பாலான கட்டமைப்புகள் வங்காள சுல்தானகத்தின் காலத்தைச் சேர்ந்தவை. இந்த நகரம் சேர் சா சூரியால்]] சூறையாடப்பட்டது. பிளேக் நோய் பரவியதால் நகரம் வீழ்ச்சியைச் சந்தித்தது. கங்கையின் போக்கு ஒரு காலத்தில் நகரத்திற்கு அருகில் அமைந்திருந்தது. ஆனால் ஆற்றின் போக்கில் ஏற்பட்ட மாற்றம் கௌடா அதன் மூலோபாய முக்கியத்துவத்தை இழக்கச் செய்தது. பின்னர் டாக்காவில் ஒரு புதிய முகலாய தலைநகரம் உருவானது.

வங்காளத்தின் வரலாறு மற்றும் இந்திய துணைக்கண்டத்தின் வரலாற்றில் கௌடா மிக முக்கியமான தலைநகரங்களில் ஒன்றாகும். மேலும் மத்தியகால கட்டிடக்கலையின் மையமாக இருந்தது. கௌடாவின் இடிபாடுகள் 18 மற்றும் 19 ஆம் நூற்றாண்டுகளில் ஐரோப்பிய ஓவியர்களின் கலைப்படைப்புகளில் சித்தரிக்கப்பட்டுள்ளன. பிரான்சிஸ் புக்கானன்-ஹாமில்டன் மற்றும் வில்லியம் பிராங்க்ளின் போன்ற குடியேற்ற அதிகாரிகள் முன்னாள் வங்காளத் தலைநகரின் விரிவான ஆய்வுகளை மேற்கொண்டனர்.[4]

நிலவியல்

அமைவிடம்

கௌடா 24°52′N 88°08′E / 24.867°N 88.133°E / 24.867; 88.133 அமைந்துள்ளது. இது வங்காளதேச- இந்திய எல்லையைக் கடந்து செல்கிறது. அதன் பெரும்பாலான இடிபாடுகள் இந்தியாவிலும், ஒரு சில கட்டமைப்புகள் வங்காளதேசத்திலும் உள்ளது. இது ஒரு காலத்தில் உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நகரங்களில் ஒன்றாக இருந்தது. இந்த முன்னாள் நகரத்தின் இடிபாடுகள் இப்போது வங்காளதேச- இந்திய எல்லையைக் கடந்து மேற்கு வங்காளத்தின் மால்டா மாவட்டத்திற்கும் ராஜசாகி பிரிவின் சபாய் நவாப்கஞ்ச் மாவட்டத்திற்கும் இடையில் பிரிக்கப்பட்டுள்ளன. கோட்வாலி வாயில், முன்பு கோட்டையின் ஒரு பகுதியாக இருந்தது. இப்போது இரு நாடுகளுக்கும் இடையிலான எல்லை சோதனைச் சாவடியைக் குறிக்கிறது.

வரலாறு

கௌடா இராச்சியம்

குப்தப் பேரரசின் வீழ்ச்சிக்குப் பிறகு, மேற்கு வங்கம் கௌடப் பேரரசாலும், கிழக்கு வங்காளத்தை சமதாத பேரரசாலும் ஆளப்பட்டது. கௌடா, வரலாற்றில் முன்னோடியான வங்காள மன்னர்களில் ஒருவரான சசாங்கனால் நிறுவப்பட்டது. [5] சசாங்கனின் ஆட்சி ஏறக்குறைய பொ.ஊ 590 மற்றும் 625 க்கு இடையில் விழுகிறது. வங்காள நாட்காட்டியின் தோற்றம் சசாங்கனின் ஆட்சியில் உருவானது.

பாலப் பேரரசு

பாலப் பேரரசு

பாலப் பேரரசு கௌடா பகுதியில் கோபாலன் மன்னராக ஆனபோது தலைவர்களின் சபையின் ஒப்புதலுடன் நிறுவப்பட்டது. பாலப் பேரரசர்கள் "கௌடாவின் பிரபு" என்ற பட்டத்தை சுமந்தனர். பேரரசு நான்கு நூற்றாண்டுகளாக ஆட்சி செய்தது. அதன் பிரதேசம் வட இந்தியாவின் பெரும் பகுதிகளை உள்ளடக்கி யிருந்தது. வரலாற்றாசிரியர் தினேஷ்சந்திர சர்காரின் கூற்றுப்படி, 'கௌடா' என்ற சொல் பாலப் பேரரசுக்கு பொருத்தமான பெயராகும். [6] பாலர் காலத்தில் வங்காள மொழி, எழுத்து மற்றும் வங்காள கலாச்சாரத்தின் பிற அம்சங்களின் வளர்ச்சியைக் கண்டது. உண்மையில், 'கௌடியா' (கௌடா) என்ற சொல் வங்காளத்திற்கும் வங்காளிகளுக்கும் ஒத்ததாக மாறியது. [7]

