கென்யிர் ஏரி

மலேசியா உலு திராங்கானு மாவட்டத்தில் அமைந்துள்ள ஓர் ஏரி

கென்யிர் ஏரி (மலாய்: Tasik Kenyir; ஆங்கிலம்: Kenyir Lake); என்பது மலேசியா, திராங்கானு மாநிலத்தில், உலு திராங்கானு மாவட்டத்தில் அமைந்துள்ள ஓர் ஏரியாகும். 340 சின்ன தீவுகளைக் கொண்ட கென்யிர் ஏரி, தென்கிழக்கு ஆசியாவிலேயே மிகப் பெரிய ஏரியாகக் கருதப் படுகிறது.[1] இந்த ஏரி மிகவும் ஆழமானது. சில இடங்களில் 800 மீட்டர் ஆழம் வரை இருக்கும்.

கென்யிர் ஏரி
அமைவிடம்உலு திராங்கானு, திராங்கானு, மலேசியா
ஆள்கூறுகள்5°00′N 102°48′E / 5.000°N 102.800°E / 5.000; 102.800
ஏரி வகைநீர்த்தேக்கம்
பூர்வீக பெயர்Kenyir Lake Error {{native name checker}}: parameter value is malformed (help)
வடிநில நாடுகள்மலேசியா
மேற்பரப்பளவு2,600 km2 (1,000 sq mi)
அதிகபட்ச ஆழம்476 அடிகள் (145 m)
Islands340

1985-ஆம் ஆண்டில் கென்யிர் ஆற்றில், கென்யிர் அணை (Kenyir Dam) உருவாக்கப்பட்டது. சுல்தான் மகமூத் மின் நிலையத்தில் (Sultan Mahmud Power Station) மின்சாரம் உற்பத்தி செய்வதற்காக அந்த அணை கட்டப்பட்டது. கென்யிர் அணை கட்டப் பட்டதால் ஒரு நீர்த்தேக்கம் உருவாகி அதுவே ஓர் ஏரியானது. இதன் பரப்பளவு 260,000 ஹெக்டேர்.[2]

பொது

இந்த ஏரி தென்கிழக்கு ஆசியாவிலேயே மனிதனால் உருவாக்கப்பட்ட மிகப்பெரிய ஏரியாகும். இந்த ஏரி ஒரு நீர்த் தேக்கமாக இருப்பதால் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் நீர்மட்டம் அதிகமாக இருக்கும்.

செயற்கை ஏரியாக இருந்தாலும், இப்பகுதி சுற்றுச்சூழல் சுற்றுலாவுக்காக உருவாக்கப்பட்டுள்ளது. அதன் கரையை சுற்றி பல ஓய்வு விடுதிகள் உள்ளன. மீன்பிடித்தல் பொதுவான பொழுதுபோக்கு. உள்ளூர்வாசிகளின் கூற்றுப்படி, ஆகத்து மாதத்தில் நீர் மட்டம் குறைவாக இருப்பதால் மீன் பிடிக்க சிறந்த பருவமாகக் கருதப் படுகிறது.

தாவரங்கள் - விலங்கினங்கள்

கென்யிர் ஏரி பல வகையான நன்னீர் மீன்கள் மற்றும் அரிய வகை வனவிலங்குகளின் தாயகமாகவும் உள்ளது. 38,000 ஹெக்டேர் நீர் பிடிப்பு பரப்பளவைக் கொண்ட இந்த ஏரி இயற்கையாகவே நன்னீர் மீன்களின் புகலிடமாக உள்ளது.

ஏரியில் சுமார் 300 வகையான நன்னீர் மீன்கள் இருப்பதாக சமீபத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. ஏரியைச் சுற்றிலும் மக்கி அழுகிய மரங்கள் இருக்கின்றன. அவை இந்த மீன்களுக்கு இனப்பெருக்கம் செய்யும் புகலிடங்களாக விளங்குகின்றன.

மீன்வளத் துறை ஆய்வு

மீன்வளத் துறையால் நடத்தப்பட்ட ஆய்வுகளில் இருந்து; 'பெரிய லம்பம்' (Lampam Sungai) மீன்கள்; கெலா மீன்கள்; 'தோமான்' எனும் பாம்புத் தலை மீன்கள் (Snakehead); 'தப்பா' மீன்கள் (Wallagonia); 'காவான்' மீன்கள்; 'காலுய்' மீன்கள் (Giant Gouramy) மற்றும் 'கெலிசா' (Kelisa Green Arowana) போன்ற மீன்கள் மக்கிய மரங்களைச் சுற்றி இருப்பது தெரிய வந்துள்ளது.

கென்யிர் ஏரியைச் சுற்றியுள்ள காடுகளில் ஆசிய யானைகள் மற்றும் மலேசியப் புலிகள் போன்ற அழிந்து வரும் உயிரினங்களும் உள்ளன.

சுற்றுலா

கென்யிர் ஏரி ஒரு செயற்கை ஏரியாக இருந்தாலும், சூழல் சுற்றுலா பொருத்த வரையில் சிறப்புத் தன்மை கொண்டுள்ளது. ஏரியின் கரையில் பல ஓய்வு விடுதிகள் உள்ளன. இங்கு மீன்பிடித்தல் பிரபலம். நிறைய நீர்வீழ்ச்சிகள் மற்றும் குகைகளும் உள்ளன.[3]

காட்சியகம்

மேற்கோள்கள்

மேலும் காண்க

மலேசிய ஏரிகளின் பட்டியல்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=கென்யிர்_ஏரி&oldid=3748187" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்