கேத்ரீன் மேகர்

முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் விக்கிமீடியா அறக்கட்டளையின் நிர்வாக இயக்குநர்

கேத்ரீன் மேகர் (Katherine Maher) விக்கிமீடியா நிறுவனத்தின் (WMF) நிர்வாக இயக்குனர் ஆவார்.

கேத்ரீன் மேகர்
Katherine Maher
2016 இல் மேகர்
தேசியம்அமெரிக்கர்
படித்த கல்வி நிறுவனங்கள்நியுயார்க் பல்கலைக்கழகம்
பணிநிர்வாக இயக்குனர், விக்கிமீடியா நிறுவனம்
வலைத்தளம்
twitter.com/krmaher

கல்வி

2002 முதல் 2003 வரை கெய்ரோவில் உள்ள அமெரிக்க பல்கலைக்கழகத்தின் அரபு மொழி நிறுவனத்தில் கேத்ரீன் மேகர் கல்வி கற்றார். பின்னர் 2003 முதல் நியுயார்க் பல்கலைக்கழகத்தின் அறிவியல் மற்றும் கலைக் கல்லூரியில் படித்து 2005 ஆம் ஆண்டில் தன்னுடைய பட்டப்படிப்பை முடித்தார்[1].

வாழ்க்கை

2016 ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் முதல் விக்கிமீடியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனராக தற்காலிகமாக பணியமர்த்தப்பட்ட மேகர், இதே ஆண்டின் சூன் மாதம்[2] முதல் அதே பதவியில் நிரந்தம் செய்யப்பட்டார். 2014 ஆம் ஆண்டு ஏப்ரல்[2] மாதம் முதல் இந்நிறுவனத்தின் தகவல் தொடர்பு அதிகாரியாக இயங்கிவந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக இவர் உலக வங்கி, ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம் போன்ற அலுவலகங்களிலும் மற்றும் இலாப நோக்கற்ற ஆக்சசு நௌ.ஆர்க்[3] (AccessNow.org) என்ற நிறுவனத்தில் பரிந்துரை இயக்குனராகவும்[2][4][5] பணிபுரிந்துள்ளார்.

உலக வங்கியின் மக்களாட்சிமயமாக்கம் மற்றும் அனைத்துலக வளர்ச்சிக்கான தொழில்நுட்பப் பிரிவில் மேகர் ஓர் ஆலோசகராகப் பணியாற்றியுள்ளார். தகவல் தொடர்பு தொழில்நுட்பத் துறையில், அலைபேசித் தொழில்நுட்பத்துறையில் கவனம் செலுத்துபவராக, குறிப்பாக மத்திய கிழக்கு மற்றும் ஆப்பிரிக்க [6][7] குடிமக்களுக்காகவும் நிறுவனச் சீர்த்திருத்தத்திற்காகவும் பொறுப்பேற்று பணியாற்றியுள்ளார். தகவல் மற்றும் தொலைத்தொடர்பு அபிவிருத்தியில் அலைபேசிகளை அதிகப்படுத்துதல் தொடர்பாக உலக வங்கி வெளியிட்ட ’அரசு அலைபேசிகள் உருவாக்கல்’ என்ற படைப்பாக்கத்தில் (2012) இவர் ஓர் இணை ஆசிரியராக இருந்து செயல்பட்டுள்ளார்[8]

விக்கிமீடியா நிறுவனத்தில் முதன்மை தகவல் தொடர்பு அதிகாரியாக ஏப்ரல் 2014 இல்[2][9][10] இணைந்த மேகர், அங்கிருந்து ஐக்கியநாடுகளின் பதிப்புரிமை சட்டம்[11] குறித்து கருத்துரைத்தார். கிட்டத்தட்ட இரண்டாண்டுகளுக்குப் பின்னர், நிர்வாக இயக்குனராக பணியாற்றிய லீலா டிரெட்டிக்கோவ்[12] பதவி விலகியதைத் தொடர்ந்து, மார்ச்சு 2016[4] இல் நிறுவனத்தின் இடைக்கால நிர்வாக இயக்குநராக மேகர் நியமிக்கப்பட்டார். 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற விக்கிமேனியாவில் சூன் மாதம் 24-ம் தேதி அன்று விக்கிமீடியா நிறுவனத்தின் நிறுவனர் யிம்மி வேல்சு கேத்தரின் மேகருக்கு நிர்வாக இயக்குனருக்கான நிரந்தரப் பணியை வழங்கினார்[13].

மேற்கோள்கள்

புற இணைப்புகள்

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Katherine Maher
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=கேத்ரீன்_மேகர்&oldid=3715164" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்