குடம்பி

குடம்பி அல்லது இளம் உயிரி அல்லது தோற்றுவளரி (Larva) எனப்படுவது பல விலங்குகளின் வாழ்க்கை வட்டத்தில், அவை முட்டையிலிருந்து தமது முதிர்நிலைக்கு உருமாற்றம் அடைவதற்கு முன்னரான இளம்பருவ விருத்தி நிலைகளில் ஒன்றாகும். இலத்தீன் மொழியில் Larva என்பது பிசாசு எனப் பொருள்படும். நேரடியான வளர்ச்சி மூலம் முதிர்நிலையை அடையாத பூச்சி, நீர்நில வாழ்வன, மற்றும் Cnidaria தொகுதியைச் சேர்ந்த உயிரினங்களில் இத்தகைய வளர்நிலையைக் காணலாம்.

பட்டாம்பூச்சி ஒன்றின் குடம்பி நிலை

இந்த குடம்பி நிலையானது, முதிர்நிலையிலிருந்து முற்றாக வேறுபட்டுக் காணப்படும் (எ.கா. முதிர்நிலை பட்டாம்பூச்சிகளும், அவற்றின் குடம்பி நிலைகளான கம்பளிப்புழுக்களும்). குடம்பிகளின் அமைப்பும், உடல் உறுப்புக்களும், முதிர்நிலையில் இருந்து மிகவும் வேறுபட்டிருக்கும். குடம்பியின் உணவும் முதிர்நிலையின் உணவிலிருந்து வேறுபட்டிருக்கும். அத்துடன் பொதுவாக குடம்பிகள் வாழும் சூழலும் முதிர்நிலை வாழும் சூழலில் இருந்து வேறுபட்டிருக்கும்.

பூச்சிகளில், குடம்பி நிலையிலிருந்து, முதிர்நிலைக்கு விருத்தியடைய முன்னர், உருமாற்றம் மூலம் கூட்டுப்புழு என்னும் ஒரு இடை விருத்தி நிலையும் உருவாகும். அந்த கூட்டுப்புழுவின் வெளி உறையை குடம்பியே உருவாக்கும்.

மேற்கோள்கள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=குடம்பி&oldid=3200693" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்