குக்குடேசுவரர் கோவில்

வார்ப்புரு:Use Indian English

குக்குடேசுவரர் கோவில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:ஆந்திர பிரதேசம்
மாவட்டம்:கிழக்கு கோதாவரி
அமைவு:பிதாபுரம்
ஆள்கூறுகள்:17°06′24.46″N 82°14′36″E / 17.1067944°N 82.24333°E / 17.1067944; 82.24333
கோயில் தகவல்கள்

குக்குடேசுவரர் கோவில் என்பது இந்தியாவின் ஆந்திரப் பிரதேசத்தின் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள பிதாபுரம் நகரில் உள்ள ஒரு இந்து சமய கோவிலாகும். சைவ மற்றும் சாக்த இந்து சமய மரபுகள் இரண்டிலும் இக்கோவில் முதன்மையானதாகத் திகழ்கிறது. இது பதினெட்டு மகா சக்தி பீடங்களுள் ஒன்றாகும். [1] கோவிலின் மூலவர் குக்குடேஸ்வரர். இங்கு சிவபெருமான் ஒரு சேவல் வடிவில் அவரது மனைவி ராஜராஜேஸ்வரி தேவியுடன் இக்கோவிலில் குடிகொண்டுள்ளார். [2]

மகா சக்தி பீடங்களில் ஒன்றான புருகுத்திகா தேவியின் கோவில், குக்குடேசுவரர் கோவில் வளாகத்தில் உள்ளது. கந்த புராணத்திலும், ஸ்ரீநாதரின் பீமேசுவர புராணத்திலும், சமுத்திரகுப்தரின் அலகாபாத் கல் தூண் கல்வெட்டிலும் இந்த பிதாபுரம் குறிப்பிடப்பட்டுள்ளது. [3]

அமைவிடம்

காக்கிநாடாவிலிருந்து, 16 கி.மீ. (9.9 மை) தொலைவிலும், ராஜமுந்திரியிலிருந்து 65 கிமீ (40 மை) தொலைவிலும் விசாகப்பட்டினத்திலிருந்து 140 கிமீ (87 மை) தொலைவிலும் .இக்கோவில் அமைந்துள்ளது.

கோவில்

குகுடேசுவரர் சுவாமி ஸ்படிக லிங்கத்துடன் சுயம்புவாக கருவறையில் எழுந்தருளியிருக்கிறார். இந்தக் கோவில் இங்குள்ள ஒற்றைக்கல் நந்திக்கும் (தெலுங்கில் ஏக சிலா நந்தி ) புகழ் பெற்றது.

திருவிழாக்கள்

மகா சிவராத்திரி, நவராத்திரி, கார்த்திகை மாத விழா ஆகியன இக்கோவிலில் கொண்டாடப்படும் முக்கிய திருவிழாக்கள் ஆகும். குக்குடேசுவரர் கோவிலில் ஆண்டுதோறும் மகாபகுள ஏகாதசி என்ற பெயரில் திருவிழா கொண்டாடப்படுகிறது.

மேற்கோள்கள்

🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்