கிரீன்விச் இடைநிலை நேரம்

கிரீன்விச் இடைநிலை நேரம் (Greenwich Mean Time, GMT, கிரீனிச் சராசரி நேரம் என்பது இலண்டனின் கிரீனிச்சில் உள்ள அரச வான்காணகத்தில் நள்ளிரவில் இருந்து கணக்கிடப்படும் சராசரி சூரிய நேரம் ஆகும். கடந்த காலங்களில் வெவ்வேறு நேரங்களில், இது நண்பகல் முதல் கணக்கிடப்படுவது உட்பட பல்வேறு வழிகளில் கணக்கிடப்பட்டது;[1] இதன் விளைவாக, ஒரு சூழல் கொடுக்கப்பட்டாலன்றி, குறிப்பிட்ட நேரத்தைக் குறிப்பிட இதைப் பயன்படுத்த முடியாது. ஒ.ச.நே+00:00 நேர வலயத்திற்கான பெயர்களில் ஒன்றாக 'GMT' பயன்படுத்தப்படுகிறது,[2] ஐக்கிய இராச்சியத்தின் சட்டத்தில், அங்கு GMT சிவில் நேரத்திற்கான அடிப்படையாகும்.[3][a]

கிரீன்விச் இடைநிலை நேரம்
நேர வலயம்
ஒ.ச.நே. ஈடுசெய்தல்
GMTஒ.ச.நே±00:00
தற்போதைய நேரம்
02:50, 8 சூலை 2024 GMT [refresh]
ப.சே.நே. பின்பற்றல்
இந்நேர வலயம் முழுவதும் ப.சே.நே. பின்பற்றப்படுகிறது.
ஆப்பிரிக்காவின் நேர வலயங்கள்:
 UTC-01:00  கேப் வர்டி நேரம்[a]
 UTC±00:00  கிரீன்விச் இடைநிலை நேரம்
 UTC+01:00 
 UTC+02:00 
 UTC+03:00  கிழக்கு ஆப்பிரிக்க நேரம்
 UTC+04:00 
  • மொரிசியசு நேரம்[b]
  • சீசெல்சு நேரம்[b]
a கேப் வர்டி தீவுகள் ஆப்பிரிக்கப் பெரு நிலத்தின் மேற்கே உள்ளது.
b மொரிசியசு, சீசெல்சு ஆகியன மடகாசுகரின் கிழக்கேயும் வட-கிழக்கேயும் முறையே உள்ளன.
ஐரோப்பாவின் நேர வலயங்கள்:
வெளிர் நீலம் மேற்கு ஐரோப்பிய நேரம் (ஒ.ச.நே ± 00:00)
நீலம் மேற்கு ஐரோப்பிய நேரம் (ஒ.ச.நே ± 00:00)
மேற்கு ஐரோப்பிய கோடைகால நேரம் (ஒ.ச.நே + 01:00)
இளஞ்சிவப்பு மத்திய ஐரோப்பிய நேரம் (ஒ.ச.நே + 01:00)
சிவப்பு மத்திய ஐரோப்பிய நேரம் (ஒ.ச.நே + 01:00)
மத்திய ஐரோப்பிய கோடைகால நேரம் (ஒ.ச.நே + 02:00)
மஞ்சள் கலினின்கிராட் நேரம் (ஒ.ச.நே + 02:00)
செம்மஞ்சள் கிழக்கு ஐரோப்பிய நேரம் (ஒ.ச.நே + 02:00)
கிழக்கு ஐரோப்பிய கோடைகால நேரம் (ஒ.ச.நே + 03:00)
இளம் பச்சை மின்ஸ்க் நேரம், மாஸ்கோ நேரம் (ஒ.ச.நே + 03:00)
வெளிர் நிறங்கள், கோடைகால நேரத்தைப் பயன்படுத்தாத நாடுகளான அல்சீரியா, பெலருஸ், ஐசுலாந்து, மொரோக்கோ, உருசியா, துனீசியா மற்றும் துருக்கிவைக் குறிக்கின்றது.

ஆங்கிலேயர்கள் பெரும்பாலும் GMT ஐ ஒருங்கிணைந்த சர்வதேச நேரத்திற்கு, (ஒசநே, UTC) ஒத்ததாகப் பயன்படுத்துகின்றனர்.[4] வழிசெலுத்தலுக்கு, இது பன்னாட்டு நேரத்திற்கு (UT) சமமாக கருதப்படுகிறது (0° நெடுங்கோட்டில் சராசரி சூரிய நேரத்தின் புதிய வடிவம்); ஆனால் இந்த பொருள் ஒசநே இலிருந்து 0.9 செக் வரை வேறுபடலாம். எனவே, GMT என்ற சொல் துல்லியம் தேவைப்படும் வேளைகளில் பயன்படுத்தப்படக்கூடாது.[5]

பூமியின் நீள்வட்ட சுற்றுப்பாதையில் சீரற்ற கோண வேகம் மற்றும் அதன் அச்சுச் சாய்வு காரணமாக, நண்பகல் (12:00:00) GMT என்பது சூரியன் கிரீனிச் நிரைக்கோட்டைக்[b] கடந்து வானத்தில் அதன் மிக உயர்ந்த புள்ளியை அடையும் சரியான தருணம் ஆகும். இந்த நிகழ்வு மதியம் GMTக்கு 16 நிமிடங்களுக்கு முன்பு அல்லது அதற்குப் பிறகு நிகழலாம், இது நேர சமன்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு முரண்பாடு ஆகும். நண்பகல் GMT என்பது இந்த நிகழ்வின் ஆண்டு சராசரி (கூட்டுச் சராசரி) தருணமாகும், இதுவே "கிரீனிச்சு சராசரி நேரத்தில்" சராசரி என்பதன் பொருளாகும்.

