கோப்துக்கள்

கோப்த்துக்கள் (Copts) (காப்டிக்: ⲟⲩⲢⲉⲙ̀ⲛⲭⲏⲙⲓ ̀ⲛ̀Ⲭⲣⲏⲥⲧⲓ̀ⲁⲛⲟⲥ ou.Remenkīmi en.Ekhristianos; மிசிரி மொழி: اقباط, எகிப்தின் பழங்குடி கிறித்தவர்கள் ஆவர். நான்காம் நூற்றாண்டிலிருந்து ஆறாம் நூற்றாண்டு வரை எகிப்தை இசுலாமியர்கள் கைப்பற்றும்வரை ரோமானிய எகிப்தில் கிறித்தவம் பெரும்பான்மை சமயமாக திகழ்ந்தது.[12] தற்போதைய எகிப்தில் குறிப்பிடத்தக்க அளவிலான சிறுபான்மையினராக உள்ளனர். இவர்களது மொழியான காப்டிக் மொழி ரோமன் காலத்திய எகிப்தில் பேசப்பட்ட வழக்கிலிருந்து நேரடியாக பெறப்பட்டதாகும். 18ஆம் நூற்றாண்டிலிருந்து இம்மொழி அழிந்து வருவதுடன் சமயச்சடங்குகளில் மட்டுமே பயன்படுத்தப்பட்டு வருகிறது.

Copts
ⲚⲓⲢⲉⲙ̀ⲛⲭⲏⲙⲓ ̀ⲛ̀Ⲭⲣⲏⲥⲧⲓ̀ⲁⲛⲟⲥ
பின்பற்றுவோரின் மொத்த எண்ணிக்கை
கிட்டத்தட்ட 10 - 20 மில்லியன்
கோப்து எகிப்திய ஆண்கள்
[1]
பின்பற்றுவோர் கணிசமாக உள்ள இடங்கள்
 எகிப்து5 - 15 மில்லியன் வரையென கணிப்பிடப்பட்டுள்ளது[3]
 சூடான்கிட்டத்தட்ட 0.5 மில்லியன்
 ஐக்கிய அமெரிக்காகிட்டத்தட்ட 0.2 - 1 மில்லியன்[4][5][6][7][8]
 கனடாகிட்டத்தட்ட 0.2 மில்லியன்[1][9]
 ஆத்திரேலியாகிட்டத்தட்ட 75,000 (2003)[10][11]
சமயங்கள்
பெரும்பாண்மை: காப்டு பழைமவாத கிறித்தவம்.
சிறுபான்மை: காப்டு கத்தோலிக்கம்; பல புரட்டஸ்தாந்து சபைகள்
புனித நூல்கள்
விவிலியம்
மொழிகள்
எகிப்திய அரபு
பொது: காப்டிக் மொழி

மத்திய கிழக்கில் உள்ள மிகப்பெரும் கிறித்தவ சிறுபான்மை இனத்தவராக விளங்கும் இவர்கள் எகிப்தின் மக்கள்தொகையில் 10%ஆக உள்ளனர்.[13] இவர்கள் பெரும்பாலும் அலெக்சாண்டிரியாவின் காப்டிக் ஆர்தோடாக்ஸ் திருச்சபையைச் சேர்ந்தவர்கள்.[14] இதில் உறுப்பினரல்லாத 80,000 பேர்கள்) பிற காப்டிக் கத்தோலிக்க திருச்சபைகள் அல்லது காப்டிக் சீர்திருத்த திருச்சபைகளிடையே பிளவுபட்டுள்ளனர்.

எகிப்தில் சிறுபான்மையினராக உள்ள காரணத்தால் காப்ட் எகிப்தியர்கள் தற்கால எகிப்தில் பெருத்தளவு பாகுபாட்டிற்கும் வன்முறைசார் இசுலாமிய அடிப்படைவாதக் குழுக்களின் தாக்குதல்களுக்கும் உள்ளாகி வருகின்றனர்.[15]

மேற்கோள்கள்

உசாத்துணைகளும் மேல் விவரங்களுக்கும்

வெளியிணைப்புகள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=கோப்துக்கள்&oldid=3577083" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்