கோப்பேங் மக்களவைத் தொகுதி

கோப்பேங் மக்களவைத் தொகுதி (மலாய்: Kawasan Persekutuan Gopeng; ஆங்கிலம்: Gopeng Federal Constituency; சீனம்: 务边国会议席) என்பது மலேசியா, பேராக், கம்பார் மாவட்டம் (Kampar District); கிந்தா மாவட்டம் (Kinta District) ஆகிய இரு மாவட்டங்களில் அமைந்துள்ள ஒரு மக்களவைத் தொகுதி (P071) ஆகும்.[7]

கோப்பேங் (P071)
மலேசிய மக்களவைத் தொகுதி
பேராக்
Gopeng (P071)
Federal Constituency in Perak
பேராக் மாநிலத்தில்
கோப்பேங் மக்களவைத் தொகுதி

(P71 Gopeng)
மாவட்டம்கம்பார் மாவட்டம்
கிந்தா மாவட்டம்
பேராக்
வாக்காளர்களின் எண்ணிக்கை143,657 (2022)[1]
வாக்காளர் தொகுதிகோப்பேங் தொகுதி[2]
முக்கிய நகரங்கள்கோப்பேங், கம்பார், கோத்தா பாரு (பேராக்), மம்பாங் டி அவான், கோலா டிப்பாங், மாலிம் நாவார், லாவான் கூடா, சிம்பாங் பூலாய்
பரப்பளவு577 ச.கி.மீ[3]
முன்னாள் தொகுதி
உருவாக்கப்பட்ட காலம்1984
கட்சி பாக்காத்தான் அரப்பான்
மக்களவை உறுப்பினர்தான் கார் கிங்
(Tan Kar Hing)
மக்கள் தொகை216,236 (2020) [4]
முதல் தேர்தல்மலேசியப் பொதுத் தேர்தல், 1986
இறுதித் தேர்தல்மலேசியப் பொதுத் தேர்தல், 2022[5]




2022-இல் கோப்பேங் மக்களவைத் தொகுதியின் வாக்காளர்களின் இனப் பிரிவுகள்:[6]

  சீனர் (44.7%)
  மலாயர் (42.8%)
  இதர இனத்தவர் (2.9%)

கோப்பேங் மக்களவைத் தொகுதி 1984-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. இந்தத் தொகுதியில், முதன்முதலாக 1986-ஆம் ஆண்டில் மக்களவைப் பொதுத் தேர்தல் நடைபெற்றது. இறுதியாக, 2022-ஆம் ஆண்டில் நடைபெற்றது.

1986-ஆம் ஆண்டில் இருந்து கோப்பேங் மக்களவைத் தொகுதி, மலேசிய நாடாளுமன்றத்தின் மலேசிய மக்களவையில் பிரதிநிதிக்கப் படுகிறது.

கோப்பேங்

கோப்பேங் நகரம், பேராக், கம்பார் மாவட்டத்தில் உள்ள ஒரு நகர்ப்பகுதி. கோப்பேங் நகரத்திற்கு மிக அருகில் சிம்பாங் பூலாய் எனும் நகரம் உள்ளது. பேராக் மாநிலத்தில் முதன்முதலில் ஈயம் தோண்டி எடுக்கப்பட்ட நகரங்களில் கோப்பேங் நகரமும் ஒன்றாகும்.

1890-ஆம் ஆண்டு வரை கிந்தா பள்ளத்தாக்கில் கோப்பேங் ஒரு முன்னணி ஈயச் சுரங்க நகரமாக விளங்கியது. 1850-ஆம் ஆண்டுகளிலேயே மிகவும் புகழ் பெற்ற நகரமாக விளங்கியது.

கோப்பேங் தமிழர்கள்

1900-ஆம் ஆன்டுகளில் கோப்பேங் நகரத்தைச் சுற்றிலும் நிறைய ரப்பர் தோட்டங்கள் இருந்தன. தமிழர்களும் கணிசமான அளவில் இருந்தனர். அதே சமயத்தில் பிரித்தானியர்களுக்குச் சொந்தமான ஈயச் சுரங்கங்களிலும் தமிழர்கள் வேலை செய்தனர்.