முதலில், வானியலாளர்கள் GMT நாள் நண்பகலில் தொடங்குவதாகக் கருதினர்,[c] மற்ற அனைவருக்கும் அது நள்ளிரவில் தொடங்கியது. குழப்பத்தைத் தவிர்க்க, நள்ளிரவில் இருந்து கணக்கிடப்படும் GMTயைக் குறிக்க பன்னாட்டு நேரம் என்ற பெயர் அறிமுகப்படுத்தப்பட்டது.[7] இன்று, பன்னாட்டு நேரம் டைம் பொதுவாக UTC அல்லது UT1 ஐக் குறிக்கிறது.[8]

"GMT" என்ற சொல் குறிப்பாக பிபிசி உலக சேவை, அரச கடற்படை, வானிலை நிலையம் போன்ற ஐக்கிய இராச்சிய அமைப்புகளால் பயன்படுத்தப்படுகிறது; குறிப்பாக அரபு நாடுகளில் இயங்கும் மத்திய கிழக்கு ஒலிபரப்பு மையம் போன்றவையும் பயன்படுத்துகின்றன.

வரலாறு

நிலைப்படுத்தப்பட்ட அளவீடுகளுடனான கிரீன்விச் மணிக்கூடு

இங்கிலாந்து மிகவும் மேம்பட்ட கப்பற்படை நாடாக உருவானபோது பிரித்தானியக் கப்பற்படை வீரர்கள் கிரீன்விச் உச்சநெடுங்கோட்டில் இருந்து தங்களுடைய நிலநிரைக்கோட்டைக் கணக்கிடும்விதமாக ஜிஎம்டியில் ஒரு காலமானியையாவது வைத்திருந்தனர், இது சுழியப் பாகைகளுக்கு நெடுங்கோட்டை வைத்திருப்பதாக ஏற்றுக்கொள்ளக்கூடிய விதியாக கருதப்பட்டது (இந்த விதி 1884 ஆம் ஆண்டு பன்னாட்டு உச்சநெடுங்கோட்டு மாநாட்டில் சர்வதேச அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்டது). ஜிஎம்டியிலான இந்த காலமானியின் ஒத்திசைவாக்கம் இப்போதும் சூரிய நேரமாக இருக்கும் கப்பல் புறப்படும் நேரத்தில்கூட தாக்கமேற்படுத்தவில்லை என்பதை கவனிக்கவும். ஆனால் இந்த நடைமுறை, கிரீன்விச் கண்கானிப்புகளின் அடிப்படையிலான சந்திர மண்டல தொலைவின் நெவில் மெசுக்கிலின் முறையிலிருந்து மற்ற நாடுகளைச் சேர்ந்த கடலோடிகளோடு இணைக்கப்பட்டதானது முடிவில் ஜிஎம்டியானது இடவமைப்பு தொடர்பின்றி உலகம் முழுவதிலும் பயன்படுத்தப்படுவதற்கு வழியமைத்தது. பெரும்பாலான நேர வலயங்கள் "ஜிஎம்டிக்கு முன்னால்" அல்லது "ஜிஎம்டிக்கு பின்னால்" உள்ள மணிநேரங்கள் மற்றும் அரைமணி நேரங்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் குறிப்பிடப்படுவதாக அமைந்தன.

கிரீன்விச் இடைநிலை நேரம் 1847 ஆம் ஆண்டில் ரயில்வே கிளியரிங் ஹவுசு நிறுவனத்தால் பெரிய பிரித்தானியா முழுவதும் ஏற்றுக்கொள்ளப்பட்டது, அத்துடன் அதற்கடுத்து வந்த ஆண்டில் எல்லா ரயில் நிறுவனங்களாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது, இதிலிருந்துதான் "ரயில்வே நேரம்" என்ற சொற்பதம் பெறப்பட்டது. இது மற்ற பயன்பாடுகளுக்காகவும் ஏற்றுக்கொள்ளப்பட்டது, ஆனால் 1858 இல் "உள்ளூர் இடைநிலை நேரமே" அதிகாரப்பூர்வமான நேரம் என்பதற்கான சட்டப்படியான வழக்கும் தொடுக்கப்பட்டது.[9] ஜிஎம்டியானது பெரிய பிரித்தானியா முழுவதும் 1880 இல் சட்டப்பூர்வமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.[10][11] 1883 இல் மாண் தீவிலும், யேர்சியில் 1898 இலும், குயெர்ன்சியில் 1913 இலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. அயர்லாந்து 1916 இல் டப்ளின் இடைநிலை நேரத்தைக் கைவிட்டு கிரீன்விச் இடைநிலை நேரத்தை ஏற்றுக்கொண்டது.[12] கீரின்விச் கண்காணிப்பகத்தைச் சேர்ந்த மணிநேர கால சமிக்ஞை முதன்முறையாக 1924 பிப்ரவரி 5 அன்று வெளியிடப்பட்டது.

