கூடி வாழ்ந்தால் கோடி நன்மை

கூடி வாழ்ந்தால் கோடி நன்மை என்பது 1959 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். வி. எல். நரசு தயாரித்து, டி. எஸ். ராஜகோபாலன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எஸ். எஸ். ராஜேந்திரன், பிரேம்நசீர் மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[3]

கூடி வாழ்ந்தால் கோடி நன்மை
இயக்கம்டி. எஸ். ராஜகோபாலன்
தயாரிப்புவி. எல். நரசு
நரசு ஸ்டூடியோஸ்
இசைடி. சலபதி ராவ்
நடிப்புஎஸ். எஸ். ராஜேந்திரன்
பிரேம்நசீர்
வி. கே. ராமசாமி
எஸ். வி. சுப்பைய்யா
டி. பாலசுப்பிரமணியம்
பி. சரோஜாதேவி
கிரிஜா
சி. கே. சரஸ்வதி
லட்சுமி
விநியோகம்சம்பா டாக்கிஸ் டிஸ்ட்ரிபியூட்டர்ஸ்[1]
வெளியீடுபெப்ரவரி 14, 1959[2]
ஓட்டம்.
நீளம்16896 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்

கதை

பல்வேறு மொழி, பல பின்னணிகளில் உள்ளவர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்களைக் கொண்டு படத்தின் கதை பின்னப்பட்டுள்ளது. நாயகன் ஒரு தமிழர். வேலைக்காக மதராஸ் வரும்போது, தங்குமிடம் கிடைக்காமல் சிரமப்படுகிறார். மலையாளியான ஒருவர் அவருக்கு வாடகைக்கு அறையைத் தர மறுக்கிறார். வாடகை மகிழுந்துக்காக அலையும் போது நாயகன் நாயகியைச் சந்திக்கிறார். அவர்கள் ஒருவரையொருவர் காதலிக்கிறார்கள். கதை சிக்கலானது, ஆனால் ஒற்றுமையே அனைவருக்கும் நன்மை பயக்கும் என்பதை பார்வையாளர்களுக்குக் கற்பிப்பதன் வழியாக இறுதியில் சுபமாக கதை முடிகிறது.

நடிப்பு

பிலிம் நியூஸ் ஆனந்தனின் தரவுத் தளத்தில் இருந்தும்,[2] தி இந்து நாளிதழின் விமர்சனக் கட்டுரையில் இருந்தும் தகவல்கள் ஒன்று திரட்டபட்டுள்ளன.[3]

தயாரிப்பு

இந்தப் படத்தை நரசு ஸ்டுடியோஸ் என்ற பதாகையில் வி. எல். நரசு தயாரித்தார். படமானது அதே பெயரிலான அவரது படப்பிடிப்பு வளாகத்தில் படமாக்கப்பட்டது. இருப்பினும், அவரது மரணத்திற்குப் பிறகே படம் வெளியானது. எனவே இது அவரது நினைவாக அர்ப்பணிக்கப்பட்டது. டி. எஸ். ராஜகோபால் இப்படத்தை இயக்க, துறையூர் மூர்த்தி திரைக்கதை உரையாடலை எழுதினார். ஒளிப்பதிவு வி. குமாரதேவன். கலை இயக்குனர் வசந்த் பியாங்கர். கே. என். தண்டாயுதபாணி பிள்ளையும், ஜெயராமனும் நடன இயக்கத்தை மேற்கொண்டனர். ஒளிப்படல்களை கண்ணப்பன் எடுத்தார்.

பாடல்

டி. சலபதி ராவ் இசையமைக்க, பாடல் வரிகளை தஞ்சை இராமையாதாஸ் எழுதினார்.[4]

எண்.பாடல்பாடகர்/கள்நீளம்
1"ஜெய ஜெய ஜெய பாரதி"குழு பாடல்
2"நாட்டு வளப்பம் அரியா"டி. எம். சௌந்தரராஜன்
3"என் உள்ளத்தையே கொள்ளைக் கொண்ட"03:37
4"மன ஊஞ்சலிலே ஆடும் மன்னா"
5"பதுமை தானோ, பாயும்"பி. பி. ஸ்ரீனிவாஸ்02:45
6"மாதா பிதாவின் மனம் குளிர"
7"ஒண்ணு வேணுமா இல்லே ரெண்டு வேணுமா"எஸ். ஜானகி03:35
8"மச்சான் உன்னைத்தானே"

வெளியீடும் வரவேற்பும்

கூடி வாழ்தல் கோடி நன்மை 1959 பிப்ரவரி 14 அன்று வெளியானது.[5] 1958 ஆம் ஆண்டு தீபாவளி வெளியாக இருந்த படம் தாமதமாக வெளியானது.[6] திரைப்பட வரலாற்றாசிரியர் ராண்டார் கையின் கூற்றுப்படி, இது "யூகிக்கக்கூடிய கதைக்களம் காரணமாக" சராசரி வெற்றி பெற்றதாக இருந்தது என்றார்.[3]

மேற்கோள்கள்

🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்