கே. சோபா

கே. சோபா (Shobha Karandlaje), கர்நாடக அரசியல்வாதி. இவர் 1966-ஆம் ஆண்டின் அக்டோபர் 23-ஆம் நாளில் பிறந்தார். இவர் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்தவர். இவர் 2014-ஆம் ஆண்டில் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில், உடுப்பி-சிக்கமகளூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டார். தேர்தலில் வென்று, பதினாறாவது மக்களவையில் உறுப்பினர் ஆனார்.[2]இவர் மத்திய வேளாண்மை அமைச்சகத்தின் நடப்பு இணை அமைச்சராக உள்ளார்.[3] மார்ச் 2024-இல், சோபா 2024 பொதுத் தேர்தலில் பெங்களூரு வடக்கு தொகுதியின் பாஜக வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.[4]

கே. சோபா
2021-இல் சோபா
வேளாண்மை விவசாயி நலத்துறை அமைச்சர்
பதவியில் உள்ளார்
பதவியில்
7 சூலை 2021
குடியரசுத் தலைவர்ராம் நாத் கோவிந்த்
பிரதமர்நரேந்திர மோதி
அமைச்சர்நரேந்திர சிங் தோமர்
முன்னையவர்பர்சோத்தம் ரூபாலா
எரி சத்தி அமைச்சர்
கர்நாடக அரசு
பதவியில்
22 செப்டம்பர் 2010 – 23 சனவரி 2013
கர்நாடக முதலமைச்சர்பி. எஸ். எடியூரப்பா
டி. வி. சதானந்த கௌடா
செகதீசு செட்டர்
முன்னையவர்கே. எஸ். ஈஸ்வரப்பா
பின்னவர்டி. கே. சிவகுமார்
உணவு குடிமைப்பொருள் வழங்கல் துறை அமைச்சர்
கர்நாடக அரசு
பதவியில்
12 திசம்பர் 2010 – 12 சூலை 2012
கர்நாடக முதலமைச்சர்பி. எஸ். எடியூரப்பா
டி. வி. சதானந்த கௌடா
முன்னையவர்vவி. சோமண்ணா
பின்னவர்டி. என். ஜீவாராஜ்
கிராமப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சர்
கர்நாடக அரசு
பதவியில்
30 மே 2008 – 9 நவம்பர் 2009
கர்நாடக முதலமைச்சர்பி. எஸ். எடியூரப்பா
முன்னையவர்sஇ. எம். உதாசி
பின்னவர்செகதீசு செட்டர்
நாடாளுமன்ற உறுப்பினர்
மக்களவை (இந்தியா)
பதவியில் உள்ளார்
பதவியில்
2014
முன்னையவர்கெ. ஜெயப்பிரகாசு ஹெக்டே
தொகுதிஉடுப்பி-சிக்கமகளூர்
உறுப்பினர் கர்நாடக சட்டப் பேரவை
பதவியில்
2008–2013
முன்னையவர்தற்பொழுது இல்லை
பின்னவர்எசு. டி. சோமாசேகர்
தொகுதியசவந்தபுரா சட்டமன்றத் தொகுதி
உறுப்பினர் கர்நாடக சட்டப் பேரவை
பதவியில்
15 சூன் 2004 – 27 மே 2008
பின்னவர்எசு. கைலாசு
தொகுதிதேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு23 அக்டோபர் 1966 (1966-10-23) (அகவை 57)
புத்தூர், மைசூர் மாநிலம், இந்தியா
தேசியம்இந்தியர்
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி
(2012 வரை; 2014–முதல்)
பிற அரசியல்
தொடர்புகள்
கருநாடக சனதா கட்சி
(2012-2014)
கல்விமுதுகலை (சமூகவியல்), முதுநிலை சமூகப்பணி[1]
முன்னாள் கல்லூரிமங்களூர் பல்கலைக்கழகம்
புனைப்பெயர்சோபாக்கா
மூலம்: [1]

இளமை

கடலோர கர்நாடகாவில் உள்ள புத்தூரைச் சேர்ந்தவர்,[5] ஷோபா, ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்கத்தின் முழுநேரப் பணியாளர்களில் ஒருவர். ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்கத்துடன் சிறுவயதிலேயே இவர் இணைந்தார்.[6] சோபா அரசியலில் நுழைய முடிவு செய்தபோது, ​​ஆர். எஸ். எஸ். இவருக்கு ஆரம்ப உந்துதலைக் கொடுத்தது.[7]

சோபா மைசூரில் உள்ள திறந்த நிலைப் பல்கலைக்கழகத்தில் சமூகவியலில் முதுகலை பட்டமும் சமூகப் பணி முதுகலைப் பட்டத்தினை மங்களூர் பல்கலைக்கழகத்தின் சமூகப் பணி ரோஷ்னி நிலயா பள்ளியில் முடித்தார்.

அரசியல்

2004-இல் சோபா சட்ட மேலவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்படுவதற்கு முன்பு பாரதிய ஜனதா கட்சியில் பல்வேறு பதவிகளில் பணியாற்றியுள்ளார். மே 2008இல் பெங்களூரு யசுவந்த்பூர் சட்டமன்றத் தொகுதியிலிருந்து சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் பி. எஸ். எடியூரப்பா அரசாங்கத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் அமைச்சராக நியமிக்கப்பட்டார்.

ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் அமைச்சராக நியமிக்கப்பட்ட இவர்,[8] இவரின் செயல்பாடுகளுக்காகப் பாராட்டப்பட்டார்.[9] மேலும் ஒரு நல்ல நிர்வாகியாக அறியப்பட்டார். இவர் அரசியல் நெருக்கடி காரணமாக 2009-இல் பதவி விலக நேரிட்டது. ஆனால் மீண்டும் 2010-இல் பதவியில் அமர்த்தப்பட்டார். இம்முறை இவர் எரிசக்தி துறை அமைச்சரானார். இவர் ஜெகதீஷ் ஷெட்டர் அமைச்சகத்தில் மின்துறை அமைச்சராக இருந்தார்.[10] மேலும் உணவு மற்றும் குடிமைப் பொருள் வழங்கல் துறையின் கூடுதல் பொறுப்பையும் இவர் கவனித்தார்.

சோபா பாஜகவிலிருந்து விலகி 2012ஆம் ஆண்டு கர்நாடக முன்னாள் முதல்வர் பி. எஸ். எடியூரப்பாவால் உருவாக்கப்பட்ட கருநாடக சனதா கட்சியில் சேர்ந்தார்.[11] சோபா கருநாடக சனதா கட்சியின் செயல் தலைவராக நியமிக்கப்பட்டார்.[12][13] இவர் 2013 சட்டமன்றத் தேர்தலில் ராஜாஜி நகர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு மூன்றாவது இடத்தைப் பெற்றார்.[14] சனவரி 2014-இல், இவரது கட்சி பாஜகவுடன் இணைந்தது.

பின்னர் 2014ஆம் ஆண்டு நடைபெற்ற இந்தியப் பொதுத் தேர்தலில் உடுப்பி சிக்மகளூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு 1.81 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். 2019ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் இவர் தொடர்ந்து இரண்டாவது முறையாக 7,18,916 வாக்குகளைப் பெற்று,[15] உடுப்பி சிக்மகளூர் மக்களவைத் தொகுதி உறுப்பினர் ஆனார்.[16]

மேற்கோள்கள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=கே._சோபா&oldid=3996066" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்