கிருஷ்ணசாமி சுப்பிரமணியன்

கிருஷ்ணசாமி சுப்பிரமணியன் (Krishnaswamy Subrahmanyam) (19 சனவரி 1929 – 2 பிப்ரவரி 2011), முன்னாள் இந்தியக் குடிமைப் பணி அதிகாரியும், பன்னாட்டு போர்த்திறன் நடவடிக்கைகள் தொடர்பான வல்லுநரும், இதழியலாளரும் ஆவார்.[1][2][3]

கிருஷ்ணசாமி சுப்ரமணியன்
கே. சுப்பிரமணியன்
பிறப்பு19 சனவரி 1929
திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு
இறப்பு2 பிப்ரவரி 2011
இருப்பிடம்புதுதில்லி
தேசியம்இந்தியர்
கல்விமாநிலக் கல்லூரி, சென்னை
இலண்டன் பொருளியல் பள்ளி
பணிபோர்த்திறன் சார்ந்த பகுப்பாளர்
வாழ்க்கைத்
துணை
சுலோச்சனா
பிள்ளைகள்விஜய், சுப்பிரமணியம் செயசங்கர், சஞ்சய் சுப்ரமணியம்

இந்தியப் பாதுகாப்புத் துறை நடவடிக்கைளில் இவரது நீண்டகால பங்களிப்பு அளப்பரியது.மேலும் இவர் பன்னாட்டு போர்த்திறன் பகுப்பாய்வு திறன் மிக்கவராகவும், இந்தியாவின் அணுசக்தித் துறையின் கொள்கைகளில் சிறப்பான முடிவு எடுப்பவராகவும் அறியப்படுகிறார்.[4][5][6] இந்தியாவின் பாதுகாப்பு கொள்கைகள் மற்றும் பகுப்பாய்வு நிறுவனத்தின் [7] இரண்டாவது இயக்குநராக பணியாற்றியவர்.

இவர் 2007-இல் இந்திய - அமெரிக்க குடிமை அணுசக்தி ஒப்பந்ததம் ஏற்பட முக்கிய பங்காற்றியவர்.[8][9]

குடும்பம்

இவரது மகன்களில் இரண்டாமவரான சுப்பிரமணியம் செயசங்கர், இந்தியக் குடிமைப் பணி அதிகாரியாகவும், இறுதியில் அமெரிக்கா தூதராகவும் பின்னர் சனவரி 2015-இல் இந்திய வெளியுறவுத் துறை செயலாளாராகவும் பணியாற்றியவர்.[10] 30 மே 2019 அன்று இரண்டாம் முறையாக பிரதமர் பதவியேற்ற நரேந்திர மோடியின் அமைச்சரவையில் கேபினெட் [தெளிவுபடுத்துக]அமைச்சராக நியமிக்கப்பட்டார்.[11]

இவரது மூன்றாம் மகனான சஞ்சய் சுப்ரமணியம், இந்தியவியல் அறிஞர். இவர் தற்போது அமெரிக்காவின் தேசிய நூலகத்தில் உள்ள ஜான் க்ளுஜ் மையத்தின் தலைவராக உள்ளார்.

மேற்கோள்கள்

மேலும் படிக்க

வெளி இணைப்புகள்

🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்