கெர்த்தே

மலேசியா, திராங்கானு மாநிலத்தில் உள்ள ஒரு நகரம்

கெர்த்தே; (ஆங்கிலம்: Kerteh; மலாய்: Kerteh) என்பது மலேசியா, திராங்கானு மாநிலத்தில், கெமாமான் மாவட்டத்தில் உள்ள ஒரு நகரம் ஆகும். திராங்கானு மாநிலத்தின் தலைநகரான கோலா திராங்கானு மாநகரிலிருந்து 96 கி.மீ. தொலைவில் தென்திசையில் உள்ளது.

கெர்த்தே
நகரம்
Kerteh
கெர்த்தே பெட்ரோனாஸ் எண்ணெய்ச் சுத்திகரிப்பு நிலையம்
கெர்த்தே பெட்ரோனாஸ்
எண்ணெய்ச் சுத்திகரிப்பு நிலையம்
Map
கெர்த்தே is located in மலேசியா
கெர்த்தே
      கெர்த்தே
ஆள்கூறுகள்: 4°31′N 103°27′E / 4.517°N 103.450°E / 4.517; 103.450
நாடு மலேசியா
மாநிலம் திராங்கானு
மாவட்டம்கெமாமான் மாவட்டம்
மக்கள்தொகை
 (2015)
 • மொத்தம்66,545
நேர வலயம்மலேசிய நேரம் ஒ.ச.நே + 08:00
மலேசிய அஞ்சல் குறியீடு
24300
தொலைபேசி+60-4-35
போக்குவரத்துப் பதிவெண்கள்T
பெட்ரோனாஸ் எண்ணெய்ச் சுத்திகரிப்பு நிலையம்

கெர்த்தே நகரில்தான் கெர்த்தே வானூர்தி நிலையமும் உள்ளது. இந்த வானூர்தி நிலையம் பெட்ரோனாஸ் (Petronas) நிறுவனத்திற்குச் சொந்தமான தனியார் வானூர்தி நிலையம் ஆகும்.

தென் சீனக் கடலில் 100 - 200 கி.மீ. தொலைவில் உள்ள பல்வேறு எண்ணெய் தளங்களுக்கு, பெட்ரோனாஸ் நிறுவனப் பணியாளர்களையும்; எக்சான்மொபில் (ExxonMobil) பணியாளர்களையும்; வானூர்திகள் மூலமாக அனுப்பும் நோக்கத்திற்காக இந்த வானூர்தி நிலையம் உருவாக்கப்பட்டது.

பொது

கெர்த்தே ஒரு நகரம் மட்டும் அல்ல. அது ஒரு முக்கிம் ஆகும். அதாவது கெமாமான் மாவட்டத்தில் ஒரு துணைமாவட்டமாகும். கெர்த்தே முக்கிமில் சில கிராமங்கள் உள்ளன.

கிராமம் என்பது (மலாய் மொழியில்: Kg - Kampung; ஆங்கிலம்: Village).

  • கம்போங் லாபோகான் - Kg Labohan
  • கம்போங் தெங்கா - Kg Tengah
  • கம்போங் தெலாகா - Kg Telaga Papan
  • கம்போங் குளுகோர் - Kg Gelugor
  • கம்போங் கோலா ஒபிஸ் - Kg Kuala Opis
  • கம்போங் பாரு - Kg Baru
  • கம்போங் சாபாங் - Kg Chabang
  • கம்போங் பெங்காலான் ரங்கூன் - Kg Pengkalan Ranggon
  • கம்போங் புக்கிட் பகாங் - Kg Bukit Pahang
  • கம்போங் பத்து பூத்தே - Kg Batu Puteh
  • கம்போங் டாராட் கொலாம் - Kg Darat Kolam
  • கம்போங் மாட் ஈக்கால் - Kg Mat Ikal
  • கம்போங் லாமா - Kg Lama
  • கம்போங் ராசாவ் கெர்த்தே - Rasau Kerteh

தென் சீனக் கடலில் பெட்ரோலியம் எனும் 'கருப்பு தங்கம்' கண்டுபிடிக்கப்பட்ட பின்னர் கெர்த்தே பிரபலம் அடைந்தது. அதற்கு முன்னர் மற்ற கடற்கரைக் கிராமங்களைப் போல இதுவும் ஓர் அமைதியான கிராமமாகவே இருந்தது.

ஒளி நகரம்

பெட்ரோனாஸ் பெட்ரோலியத் தொழிற்சாலைகளில் இருந்து அதிக வெளிச்சம் வெளிப்படுவதால், சுற்றுலாப் பயணிகளிடையே "ஒளி நகரம்" என்றும் இந்த நகரம் அழைக்கப்படுகிறது. அண்மைய காலங்களில் கெர்த்தே நகரில் பல்வேறு வகையான வளர்ச்சித் திட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.[1]

அவற்றில் ஸ்ரீ கெர்த்தே நகரம்; கெர்த்தே விமான நிலையம்; பெட்ரோனாஸ் தொழில்துறை வளாகம்; கெர்த்தே துறைமுகம்; திராங்கானு எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம்; பெட்ரோனாஸ் வளாகம்; பெட்ரோனாஸ் வளாக பள்ளி; கெர்த்தே பேரங்காடி; கெத்தே மினி அரங்கம் என பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள்.[2]

மேற்கோள்கள்

மேலும் காண்க

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=கெர்த்தே&oldid=4034330" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்