சட்ட வரையறையில் கிரீன்விச் இடைநிலை நேரம்

இங்கிலாந்து

1978 ஆம் ஆண்டு பொருள்விளக்கச் சட்டம், பிரிவு 9, ஒரு சட்டத்தில் நேரம் எப்பொழுதெல்லாம் வெளிப்படுத்தப்படுகிறதோ (திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டால் தவிர) அதில் குறி்ப்பிடப்படும் நேரம் கிரீன்விச் இடைநிலை நேரமாகவே இருக்கும் என்று குறிப்பிடுகிறது. துணைப்பிரிவு 23(3) இல் இதே விதியானது ஒப்பந்தங்கள் மற்றும் பிற ஆவணங்களுக்கும் பயன்படுத்தப்படுகின்றன.[3]

ஐக்கிய இராச்சியத்தில், குளிர்காலத்தில் ஒ.ச.நே±00:00 நேரமும், கோடையில் ஒசநே+01:00 நேரமும் நடைமுறையில் உள்ளது.[7][13]

பிபிசி வானொலி நிலையங்கள் கிரீன்விச் நேர சமிக்கையின் "ஆறு பீப்" ஒலிகளை ஒலிபரப்புகின்றன. உள்நாட்டு அலைவரிசைகளில் அறிவிப்பாளர்கள் அந்த நேரத்தை GMT அல்லது BST என அறிவிக்கிறார்கள். பிபிசி உலக சேவை அனைத்து நேர மண்டலங்களுக்கும் ஒலிபரப்பப்படுவதால், அறிவிப்பாளர்கள் "கிரீன்விச் சராசரி நேரம்" என்று கூறி வருகின்றனர்.

ஏனைய நாடுகள்

உலகம் முழுவதிலுமுள்ள சில நாடுகள் தங்களுடைய உள்ளூர் நேரத்தை கிரீன்விச் இடைநிலை நேரத்திற்கான வெளிப்படையான குறிப்புதவியால் சட்டப்பூர்வமாக வரையறுத்திருக்கின்றன.[14][15] சில உதாரணங்கள்:

  • பெல்ஜியம்: 1946, 1947 ஆம் ஆண்டுகளின் அரசாணைகள் ஜிஎம்டிக்கு முன்னதாக ஒரு மணிநேரத்தை சட்டப்பூர்வமான நேரமாக அமைத்திருக்கின்றன.[14]
  • அயர்லாந்து: "நிலைப்படுத்தப்பட்ட நேரம்" என்பது GMTக்கு ஒரு மணிநேரம் முன்னதாக இருக்கும் என வரையறுக்கப்படுகிறது.[16] "குளிர்கால நேரம்" என்பது GMT போலவே வரையறுக்கப்படுகிறது.[17][18]
  • கனடா: பொருள்விளக்கச் சட்டம், ஆர்.எஸ்.சி. 1985, சி. ஐ-21, பிரிவு 35(1). இது பல மாகாணங்களுக்கான "நிலையான நேரத்தை" குறிக்கிறது, ஒவ்வொன்றையும் "கிரீன்விச் நேரம்" தொடர்பாக வரையறுக்கிறது, ஆனால் "கிரீன்விச் சராசரி நேரம்" என்ற வெளிப்பாட்டைப் பயன்படுத்தவில்லை. நோவா ஸ்கோசியா போன்ற பல மாகாணங்கள் "கிரீன்விச் சராசரி நேரம்" அல்லது "கிரீன்விச் சராசரி சூரிய நேரம்" என்று குறிப்பிடும் தங்கள் சொந்த சட்டத்தைக் கொண்டுள்ளன.

நேர வலயம்

கிரீன்விச் இடைநிலை நேரம் என்பது பின்வரும் நாடுகள் மற்றும் பகுதிகளில் நிலையான நேரமாக சட்டத்தில் வரையறுக்கப்படுகிறது, இது கோடையில் ஒரு மணிநேரம் (GMT+1) அவர்களின் கடிகாரத்தை முன்னெடுத்துச் செல்லும்.

குமாசி, கானா ஆகிய இடங்களில் , set to GMT.

கிரீனிச் இடைநிலை நேரம் பின்வரும் நாடுகளிலும் மண்டலங்களிலும் ஆண்டு முழுவதும் ஒரு சீர் நேரமாகப் பயன்படுத்தப்படுகிறது:

இதனையும் காண்க

குறிப்புகள்

மேற்கோள்கள்

உசாத்துணைகள்

வெளி இணைப்புகள்

🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்