குவியமில்லா அமைப்பு

குவியமில்லா அமைப்பு (Afocal system) என்பது ஒளியியல் அடிப்படையில் ஒளியை முழுமையாகக் குவிக்கவோ அல்லது ஒரு புள்ளியிலிருந்து விரிக்கவோ இயலாத ஒரு அமைப்பாகும். அதாவது குறிப்பிட்ட குவிய துாரம் என்பது இவ்வமைப்பில் இல்லை.[1]

குவியமில்லா அமைப்பில் ஒளியின் பாதை வரைபடம்.

இவ்வமைப்பு ஒரு இணை ஒளியியல் சாதனங்களால் உருவாக்கப்படுகிறது. அவற்றின் நீளம் இரண்டு ஒளியியல் சாதனங்களின் குவிய துாரங்களின் கூடுதலுக்குச் சமம் (d = f1+f2).

எடுத்துக்காட்டாக நட்சத்திரங்களைக் காண உதவும் தொலைநோக்கிகளில் குவியமில்லா அமைப்பு பயன்படுகிறது. இதில் பொருளும் வெகு தொலைவில் உள்ளது, பிம்பமும் வெகு தொலைவில் உருவாகிறது (அதாவது ஒளி இணை கற்றை ஆக்கப்படுகிறது).[2]

இவ்வமைப்பில் இணை கற்றையின் விரிகை மாற்றப்படுவதில்லை. ஆனால் உருப்பெருக்கத்தை மாற்றுவதன் மூலம் அதன் அகலம் மாற்றப்படுகிறது. அப்படிப்பட்ட தொலைநோக்கியின் உருப்பெருக்கம்:

குவியமில்லா அமைப்புகள் சீரொளி (லேசர்), அகச் சிவப்பு கதிர்கள் அமைப்பு, நிழற்படக் கருவி மற்றும் தொலைநோக்கி ஆகியவற்றில் ஒளிக்கற்றைகளைச் சீர்செய்ய உதவுகிறது.[3] நிழற்படக் கருவியும் தொலைநோக்கியும் இணைந்து உருவாக்கும் நிழற்படக் கலை குவியமில்லா நிழற்படக் கலை எனப்படுகிறது.

மேலும் பார்க்க

மேற்கோள்கள்

🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்