கி. துரைராஜசிங்கம்

(கிருஷ்ணபிள்ளை துரைராஜசிங்கம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

கிருஷ்ணபிள்ளை துரைராஜசிங்கம் ('Krishnapillai Thurairajasingam, பிறப்பு: 28 சூலை 1956)[1] இலங்கைத் தமிழ் வழக்கறிஞரும், அரசியல்வாதியும், மாகாண அமைச்சரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார்.

கி. துரைராஜசிங்கம்
கிழக்கு மாகாண சபை விவசாய கால்நடை கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர்
பதவியில் உள்ளார்
பதவியில்
3 மார்ச் 2015
மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில்
1994–2000
மட்டக்களப்பு மாவட்ட கிழக்கு மாகாணசபை உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியில்
2012
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு28 சூலை 1956 (1956-07-28) (அகவை 67)
தேசியம்இலங்கைத் தமிழர்
அரசியல் கட்சிஇலங்கைத் தமிழரசுக் கட்சி
பிற அரசியல்
தொடர்புகள்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு
வாழிடம்மட்டக்களப்பு
தொழில்வழக்கறிஞர்

அரசியலில்

வழக்கறிஞராகப் பணி புரியும் துரைராஜசிங்கம்[2][3] 1994 நாடாளுமன்றத் தேர்தலில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் வேட்பாளராக மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்று நாடாளுமன்றம் சென்றார்.[4] பின்னர் 2012 மாகாண சபைத் தேர்தல்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளராக மட்டக்களப்பு மாவட்டத்தில் பீட்டியிட்டு கிழக்கு மாகாண சபை உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டார்.[5][6][7][8]

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளராக இருந்த மாவை சேனாதிராஜா அக்கட்சியின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதை அடுத்து 2014 செப்டம்பரில் கட்சியின் பொதுச் செயலாளராக துரைராஜசிங்கம் நியமிக்கப்பட்டார்.[9][10] 2015 அரசுத்தலைவர் தேர்தலை அடுத்து கிழக்கு மாகாண சபையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. சிறுபான்மைக் கட்சியான சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசுக்கு ஆதரவளிக்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முடிவு செய்ததை அடுத்து, அங்கு புதிய அர்சு பதவியேற்றது.[11][12][13] துரைராஜசிங்கம் கிழக்கு மாகாணத்தின் விவசாய கால்நடை கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சராக மாகாண ஆளுநர் ஒஸ்டின் பெர்னாண்டோ முன்னிலையில் 2015 மார்ச் 3 இல் பதவியேற்றார்.[14][15]

மேற்கோள்கள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=கி._துரைராஜசிங்கம்&oldid=3549546" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்