கூகிள் உதவியாளர்

கூகிள் உதவியாளர் என்பது கூகிள் நிறுவனத்தால் வெயிடப்பட்ட ஒரு மென்பொருள் ஆகும். கூகிள் இதனை மே 2016 ஆம் ஆண்டில் அறிவித்தது.

கூகிள் உதவியாளர்
உருவாக்குனர்கூகிள்
தொடக்க வெளியீடு2016
இயக்கு முறைமைஆண்ராய்டு இயங்குதளம்
கிடைக்கும் மொழிஆங்கிலம், இந்தி , சப்பானிம், எசுப்பானியம், பிரஞ்சு [1] கனடா [2] அரபு, பெங்காலி, சீனம் (எளிமைப்படுத்தப்பட்ட), சீனம் (பாரம்பரிய), டேனிஷ், டச்சு, ஜெர்மன், குஜராத்தி, இந்தி, இந்தோனேசியம், இத்தாலியன், கொரியம், நோர்வேயம், போலந்தியம், போர்த்துகீசியம், உருசியம், ஸ்வீடிஷ், தமிழ், தெலுங்கு, தாய், துருக்கியம், வியட்நாமி
உருவாக்க நிலைActive
மென்பொருள் வகைமைIntelligent personal assistant

வரலாறு

இதனை கூகிள் மேம்பாட்டாளர் மாநாடு மே 18,2016 ஆம் ஆண்டில் வெளியிட்டார். கூகிள்ஹோம், அல்லோ எனும் செய்தி தொடர்பு மென்பொருட்களையும் அந்தச் சமயத்தில் கூகிள் தலைமை நிர்வாக அதிகாரி திரு.சுந்தர் பிச்சை அவர்கள் இந்த இரு-வழி கூகிள் உதவியாளரினை அறிமுகம் செய்தார்.[3].பின்னர், கூகிள் டூடுலின் தலைவரான ரியான் ஜெர்ம்கிங், கூகிள் முன்னாள் அனிமேட்டர் எம்மா கோட்ஸை போன்றோர் அதனை மேம்படுத்தினர்.[4]தொடக்கத்தில் அல்லோ, கூகிள் ஹோம் போன்றவற்றிற்கு மட்டும் இதனை பயன்படுத்தும் வகையில் பிக்சல் செல்லிடத் தொலைபேசியில் மட்டும் அறிமுகம் செய்யப்பட்டது.[5].பின் 2017 ஆம் ஆண்டில் ஆண்ட்ராய்டு இயங்குதளம் மார்ஷ்மல்லோ,நொளகட் போன்றவற்றில் செயல்படும் வகையில் மாற்றி அமைக்கப்பட்டது.[6][7] ஆண்ட்ராய்டு வியர் 2.0 என கூறப்படும் கடிகார மென்பொருளில் இதனை பயன்படுத்தலாம்.[8].இது ஆண்ட்ராய்டு தொலைக்காட்சி[9] மற்றும் அண்ட்ராய்டு ஆட்டோ இன் எதிர்கால பதிப்புகளில் சேர்க்கப்படும்.[10]

தொடர்பு

கூகிள் அசிஸ்டண்ட் என்பது கூகிள் நவ் போன்று தகவல்களைப் பெற முடியும், வானிலை போன்ற விவரங்களியும் பெற இயலும். ஆனாலும் இதில் இரு-வழி மூலம் தகவல்களைப்பெற முடியும் என்பது சிறப்பு. அட்டை வடிவமைப்பில் தேடல் முடிவுகள் வழங்கப்படுவதால் எளிமையாக உபயோகப்படுத்த முடியும்.[11]கூகிள் உதவியாளர் ஒரு ஷாப்பிங் பட்டியலை பராமரிக்க முடியும். ஆனால் இந்த அம்சமானது ஏப்ரல் 2017 ஆம் ஆண்டில் கூகிள் எக்ஸ்பிரஸ் மற்றும் கூகிள் ஹோம் பயன்பாட்டிற்கு மாற்றப்பட்டது, இதன் விளைவாக கூகிள் பெருத்த நட்டம் அடந்தது எனவே இந்த அம்சத்தினை கூகிள் உதவியாளரிடம் தக்கவைத்தது.[12][13]

வசதிகள்

கூகிள் அசிஸ்டண்ட் உதவியுடன் ஒரு பயனர் கூகிள் தேடு பொறியில் தேடலாம். ஒரு இசைக்கோப்பை இசத்து 'இது எந்த பாடல்' என வினவ முடியும். அருகில் உள்ள சுற்றுலா தளங்கள், உணவகங்கள் ஆகிய அனைத்து தகவல்களையும் பெற முடியும். தேடல் தொடர்பான சிறு சிறு உரையாடல்களையும் நிகழ்த்தலாம். கூகிள் அசிஸ்டண்ட் எட்டு குரல்களில் தற்போது உள்ளது.

வரவேற்பு

கணிப்பொறி உலகத்தின் மார்க் ஹச்மேன் அவர்கள் கூகிள் அசிஸ்டண்ட்ஸின் பலன்களை உலகிற்கு எடுத்துரைத்தார், மேலும் இது "கார்டனா மற்றும் சிரி போன்றவற்றிற்கு சிறந்த போட்டியாக அமையும் என கூறினார்[14].

இவற்றையும் காண்க

சான்றுகள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=கூகிள்_உதவியாளர்&oldid=3743279" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்