கிருஷ்ணகுமார் குன்னத்

தமிழ்த் திரைப்படப் பின்னணிப் பாடகர்

கிருஷ்ணகுமார் குன்னத் (Krishnakumar Kunnath; 23 ஆகத்து 1968 – 31 மே 2022) என அறியப்படும் இவர் பொதுவாக கேகே என்றும் அறியப்படுகிறார். இந்தியாவைச் சேர்ந்த பாடகரான இவர் இந்தி, தெலுங்கு, தமிழ், கன்னடம் மற்றும் மலையாளம் மொழிப் பாடல்களைப் பாடியுள்ளார்.[1] இவர் பின்னணி இசைப் பாடகராகவும், பாப் மற்றும் ராக் இசைப் பாடகராகவும் அறியப்படுகிறார்.

கேகே
கிருஷ்ணகுமார் குன்னத்
பிறப்புகிருஷ்ணகுமார் குன்னத்
(1968-08-23)23 ஆகத்து 1968
தில்லி, இந்தியா
இறப்பு31 மே 2022(2022-05-31) (அகவை 53)
கொல்கத்தா, மேற்கு வங்கம், இந்தியா
படித்த கல்வி நிறுவனங்கள்கிரோரி மால் கல்லூரி, தில்லி பல்கலைக்கழகம்
பணிபாடகர்
செயற்பாட்டுக்
காலம்
1994–2022
வாழ்க்கைத்
துணை
ஜோதி (தி. 1991)
பிள்ளைகள்2

இளமையும் கல்வியும்

கிருஷ்ணகுமார் குன்னத் தில்லியில் இந்து மலையாளக் குடும்பத்தில் சி. எஸ். நாயர், குன்னத் கனகவல்லி இணையருக்கு பிறந்தார்.[2] இந்தித் திரைப்படங்களில் பாடுவதற்கு முன்னர் 3500 சிற்றிசைகளில் (jingles) பாடியுள்ளார். இவரது பள்ளிப் படிப்பை ‘’மவுண்ட் செயிண்ட் மேரிஸ் பள்ளி’’யிலும் பட்டப்படிப்பினை தில்லி பல்கலைக்கழகத்திலும் படித்தார்.[3] 1999 உலகக்கோப்பைப் போட்டிக்காக இந்திய அணிக்காக ‘’ஜோஸ் ஆஃப் இந்தியா’’ எனும் உற்சாகமூட்டும் பாடலைப் பாடினார்.[4]

குடும்ப வாழ்க்கை

இவர் இவரது குழந்தைக்காலத் தோழியான ‘’ஜோதி’’யை 1991 ஆம் ஆண்டில் திருமணம் செய்துகொண்டார்.[5] இவர்களுக்கு ‘’நகுல் கிருஷ்ணா குன்னத்’’ என்ற மகனும் ‘’தாமரா குன்னத்’’ என்ற மகளும் உள்ளனர். மகன் பாடகராகவும் மகள் பியானோ இசைக் கலைஞராகவும் அறியப்படுகின்றனர்.[6]

திரையிசைப் பாடகர்

கல்லூரிப் படிப்பு முடிந்ததும் சில மாதங்கள் விடுதி நிர்வாகியாகவும் இருந்தார். கேகே தனது பாடும் முறைகளில் பாடகர் ‘’கிஷோர்குமார்’’ மற்றும் இசையமைப்பாளர் ஆர். டி. பர்மன், ‘’மைக்கேல் ஜாக்சன், பில்லி ஜோயல், ப்ரையன் ஆடம்ஸ்’’ ஆகியோரின் சாயலைக் கொண்டுள்ளார். மேலும் இவர் எவரிடமும் இசையைக் கற்றுக் கொள்ளவில்லை.

இசைத் தொகுப்புகள்

1999 ஆம் ஆண்டின் புதியப் பாடகராக சோனி நிறுவனம்  இவரைத் தேர்வு செய்தது.  இவரது இசைத் தொகுப்பான பால் தேர்வு செய்யப்பட்டது.[7] இதன் இசைச் சேர்க்கையை லீஸ் லூயிஸ் அமைந்திருந்தார். பாடல் வரிகளை மெகபூப் எழுதியிருந்தார். சிறந்த பாடகருக்கான விருது இந்த இசைத் தொகுப்பின் மூலம் இவருக்குக் கிடைத்தது. ஹூம்சபஃர் எனும் இரண்டாவது இசைத் தொகுப்பினை எட்டு ஆண்டுகளுக்குப் பின்னர் 2008 சனவரி 22 அன்று வெளியிட்டார்.[8]ஜஸ்ட் மொகப்பத், சகாலகா பூம்பூம், குச் ஜுகி சி பால்கிய்ன், ஹிப் ஹிப் ஹுர்ரே, காவ்யாஞ்சலி, ஜஸ்ட் டேன்ஸ் போன்ற தொலைக்காட்சித் தொடர்களுக்காகவும் பாடல்கள் பாடியுள்ளார். 2010 ஆம் ஆண்டின் ஸ்டார் பரிவார் விருதுகள் நிகழ்ச்சிக்காக ஸ்ரேயா கோஷலுடன் பாடல்கள் பாடியுள்ளார். 2015 ஆகத்து 29 அன்று இளம் பாடகர்களின் திறமையினை ஊக்குவிக்கும் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் வளரும் பாடகர்களை ஊக்குவிப்பதற்காக பாடினார். பத்து ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் அவர் தொலைக்காட்சி நிகழ்ச்சியின் நடுவராக இருந்தார்.[9] மேலும் பாகித்தானிய தொலைக்காட்சி நிகழ்ச்சிக்காக தன்கா சாலா எனத் தொடங்கும் பாடலை ஃபரூக் அபித் இசையமைப்பில் பாடினார். 2013 ஆம் ஆண்டில் ரைஸ் அப் - கலர்ஸ் ஆப் பீஸ் (Rise Up – Colors of Peace) எனும் சர்வதேச இசைத்தொகுப்பு ஒன்றில் பாடல்களைப் பாடினார். இந்த இசைத்தொகுப்பினில் 12 நாடுகளைச் சேர்ந்த கலைஞர்கள் பங்கு பெற்றிருந்தனர்.  இதன் பாடல்களை துருக்கி நாட்டு பாடலாசிரியர் பெட்டுலா குலன் (Fetullah Gulen) எழுதியிருந்தார்.

இறப்பு

கிருஷ்ணகுமார் குன்னத் கொல்கத்தாவில் இசை நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்டு திரும்பிய பின் 2022 மே 31 அன்று நள்ளிரவு காலமானார்.[10]. 2022 சூன் 1 அன்று கொல்கத்தா காவல் துறையினர் இவருடைய மரணம் இயற்கைக்கு மாறானது என்று வழக்குப் பதிந்துள்ளனர்.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

விக்கிமீடியா பொதுவகத்தில்,
கே.கே
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்