சென் சாம்ராச்சியம்

சென் வம்சத்தின் போது கௌடா 'இலக்னௌதி' என்று அழைக்கப்பட்டது. சென் ஆட்சியாளர் இலட்சுமண் சென்னின் நினைவாக இந்தப் பெயர் வைக்கப்பட்டது. [8]

முகலாயர்கள் கௌரில் பல கட்டிடங்களை கட்டினார்கள். இரண்டு மாடிகளைக் கொண்ட முகலாய தகாகானா வளாகம் ஆளுநர்களுக்கு ஓய்வு இடமாக இருந்தது. பாரசீக மொழியில் தகாகானா என்றால் குளிர்ச்சியான சூழல் கொண்ட கட்டிடம் என்று பொருள். [9] இந்த வளாகத்தில் மிதமான ஈரப்பதமான வெப்பநிலைக்கு உட்புற காற்றோட்டம் அமைப்பு இருந்ததை பெயர் குறிக்கிறது. இந்த வளாகம் சூபி கான்காவாகவும் பயன்படுத்தப்பட்டது. [9] வளாகத்திற்கு செல்லும் சாலையில் இலுகோச்சோரி தர்வாசா (மறைந்து தேடும் வாயில்) அமைக்கப்பட்டது. இந்த கட்டமைப்புகளின் கட்டுமானம் ஆளுநர் ஷா ஷுஜாவின் ஆட்சியில் நிறுவப்பட்டதைக் காணலாம். [10] அரையாப்பு பிளேக்கு பரவியதாலும் கங்கையின் போக்கில் ஏற்பட்ட மாற்றத்தாலும் நகரம் கைவிடப்பட்டது. அப்போதிருந்து, இப்பகுதி வனாந்தரத்தில் இடிபாடுகளின் குவியல் மற்றும் கிட்டத்தட்ட காடுகளால் நிரம்பியுள்ளது. [11]

சுல்தான் யூசுப்ஷாவின் பெயரில் உள்ள அடித்தளக் கல்வெட்டின் ஒரு பகுதி, கி.பி. 1477, பிரித்தானிய அருங்காட்சியகம்.[12]
பிரித்தானிய அருங்காட்சியகத்தில் உள்ள தளத்திலிருந்து மற்றொரு கல்வெட்டு கேப்டன் வில்லியம் பிராங்க்ளினால் சேகரிக்கப்பட்டது


அகழ்வாராய்ச்சி

இந்திய இந்தியத் தொல்லியல் ஆய்வகம் மற்றும் வங்காளதேசத்திலுள்ள தொல்லியல் துறை ஆகியவை இப்பகுதியில் உள்ள பாரம்பரிய கட்டமைப்புகளை பாதுகாக்கும் பொறுப்பை கொண்டுள்ளன. வங்காளதேச தொல்லியல் துறையானது கௌடாவின் வங்காளதேசம் மற்றும் இந்தியப் பக்கங்களில் பல திட்டங்களை மேற்கொண்டுள்ளது. [13]

போக்குவரத்து

கொல்கத்தாவில் இருந்து மால்டா நகரத்திற்கு பேருந்து மற்றும் தொடருந்து போக்குவரத்து உள்ளது. அருகிலுள்ள தொடருந்து நிலையம் கௌர் மால்டா ஆகும். இருப்பினும், மால்டா நகர தொடருந்து நிலையம் வழியாக கௌடாவை அடைவது விரும்பத்தக்கது. வங்காளதேச-இந்தியா எல்லையில் உள்ள சோனாமோஸ்ஜித் சோதனைச் சாவடி வழியாக கௌடாவை அணுகலாம். வங்காளதேசத்தின் சபாய் நவாப்கஞ்ச் மாவட்டத்தில் சோட்டோ சோனா பள்ளிவாசலுக்கு அருகில் சோதனைச் சாவடி அமைந்துள்ளது. [14]

சான்றுகள்

குறிப்புகள்

வெளி இணைப்புகள்

விக்கிமீடியா பொதுவகத்தில்,
கௌடா (நகரம்)
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
  • Gaur at Banglapedia
  • விக்கிச்செலவில் செலவு வழிகாட்டி: Gour-Pandua
  • விக்கிச்செலவில் செலவு வழிகாட்டி: Gaud
"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=கௌடா_(நகரம்)&oldid=3526284" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்