கிளானா ஜெயா வழித்தடம்

கிளானா ஜெயா வழித்தடம் அல்லது கிளானா ஜெயா இலகு விரைவு தொடருந்து வழித்தடம் (ஆங்கிலம்: LRT Kelana Jaya Line அல்லது Kelana Jaya Komuter Line; மலாய்: Laluan Kelana Jaya அல்லது LRT Laluan Kelana Jaya) என்பது மலேசியா கிள்ளான் பள்ளத்தாக்கு பகுதியில் அமைந்துள்ள ஓர் இலகு விரைவு தொடருந்து வழித்தடம் (Light Rapid Transit Line) (LRT) ஆகும். இந்த வழித்தடம் மலேசியாவில் முதல் முழு தானியங்கி மற்றும் ஓட்டுநர் இல்லாத தொடருந்து அமைப்பைக் கொண்டதாகும்.[1]


கிளானா ஜெயா வழித்தடம்
Kelana Jaya Line
பொம்பார்டியர் இனோவியா ART 200 ரக தொடருந்து (இடதுபுறம்); இனோவியா மெட்ரோ 300 தொடருந்து (வலதுபுறம்)
கண்ணோட்டம்
உரிமையாளர் பிரசரானா மலேசியா
வழித்தட எண் (சிவப்புக்கல்)
வட்டாரம்கிள்ளான் பள்ளத்தாக்கு
முனையங்கள்
  •  KJ1  கோம்பாக்
  •  KJ37  புத்ரா
நிலையங்கள்37
இணையதளம்myrapid.com.my
சேவை
வகைநடுத்தர திறன் கொண்ட தொடருந்து அமைப்பு
அமைப்பு ரேபிட் கேஎல்
செய்குநர்(கள்)ரேபிட் தொடருந்து
பணிமனை(கள்)சுபாங் கிடங்ககம்
சுழலிருப்புபொம்பார்டியர் இனோவியா ART 200 ரக தொடருந்து & மெட்ரோ 300
266 வண்டிகள்
அகலம்: 2.65 மீட்டர்
நீளம்: 67.1 மீ & 33.7 மீ
பயணிப்போர்94.658 மில்லியன் (2019)
வரலாறு
திறக்கப்பட்டதுகட்டம் 1: கிளானா ஜெயா - பசார் செனி
1 செப்டம்பர் 1998
கட்டம் 2: கோம்பாக்
1 சூன் 1999
கடைசி நீட்டிப்புகிளானா ஜெயா - புத்ரா
30 சூன் 2016
தொழில்நுட்பம்
வழித்தட நீளம்46.4 km (28.8 mi)
குணம்பெரும்பாலும் உயர்த்தப்பட்ட நிலையங்கள்
மேற்பரப்பு நிலையங்கள்: செரி ரம்பாய்
நிலத்தடி நிலையங்கள்: அம்பாங் பார்க் - மஸ்ஜித் ஜமெயிக்
தட அளவி1,435 mm (4 ft 8 1⁄2 in)
மின்மயமாக்கல்750 V DC
இயக்க வேகம்80 km/h (50 mph)
சமிக்ஞை செய்தல்Cityflo 650 CBTC
Map
Location of Kelana Jaya LRT line

இந்த வழித்தடம் மலேசியாவின் கோலாலம்பூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள கிள்ளான் பள்ளத்தாக்கு பகுதியில் அமல்படுத்தப்பட்ட ஒருங்கிணைந்த போக்குவரத்து அமைப்பின் (Klang Valley Integrated Transit System) ஒரு பகுதியாகும். இந்த வழித்தடத்தில் 37 நிலையங்கள் உள்ளன. 46.4 கிமீ நீளமுள்ள பாதையில் பெரும்பாலும் நிலத்தடி மற்றும் உயரமான மேம்பால அடுக்குகளில் எல்ஆர்டி நிலையங்கள் இயங்குகின்றன.

பொது

முன்பு இந்த வழித்தடம் புத்ரா எல்ஆர்டி (PUTRA LRT) என அழைக்கப்பட்டது. இது ரேபிட் கேஎல் அமைப்பின் ஒரு பகுதியாக, பிரசரானா மலேசியாவின் துணை நிறுவனமான ரேபிட் ரெயில் நிறுவனத்தின் மூலம் இயக்கப்படுகிறது. இந்த வழித்தடத்திற்கு அதன் முன்னாள் முனையமான கிளானா ஜெயா நிலையத்தின் பெயர் வைக்கப்பட்டு உள்ளது. அதிகாரப்பூர்வமான போக்குவரத்து வரைபடங்களில் வழித்தடம் 5; வழித்தடத்தின் நிறம் சிகப்புக்கல் என பொறிக்கப்பட்டு உள்ளது.

15 பிப்ரவரி 1994-இல் கிளானா ஜெயா வழித்தடத்தின் கட்டுமானம் தொடங்கியது. அதே தொடக்கத்தில் இருந்து இறுதி வரையிலான முழுப் பயணத்திற்கும் மொத்தம் ஒரு மணி நேரம் 25 நிமிடங்கள் பிடிக்கும்; மற்றும் இந்தப் பயணம் 37 நிலையங்களை உள்ளடக்கியது.[1]

கட்டுமானங்கள்

அஜாமா கார்ப்பரேசன் (Hazama Corporation) மற்றும் உண்டாய் பொறியியல் கட்டுமான நிறுவனத்தால் (Hyundai Engineering & Construction) சுரங்கப்பாதைகள் உருவாக்கப்பட்டன. முதல் கட்டமாக செப்டம்பர் 1, 1998-இல் சுபாங் கிடங்ககம் மற்றும் பாசார் செனி நிலையத்திற்கு இடையே கட்டுமானங்கள் தொடங்கின.[2]

இரண்டாம் கட்டமாக, ஜூன் 1, 1999-இல் பாசார் செனி நிலையத்தில் இருந்து முதல் புத்ரா நிலையம் வரை (Terminal Putra), கட்டுமானங்கள் தொடங்கின.[3]

புதிய நிலையங்கள்

2002-ஆம் ஆண்டில், இந்த வழித்தடத்தில் 150 மில்லியன் பயணிகள், சராசரியாக ஒவ்வொரு நாளும் 250,000 பயணிகள் பயணித்தனர். தேசிய நிகழ்ச்சிகளின் போது ஒரு நாளைக்கு 350,000-க்கும் அதிகமானோர் பயணித்தனர்.[4][5]

2010-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்து 2016-ஆம் ஆண்டு வரை இந்த வழித்தடத்தில் 17 கிமீ (10.6 மைல்) நீட்டிப்புகள் செய்யப்பட்டன. 13 புதிய நிலையங்கள் சேர்க்கப்பட்டன. புதிய முனையம் தற்போது புத்ரா அயிட்ஸ் (Putra Heights) என்ற இடத்தில் உள்ளது. இந்த இடத்தில் கிளானா ஜெயா வழித்தடம் செரி பெட்டாலிங் வழித்தடத்துடன் (Sri Petaling Line) இணைகிறது.[6]

காட்சியகம்

மேற்கோள்கள்

மேலும் காண்க

வெளி இணைப்புகள்

🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்