குகேஷ்

இந்திய சதுரங்கப் பேராதன்

தொம்மராஜு குகேஷ் (Dommaraju Gukesh, பிறப்பு: 29 மே 2006) இந்திய சதுரங்கப் பேராதன் ஆவார். சதுரங்க மேதையான இவர், பேராதன் (கிராண்ட்மாஸ்டர்) பட்டத்திற்குத் தகுதி பெற்ற வரலாற்றில் மூன்றாவது-இளையவரும், 2700 என்ற சதுரங்க மதிப்பீட்டை எட்டிய மூன்றாவது-இளையவரும், 2750 மதிப்பீட்டை எட்டிய முதலாவது இளையவரும் ஆவார். குகேசு 2024 வேட்பாளர் போட்டியில் வென்று, உலக சதுரங்க வாகையாளர் பட்டத்திற்காகப் போட்டியிடும் இளைய போட்டியாளர் ஆனார்.[1]

குகேஷ் தொம்மராஜு
Gukesh Dommaraju
2024 வேட்பாளர் சுற்றுப் போட்டியில் குகேசு
முழுப் பெயர்தொம்மராஜு குகேஷ்
நாடுஇந்தியா
பிறப்பு29 மே 2006 (2006-05-29) (அகவை 18)
சென்னை, தமிழ்நாடு, இந்தியா
பட்டம்கிராண்ட்மாசுட்டர் (2019)
பிடே தரவுகோள்2614 (திசம்பர் 2021)
உச்சத் தரவுகோள்2758 (செப்டெம்பர் 2023)
உச்சத் தரவரிசைNo. 8 (செப்டெம்பர் 2023)
பதக்கத் தகவல்கள்

வாழ்க்கைக் குறிப்பு

குகேசு Gukesh சென்னையில் 2006 மே 29 அன்று பிறந்தார். இவரது குடும்பம் ஆந்திரப் பிரதேசம், கோதாவரி வடிநிலப் பகுதியைச் சேர்ந்தவர்கள் ஆவர். தந்தை ரஜனிகாந்த் ஒரு காது, மூக்கு, தொண்டை அறுவை சிகிச்சை நிபுணரும், தாயார் பத்மா ஒரு நுண்ணுயிரியலாளரும் ஆவர்.[2] குகேசு தனது ஏழு வயதில் சதுரங்கம் விளையாடக் கற்றுக்கொண்டார்.[3] சென்னை மேல் அயனம்பாக்கம் வேலம்மாள் வித்தியாலயத்தில் படிக்கிறார்.[4]

சதுரங்க வாழ்க்கை

2015-2019

குகேசு 2015 இல் 9-அகவைக்குட்பட்டோருக்கான ஆசியப் பள்ளிகளின் சதுரங்க வாகைப் போட்டியில் வென்றார்,[5] 2018 இல் 12 அகவைக்குட்பட்டோருக்கான உலக இளையோர் சதுரங்க வாகையை வென்றார்.[6] அத்துடன் 2018 ஆசிய இளையோர் வாகைப் போட்டிகளில், 12-இற்குட்பட்டோருக்கான தனிநபர் மின்வல்லு, விரைவுவல்லு, தனிநபர் மரபு வல்லு வடிவங்களில் ஐந்து தங்கப் பதக்கங்களையும் வென்றார்.[7] மார்ச் 2018 இல் 34-ஆவது கேப்பல்-லா-கிராண்டே திறந்த சுற்று பன்னாட்டு மாசுட்டர் பட்டத்திற்கான தேவைகளை நிறைவு செய்தார்.[8]

குகேசு 2019 சனவரி 15 அன்று 12 ஆண்டுகள், 7 மாதங்கள், 17 நாட்களில் வரலாற்றில் இரண்டாவது இளைய சதுரங்கப் பேராதன் ஆனார்.[9]

2021

2021 சூனில், யூலியசு பேயர் சேலஞ்சர்சு சுற்றில், 19 இல் 14 புள்ளிகளைப் பெற்று வெற்றி பெற்றார்.[10]

2022

ஆகத்து 2022 இல், குகேசு 44 ஆவது சதுரங்க ஒலிம்பியாடு போட்டியை 8/8 என்ற நேர்த்தியான மதிப்பெண்களுடன் தொடங்கினார், 8-ஆவது போட்டியில் இந்தியா-2 அணியை தரவரிசையில் நம்பர் 1 ஆன அமெரிக்காவைத் தோற்கடிக்க உதவினார். குகேசு 11 க்கு 9 மதிப்பெண்களுடன் முடித்து, 1-ஆவது பலகையில் தங்கப் பதக்கத்தைப் பெற்றார்.

செப்டெம்பர் 2022 இல், குகேசு முதற்தடவையாக 2700 என்ற தரவுகோளைத் (2726) தாண்டி,[11] இது வெய் யி, அலிரெசா பிரூஜா ஆகியோருக்குப் பிறகு 2700 தரவுகோளைக் கடந்த மூன்றாவது இளைய வீரராக ஆனார்.

