கொம்புக் கள்ளி

தாவர இனம்

கொம்புக் கள்ளி (Euphorbia tirucalli, மேலும் பொதுவாக Indian tree spurge, naked lady, pencil tree, pencil cactus, fire stick, milk bush [2]) என்றும் அழைக்கப்படுகிறது) என்பது அரை வறண்ட வெப்பமண்டல காலநிலையில் வளரும் ஒரு மரமாகும். இது ஒரு ஹைட்ரோகார்பன் தாவரமாகும். இதன் பால் கண்ணில் பட்டால் தற்காலிக குருட்டுத்தன்மையை ஏற்படுத்தக்கூடிய நச்சுத்தன்மை வாய்ந்தது.[3]

கொம்புக் கள்ளி
மொசாம்பிக்கில் முதிர்ந்த மரம்
உயிரியல் வகைப்பாடு e
திணை:
உயிரிக்கிளை:
பூக்கும் தாவரம்
உயிரிக்கிளை:
மெய்இருவித்திலி
உயிரிக்கிளை:
ரோசிதுகள்
வரிசை:
குடும்பம்:
இனக்குழு:
Euphorbieae
பேரினம்:
Euphorbia
இனம்:
E. tirucalli
இருசொற் பெயரீடு
Euphorbia tirucalli
லி.[2]

விளக்கம்

அருகுகாட்சியில் மலர்

கொம்புக் கள்ளி என்பது புதர் அல்லது சிறிய மரமாகும். இது பென்சில்-தடிமனான, பச்சை நிற, மென்மையான, சதைப்பற்றுள்ள நுணிக் கிளைகளுடன் 7 மீட்டர் உயரம் வரை வளரும். இது 7 மிமீ தடிமன் கொண்ட உடையக்கூடிய சதைப்பற்றுள்ள கிளைகளுடன் உருளையான சதைப்பற்றுள்ள தண்டையும் கொண்டது. இதன் இலைகள் நீள்வட்டமாக இருக்கும். அவை 1 முதல் 2.5 செமீ நீளமும், சுமார் 3 முதல் 4 மிமீ அகலமும் கொண்டவை. இதன் பால், நச்சு மற்றும் அரிக்கும் தன்மைக் கொண்டது. கிளைகளின் முனைகளில் மஞ்சள் பூக்கள் பூக்கும்.[4]

வாழ்விடம்

இது ஆப்பிரிக்காவில் கருப்பு களிமணில் பரவலாக உள்ளது. இது முக்கியமாக வடகிழக்கு, நடு, தெற்கு ஆப்பிரிக்காவில் உள்ளது. இது கண்டத்தின் பிற பகுதிகளிலும், சுற்றியுள்ள சில தீவுகள் மற்றும் அரேபிய தீபகற்பத்திலும் பூர்வீகமாக இருக்கலாம். மேலும் பிரேசில், இந்தியா, வியட்நாம், பிலிப்பைன்ஸ், கானா போன்ற பல வெப்பமண்டல பகுதிகளுக்கு அறிமுகப்படுத்தப்பட்டது. இது வறண்ட பகுதிகளில், குறிப்பாக புன்னிலத்தில் வளரும்.[1] இது இலங்கை தமிழில் கள்ளி என்று அழைக்கப்படுகிறது. இலங்கைத் தமிழ்ப் புலவர் ஈழத்து பூதந்தேவனார் அகநானூறிலும், சிங்களத்தில் குறிப்பிட்டபடி වැරදි නවහන්දි, ගස් නවහන්දි இது வேரடி நவஹந்தி அல்லது வாயு நவஹந்தி என அழைக்கபடுகிறது.[5]

நச்சுயியல்

இதில் இருந்து வரும் பால் தோல் மற்றும் சளிச்சுரப்பியை மிகவும் எரிச்சலூட்டும் மற்றும் நச்சுத்தன்மையுடையது.[6] இதனால் தற்காலிக குருட்டுத்தன்மையை ஏற்படுத்தும். தோலில் பட்டால் கடுமையான எரிச்சல், சிவத்தல், எரியும் உணர்வை ஏற்படுத்தும். உட்கொண்டால், வாய், உதடுகள், நாக்கில் தீக்காயங்கள் போன்று ஏற்படலாம். தாவரத்தை கையாளும்போது கண்ணுக்கு பாதுகாப்பு சாதனங்கள், கையுறைகள் அணிய பரிந்துரைக்கப்படுகிறது.

பாரம்பரிய மருத்துவம்

கொம்புக் கள்ளி பல கலாச்சாரங்களில் மாற்று மருந்தாக பயன்படுத்தப்படுகிறது. பிரேசில், இந்தியா, இந்தோனேசியா, மலேசியா உள்ளிட்ட நாடுகளில் புற்றுநோய், வயிற்றுப்போக்கு, கட்டிகள், மருக்கள், ஆஸ்துமா, இருமல், காதுவலி, நரம்பு மண்டலம், வாத நோய், பல்வலி ஆகியவற்றுக்கு சிகிச்சையளிக்க இதைப் பயன்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.[7]

கொம்புக் கள்ளி ஒரு புற்றுநோய் எதிர்ப்பு பொருளாக முன்நிறுத்தப்படுகிறது. ஆனால் இது நோயெதிர்ப்பு மண்டலத்தை அடக்குகிறது, கட்டி வளர்ச்சியை ஊக்குவிக்கிறது மற்றும் சில வகையான புற்றுநோய்களின் வளர்ச்சிக்கு வழிவகுக்கிறது என்று ஆராய்வுகள் காட்டுகிறன்றன.[6] இது புர்கிட்டின் லிம்போமாவுடன் தொடர்புடையது மற்றும் இது நோயின் இணை காரணியாக கருதப்படுகிறது.[8]

பயன்கள்

இதன் பால் எரிபொருளாகவும் பயன்படுத்தப்படலாம். இதை வேதியியலாளர் மெல்வின் கால்வின் எண்ணெய் உற்பத்திக்காக பயன்படுத்த முன்மொழிந்தார். மற்ற பயிர்களை பயிரிடமுடியாத இடத்தில் கொம்புக்கல்லியின் வளரும் திறன் காரணமாக இந்தப் பயன்பாடு மிகவும் ஈர்க்கப்படுவதாக உள்ளது. ஒரு ஏக்கருக்கு 10 முதல் 50 பீப்பாய்கள் எண்ணெய் கிடைக்கும் என்று கால்வின் மதிப்பிட்டார். 1980 களில் பிரேசிலிய தேசிய பெட்ரோலிய நிறுவனமான பெட்ரோபிராசு இந்த யோசனைகளின் அடிப்படையில் சோதனைகளைத் தொடங்கியது.  இது ரப்பர் உற்பத்தியிலும் பயன்படுத்தப்பட்டது, ஆனால் இரண்டுமே வெற்றிபெறவில்லை.[1]

காட்சியகம்

குறிப்புகள்

வெளி இணைப்புகள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=கொம்புக்_கள்ளி&oldid=3929293" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்