பிரித்தானியர்கள் அந்தச் சுரங்கங்களை மூடியதும் தமிழர்கள் சொந்தமாகக் காய்கறிகளைப் பயிரிட்டனர். ஆடு மாடுகளை வளர்த்தனர். கோப்பேங்கில் லாவான் கூடா எனும் ஒரு தமிழர்ப் பகுதி உள்ளது. இங்கு கணிசமான அளவிற்கு தமிழர்கள் உள்ளனர். ஓரளவிற்கு வசதியாகவும் வாழ்கின்றனர்.

கோப்பேங் மக்களவைத் தொகுதி

கோப்பேங் மக்களவைத் தொகுதியின் உறுப்பினர்கள் (1959 - 2022)
மக்களவைதொகுதிஆண்டுகள்உறுப்பினர்கட்சி
1984-ஆம் ஆண்டில் கிந்தா தொகுதியில் இருந்து
கோப்பேங் தொகுதி உருவாக்கப்பட்டது
7-ஆவது மக்களவைP0641986–1987டான் கூன் சுவான்
(Tan Koon Swan)
பாரிசான் நேசனல்
(மலேசிய சீனர் சங்கம்)
1987–1990திங் சியூ பே
(Ting Chew Peh)
8-ஆவது மக்களவை1990–1995
9-ஆவது மக்களவைP0671995–1999
10-ஆவது மக்களவை1999–2004
11-ஆவது மக்களவைP0712004–2008
12-ஆவது மக்களவை2008–2013லீ பூன் சாய்
(Lee Boon Chy)
பாக்காத்தான் ராக்யாட்
(மக்கள் நீதிக் கட்சி)
13-ஆவது மக்களவை2013–2018
14-ஆவது மக்களவை2018–2022பாக்காத்தான் அரப்பான்
(மக்கள் நீதிக் கட்சி)
15-ஆவது மக்களவை2022–தற்போது வரையில்தான் கார் கிங்
(Tan Kar Hing)

கோப்பேங் மக்களவைத் தேர்தல் முடிவுகள் 2022

மலேசியப் பொதுத் தேர்தல் 2022
பொதுவாக்குகள்%∆%
பதிவு பெற்ற வாக்காளர்கள்
(Registered Electors)
143,657
வாக்களித்தவர்கள்
(Turnout)
105,00073.09% - 8.12%
செல்லுபடி வாக்குகள்
(Total Valid Votes)
103,638100.00%
கிடைக்காத அஞ்சல் வாக்குகள்
(Unreturned Ballots)
270
செல்லாத வாக்குகள்
(Total Rejected Ballots)
1,092
பெரும்பான்மை
(Majority)
27,14826.20% - 9.38
வெற்றி பெற்ற கட்சிபாக்காத்தான்
சான்றுகள்: மலேசிய தேர்தல் ஆணையம்
[8]

கோப்பேங் மக்களவை வேட்பாளர் விவரங்கள்

மலேசியப் பொதுத் தேர்தல் 2022
வேட்பாளர்கட்சிசெல்லுபடி
வாக்குகள்
பெற்ற
வாக்குகள்
%∆%
தான் கார் கிங்
(Tan Kar Hing)
பாக்காத்தான்103,63855,88053.92%- 7.83%
முகமது பர்கான் அப்துல் ரகீம்
(Muhammad Farhan Abdul Rahim)
பெரிக்காத்தான்-28,73227.72%+ 27.72%
திங் சாவோ சோங்
(Ting Zhao Song)
பாரிசான்-18,39317.75%- 6.41 %
பாலசந்திரன் கோபால்
(Balachandran Gopal)
வாரிசான்-6330.61%+ 0.61%

மேற்கோள்கள்

மேலும் காண்க

வெளி இணைப்புகள்

🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்