கோங் யூ

தென் கொரியா நடிகர்

கோங் யூ (ஆங்கில மொழி: Gong Yoo) (பிறப்பு: ஜூலை 10, 1979) ஒரு தென் கொரியா நாட்டு நடிகர் ஆவார். இவர் 2001ஆம் ஆண்டு முதல் பல சின்னத்திரை தொடர்களிலும் மற்றும் திரைப்படங்களிலும் நடித்து வருகின்றார். இவர் காபி பிரின்ஸ், பிக் போன்ற மிகவும் புகழ் பெற்ற தொடர்கள் ஆகும்.

கோங் யூ
பிறப்புகோங் ஜி-சுள்
சூலை 10, 1979 (1979-07-10) (அகவை 44)
புசான்
தென் கொரியா
கல்விக்யுங் ஹீ பல்கலைக்கழகம்
(அரங்கு)
பணிநடிகர்
செயற்பாட்டுக்
காலம்
2001-இன்று வரை

ஆரம்ப வாழ்க்கை

2001-2004

இவர் க்யுங் ஹீ பல்கலைக்கழகத்தில் கலைப்பட்டதாரி பட்டம் பெற்றார்.[1] 2000ஆம் ஆண்டு தனது முதல் வேலையாக எம்நெட் என்ற தொலைக்காட்சியில் காணொளி தொகுப்பாளராக பணிபுரிந்தார் அதை தொடர்ந்து 2001ஆம் ஆண்டு ஒளிபரப்பான ஸ்கூல் 4 என்ற தொடரில் நடிகராக அறிமுகமானார்.[2] 2000ஆம் ஆண்டு முதல் 2004ஆம் ஆண்டு காலப்பகுதியில் நாடக நடிகர், துணை நடிகர், இசை நிகழ்ச்சிகளில் தொகுப்பாளர் என பல துறைகளில் பணிபுரிந்தார்.

2005-2007

2005ஆம் ஆண்டு இவர் முதல் முதலில் காதநாயக்கான நடித்த தொடர் ஹலோ மை டீச்சர் ஆகும் இந்த தொடர் சியோல் ஒலிபரப்பு அமைப்பு என்ற தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. இந்த தொடரில் இவருக்கு ஜோடியாக நடிகை காங் ஹைஜின் நடித்து இருந்தார்.[3] இதை தொடர்ந்து 2006ஆம் ஆண்டு காதல் தொடரான ஒன் பைன் டே தொடரில் நடித்தார்.[4]

2007ஆம் ஆண்டு இவர் நடித்த நகைச்சுவை மற்றும் காதல் நிறைந்த காபி பிரின்ஸ் என்ற தொடர் மிகவும் வெற்றி பெற்றது, இந்த தொடருக்கு பிறகு இவர் மிகவும் புகழ் பெற்ற நடிகரானர்.[5][6] இந்த தொடர் தமிழ் மொழியில் மொழிமாற்றம் செய்யப்பட்டு புதுயுகம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது என்பது குறிப்பிடத்தக்கது.

2008–2015

இவர் சனவரி 14, 2008ஆம் ஆண்டு தனது தரைப்படை சேவைக்கு சேற்று டிசம்பர் 8, 2009 சேவை முடித்து மீண்டும் நடிப்புத்துறைக்கு வந்தார்.[7][8] இவர் தனது சேவையில் வானொலி தொகுப்பாளராக படைத்துறையில் பணியாற்றினார்.[9]

இவரின் மறுவருகையாக நடித்த திரைப்படம் பிண்டிங் மிஸ்டர்.டெஸ்டினி என்ற திரைப்படம் ஆகும்.[10][11] இந்த திரைப்படம் டிசம்பர் 9, 2010ஆம் ஆண்டு கொரியாவில் வெளியாக மிக பெரிய வெற்றி பெற்றது. இதை தொடர்ந்து பிக் என்ற நகைச்சுவை-காதல் தொடரில் நடித்தார்.[12] சைலென்சட், சஸ்பெக்ட் போன்ற திரைப்படங்களிலும் நடித்து இருந்தார்.

2016-இன்றுவரை

2016ஆம் ஆண்டு இவர் நடித்த திரைப்படம் அ மேன் அண்ட் அ வுமேன் என்ற படம் ஆகும்,[13][14] இந்த திரைப்படத்தை தொடர்ந்து டிரெயின் டு பூசன் என்ற சோம்பை திரைப்படத்தில் நடித்தார், இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றி அடைத்தது.[15] தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டு இந்தியாவில் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது. அதே ஆண்டில் கார்டியன்: லோன்லி அண்ட் கிரேட் கோட் என்ற தொடரில் கோல்பினாக நடித்தார். இந்த தொடரும் வெற்றி பெற்றது. இந்த தொடரில் நடித்ததாற்காக பல விருதுகளும் வென்றார்.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=கோங்_யூ&oldid=3865834" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்