குலாம் ஆசன் மிர்

இந்திய அரசியல்வாதி

குலாம் ஆசன் மிர் (Ghulam Hassan Mir) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார்.[2] சம்மு மற்றும் காசுமீர் மாநில அரசியலில் இவர் சம்மு காசுமீர் அப்னி கட்சியின் உறுப்பினராகச் செயல்பட்டார்.[3] சம்மு காசுமீர் மக்கள் சனநாயகக் கட்சியின் நிறுவன உறுப்பினராகவும் இருந்தார். 2002 ஆம் ஆண்டில் சம்மு காசுமீர் மக்கள் சனநாயகக் கட்சியின் வேட்பாளராக சம்மு மற்றும் காசுமீர் சட்டப் பேரவையின் குல்மார்க் தொகுதிக்கு சட்டப் பேரவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். குலாம் முகமது சா தலைமையிலான அமைச்சரவையில் இவர் சட்ட அமைச்சராக இருந்தார். முப்தி முகமது சயீத் தலைமையிலான அமைச்சரவையில் 2002 ஆம் ஆண்டு முதல் 2006 ஆம் ஆண்டு வரை சுற்றுலாத்துறை அமைச்சராக இருந்தார்.[4][5][6] அலிகார் முசுலீம் பல்கலைக்கழகத்தில் இவர் சட்டப் பாடத்தில் இளநிலை பட்டம் பெற்றுள்ளார்.

குலாம் ஆசன் மிர்
Ghulam Hassan Mir
சம்மு காசுமீர் அரசு அமைச்சர்
பதவியில்
1984-1986, 2002-2006, 2008-2014
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1950-01-01)1 சனவரி 1950
அரி வாட்டினோ, தாங்மார்க், பாரமுல்லா மாவட்டம், சம்மு காசுமீர் மாநிலம்
அரசியல் கட்சிசம்மு காசுமீர் அப்னி கட்சி[1]

மேற்கோள்கள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=குலாம்_ஆசன்_மிர்&oldid=3847766" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்