குவாலியர் மாவட்டம்

மத்தியப் பிரதேசத்தில் உள்ள மாவட்டம்

குவாலியர் மாவட்டம் (Gwalior district) (இந்தி: ग्वालियर जिला) மத்திய இந்தியாவின் மத்தியப் பிரதேச மாநிலத்தின் ஐம்பத்து ஒன்று மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிட நகரம் குவாலியர் ஆகும். இம் மாவட்டம் குவாலியர் கோட்டத்தில் அமைந்துள்ளது.

குவாலியர் மாவட்டம்
ग्वालियर जिला
குவாலியர்மாவட்டத்தின் இடஅமைவு மத்தியப் பிரதேசம்
மாநிலம்மத்தியப் பிரதேசம், இந்தியா
நிர்வாக பிரிவுகள்குவாலியர் கோட்டம்
தலைமையகம்குவாலியர்
பரப்பு4,560 km2 (1,760 sq mi)
மக்கட்தொகை2,032,036 (2011)
மக்கள்தொகை அடர்த்தி446/km2 (1,160/sq mi)
நகர்ப்புற மக்கட்தொகை62.69%
படிப்பறிவு76.65
பாலின விகிதம்864
வட்டங்கள்3
மக்களவைத்தொகுதிகள்1
சட்டமன்ற உறுப்பினர் எண்ணிக்கை6
அதிகாரப்பூர்வ இணையத்தளம்

மாவட்ட எல்லைகள்

குவாலியர் மாவட்டத்தின் வடக்கில் முரைனா மாவட்டம், வடகிழக்கில் பிண்டு மாவட்டம், கிழக்கில் ததியா மாவட்டம், தெற்கில் சிவபுரி மாவட்டம் மற்றும் மேற்கில் சியோப்பூர் மாவட்டம் எல்லைகளாக கொண்டுள்ளது.

நகரங்கள்

இம்மாவட்ட்ட்தில் குவாலியர் பெருநகர மாநகராட்சியும், அந்தாரி, பித்தர்வார், பிலௌவா, தோப்ரா, மொரார், லஸ்கர், பிச்சோர் மற்றும் தெக்கன்பூர் போன்ற நகரங்களை கொண்டுள்ளது.

மாவட்ட நிர்வாகம்

குவாலியர் மாவட்டம் குவாலியர், பித்தர்வார் மற்றும் தாப்ரா என மூன்று வருவாய் வட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது.

அரசியல்

குவாலியர் மாவட்டத்தில் குவாலியர் கிராமப்புறம், குவாலியர், குவாலியர் கிழக்கு, குவாலியர் தெற்கு, பித்தர்வார் மற்றும் தாப்ரா என ஆறு மத்தியப் பிரதேச சட்டமன்ற தொகுதிகளையும்; சிவபுரி மாவட்டத்தின் சில சட்டமன்ற தொகுதிகளுடன் குவாலியர் நாடாளுமன்ற மக்களவைத் தொகுதி உள்ளது.

மக்கள் தொகையியல்

2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி குவாலியர் மாவட்டத்தின் மொத்த மக்கள் தொகை 2,032,036 ஆக உள்ளது. கிராமப்புறங்களில் 37.31% மக்களும்; நகரப்புறங்களில் 62.69% மக்களும் வாழ்கின்றனர். கடந்த பத்தாண்டுகளில் (2001-2011) மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் 24.50% ஆக உயர்ந்துள்ளது. மக்கள் தொகையில் 1,090,327 ஆண்களும் மற்றும் 941,709 பெண்களும் உள்ளனர். பாலின விகிதம் ஆயிரம் ஆண்களுக்கு 864 பெண்கள் வீதம் உள்ளனர். 4,560 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இம்மாவட்டத்தின் மக்கள் தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் 446 மக்கள் வாழ்கின்றனர். இம்மாவட்டத்தின் சராசரி படிப்பறிவு 76.65% ஆகவும், ஆண்களின் படிப்பறிவு 84.70% ஆகவும், பெண்களின் படிப்பறிவு 67.38% ஆகவும் உள்ளது. ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 261,418 ஆக உள்ளது. [1]

சமயம்

இம்மாவட்டத்தில் இந்து சமயத்தவரின் மக்கள் தொகை 1,835,299 (90.32 %) ஆகவும், இசுலாமிய சமய மக்கள் தொகை 141,735 (6.98 %) ஆகவும், கிறித்தவ சமயத்தினரின் மக்கள் தொகை 4,119 (0.20 %) ஆகவும், , சீக்கிய சமய மக்கள் தொகை 24,790 (1.22 %) ஆகவும், சமண சமய மக்கள் தொகை 18,058 (0.89 %) ஆகவும், பௌத்த சமய மக்கள் தொகை 4,361 (0.21 %) ஆகவும், பிற சமய மக்களின் தொகை 217 (0.01 %) ஆகவும், மற்றும் சமயம் குறிப்பிடாதவர்கள் மக்கள் தொகை 3,457 (0.17 %) ஆகவும் உள்ளது.

மொழிகள்

மத்தியப் பிரதேச மாநிலத்தின் ஆட்சி மொழியான இந்தி மொழியுடன், உருது மற்றும் வட்டார மொழிகளும் இம்மாவட்டத்தில் பேசப்படுகிறது.

போக்குவரத்து

தொடருந்து

குவாலியர் தொடருந்து நிலையம், இந்தியாவின் அனைத்து நகரங்களையும் இருப்புப்பாதை மூலம் இணைக்கிறது.[2]

விமானம்

குவாலியர் விமான நிலையம் நாட்டின் முக்கிய நகரங்களை வானூர்திகள் மூலம் இணக்கிறது.[3]

சாலைகள்

ஆக்ரா - மும்பையை இணக்கும் தேசிய நெடுஞ்சாலை 3 குவாலியர் வழியாக செல்கிறது. மேலும் குவாலியர் - ஒரிசாவை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை எண் 75 மத்தியப் பிரதேச மாநிலத்தின் பல மாவட்டங்களை கடந்து செல்கிறது.

இதனையும் காண்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்


"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=குவாலியர்_மாவட்டம்&oldid=3369300" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்