அக்டோபர் 2022 இல், ஏம்செஸ் விரைவு வல்லுப் போட்டியில் உலக வாகையாளரான மாக்னசு மேக்னஸ் கார்ல்சனை வீழ்த்திய இளைய வீரர் ஆனார்.[12]

2023

பெப்ரவரி 2023 இல், குகேசு தியூசல்டார்ஃபில் நடந்த WR மாசுட்டர்சு போட்டியின் முதல் பதிப்பில் பங்கேற்று, 5½/9 புள்ளிகளுடன், லெவன் அரோனியன், இயன் நெப்போம்னியாச்சியுடன் முதல் இடத்தைப் பிடித்தார். சமன்முறியில் அரோனியனுக்கு அடுத்தபடியாக குகேசு வந்தார்.

ஆகத்து 2023 தரவரிசைப் பட்டியலில், குகேசு 2750 மதிப்பீட்டை எட்டிய இளம் வீரர் ஆனார்.[13]

குகேசு சதுரங்க உலகக் கோப்பை 2023 சுற்றில் பங்கேற்று, மாக்னசு கார்ல்சனிடம் தோல்வியடைவதற்கு முன்னர் காலிறுதிக்கு வந்தார்.[14]

செப்டம்பர் 2023 தரவரிசைப் பட்டியலில், குகேசு அதிகாரப்பூர்வமாக விசுவநாதன் ஆனந்தைமுந்தி முதலிடத்தில் உள்ள இந்திய வீரராக இருந்தார்.[15][16]

திசம்பர் 2023 இல், 2023 பிடே சர்க்கியூட் சுற்றின் முடிவில் குகேசு 2024 உலக வாகையாளருக்கான வேட்பாளர் போட்டிக்குத் தகுதி பெற்றார்.[17] குகேசு சர்க்யூட்டில் இரண்டாவது இடத்தைப் பிடித்தார், ஆனால் வெற்றியாளரான பாபியானோ கருவானா ஏற்கனவே 2023 உலகக் கோப்பையின் மூலம் வேட்பாளர் போட்டிக்குத் தகுதி பெற்றிருந்தார்.[18] குகேசு பாபி ஃபிஷர், மாக்னசு கார்ல்சன் ஆகியோருக்குப் பிறகு, வேட்பாளர் போட்டியில் விளையாடிய மூன்றாவது இளைய வீரர் ஆனார்.[19][20]

2024

2024 வேட்பாளர் சுற்றில் "குகேசு எதிர் பிரூசா".

சனவரி 2024 இல், குகேஷ் 2024 டாட்டா ஸ்டீல் சதுரங்கப் போட்டியில் பங்கேற்று, 13 ஆட்டங்களில் (6 வெற்றி, 5 டிரா, 2 தோல்வி) 8.5 புள்ளிகளைப் பெற்று 4-வது இடத்தைப் பிடித்தார். 12-ஆவது சுற்றில், ர. பிரக்ஞானந்தாவுக்கு எதிராக வெற்றிபெறும் நிலையைப் பெற்றார், ஆனால் மூன்று முறை மீண்டும் மீண்டும் தவறு செய்தார். சமன்முறிகளில் குகேசு அரையிறுதியில் அனிஷ் கிரியைத் தோற்கடித்தார், ஆனால் இறுதிப் போட்டியில் வெய் யியிடம் தோற்றார்.[21]

2024 வேட்பாளர் சுற்று

2024 ஏப்ரலில், குகேசு கனடா, தொராண்டோவில் நடைபெற்ற 2024 உலக வாகையாளருக்கான வேட்பாளர் சுற்றில் பங்கேற்றார்.[22] குகேஷ், சக நாட்டு வீரர்களான ரமேஷ்பாபு பிரக்ஞானந்தா, விதித் குசராத்தி ஆகியோருக்கு எதிராகக் கறுப்புக் காய்களுடனும், அலிரேசா பிரூச்சாவுடன் வெள்ளைக் காய்களுடனும், நிசாத் அபாசோவுடன் வெள்ளைக் காய்களுடனும் விளையாடி வெற்றி பெற்றார்.[23] பிரூச்சாவுடன் கறுப்புக் காய்களுடன் விளையாடியதே அவரது ஒரே இழப்பு. இது அவருக்கு 5 வெற்றிகள், 1 தோல்வி, 8 சமன்களைக் கொடுத்து, 9/14 என்ற மதிப்பெண்ணுடன், சுற்றை வென்றார். இதன் மூலம், 2024 நவம்பரில் நடக்கும் உலக வாகையாளர் போட்டியில் நடப்பு வாகையாளர் திங் லிரேனுடன் மோதுவதற்குத் தகுதி பெற்றுள்ளார். உலக சதுரங்க வாகையாளர் போட்டியில் விளையாடும் இளைய வீரர் இவர் ஆவார்.[1]

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=குகேஷ்&oldid=3938409" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்