குரிகிராம் மாவட்டம்

வங்காளதேசத்தின் ரங்க்பூர் கோட்டத்திலுள்ள மாவட்டம்

குரிகிராம் மாவட்டம் (Kurigram District) (வங்காள மொழி: কুড়িগ্রাম) தெற்காசியாவின் வங்காளதேச நாட்டின் அறுபத்தி நான்கு மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டம் ரங்க்பூர் கோட்டத்தில் உள்ளது. வங்காளதேசத்தில் வடக்கில் அமைந்த இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் குரிகிராம் நகரம் ஆகும்.[1]

வங்காளதேசத்தில் குரிகிராம் மாவட்டத்தின் அமைவிடம்

மாவட்ட எல்லைகள்

வங்காளதேசத்தின் வடக்கில் அமைந்த, 2245.04 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட குரிகிராம் மாவட்டத்தின் வடக்கில் இந்தியாவின் கூச் பெகர் மாவட்டம், தெற்கில் காய்பாந்தா மாவட்டம், கிழக்கில் இந்தியாவின் அசாம் மாநிலம், மேற்கில் லால்முனிகாட் மாவட்டம் மற்றும் ரங்க்பூர் மாவட்டங்கள் எல்லைகளாக அமைந்துள்ளது.

மாவட்ட நிர்வாகம்

2245.04 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட குரிகிராம் மாவட்டத்தை நிர்வாக வசதிக்காக ஒன்பது துணை மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அவைகள்: குரிகிராம் சதர், உலிப்பூர், சில்மரி, நாகேஷ்வர், விருங்காமரி, சார்-ரஜிப்பூர், ரௌமரி, ராஜர்காட் மற்றும் புல்பாரி ஆகும். இம்மாவட்டம் உலிப்பூர், நாகேஷ்வரி, மற்றுஇம் குரிகிராம் என மூன்று நகராட்சி மன்றங்களையும், 72 கிராமப் பஞ்சாயத்து ஒன்றியங்களையும், 1872 கிராமங்களையும் கொண்டுள்ளது. மேலும் இம்மாவட்டத்தில் நான்கு நாடாளுமன்றத் தொகுதிகள் உள்ளது. . இம்மாவட்ட [[அஞ்சல் சுட்டு எண் 5600 ஆகும்.

ஆறுகள்

குரிகிராம் நகரத்தில் தார்லா ஆற்றின் காட்சி.

இம்மாவட்டத்தில் ஜமுனா ஆறு, பிரம்மபுத்திரா ஆறு, தார்லா ஆறு, டீஸ்டா ஆறு, கங்காதர் போன்ற ஆறுகள் பாய்வதால் இம்மாவட்டம் நீர் வளம் மற்றும் மண் வளம் மிக்கதாக உள்ளது. [2]

வேளாண்மை

இம்மாவட்டத்தில் நெல், சணல், வெற்றிலை, பாக்கு, நிலக்கடலை, கோதுமை, கரும்பு, மிளகாய், மூங்கில், காய்கறிகள் பயிரிடப்படுகிறது. [3]

தட்ப வெப்பம்

இம்மாவட்டத்தின் அதிகபட்ச வெப்பம் 30–35° செல்சியஸ் ஆகவும், குறைந்தபட்ச வெப்பம் 2° செல்சியஸ் ஆக உள்ளது. சராசரி ஆண்டு மழைப் பொழிவு 3000 மில்லி மீட்டராக உள்ளது.

மக்கள் தொகையியல்

2245.04 சதுர கிலோ மீட்டர் பரப்பு கொண்ட இம்மாவட்டத்தின் 2011-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி (இறுதி முடிவு அறிவிக்கப்படவில்லை) மக்கள் தொகை 20,69,273 ஆக உள்ளது. அதில் ஆண்கள் 10,10,442 ஆகவும், பெண்கள் 10,58,831 ஆகவும் உள்ளனர். பாலின விகிதம் 95 ஆண்களுக்கு 100 பெண்கள் வீதம் உள்ளனர். மக்கள் தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் 922 நபர்கள் வீதம் வாழ்கின்றனர். சராசரி எழுத்தறிவு 42.5% ஆக உள்ளது.[4]இம்மாவட்டத்தின் பெரும்பாலான மக்கள் இசுலாமிய சமயத்தைப் பின்பற்றுபவர்களாகவும், வங்காள மொழியைப் பேசுபவர்களாகவும் உள்ளனர்.

கல்வி

வங்காளதேசத்தின் பிற மாவட்டங்களைப் போன்று, இம்மாவட்டத்திலும் நான்கு படிகள் கொண்ட கல்வி அமைப்புகள் உள்ளது. அவைகள்: ஐந்தாண்டு படிப்புகள் கொண்ட தொடக்கப்பள்ளிகளும் [தரம் 1 – 5], ஐந்தாண்டு படிப்புகள் கொண்ட இடைநிலைக் கல்வியும், [தரம் 6 – 10], இரண்டாண்டு படிப்பு கொண்ட மேனிலைப்பள்ளிகளும் [தரம் 11 – 12], நான்கு ஆண்டு படிப்பு கொண்ட இளநிலை பட்டப்படிப்பு மற்றும் ஒராண்டு கால முதுநிலை பட்டப்படிப்பு கொண்ட பல்கலைக்கழகங்களும், கல்லூரிகளும் உள்ளது. வங்காள மொழியுடன், ஆங்கில மொழியும் பள்ளி மற்றும் கல்லூரிகளில் கற்பிக்கப்படுகிறது.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்