கிம் கி-டக் (திரைப்பட இயக்குநர்)

கிம் கி டக் (ஆங்கில மொழி: Kim Ki-duk, 김기덕) (20 திசம்பர் 1960 – 11 திசம்பர் 2020) என்பவர் தென் கொரியாவைச் சேர்ந்த திரைப்பட தயாரிப்பாளர் மற்றும் இயக்குனராவார். இவருடைய திரைப்பட பாணி வித்தியாசமானதாகவும், கலைநுட்பமானதாகவும் இருப்பதால், ஆசியா அளவில் புகழ்பெற்ற இயக்குனர்களில் ஒருவராக இருக்கிறார்.

கிம் கி டக்
பிறப்பு(1960-12-20)20 திசம்பர் 1960
போங்வா, தென் கொரியா
இறப்பு11 திசம்பர் 2020(2020-12-11) (அகவை 59)
ரீகா, லாத்வியா
பணி
செயற்பாட்டுக்
காலம்
1993–2020

இவரது பல திரைப்படங்கள் சர்வதேச திரைப்பட விழாக்களில் பங்குபெற்றுள்ளன. அவற்றில் சில விருதுகளையும் பெற்றுள்ளன. இயக்குனராக, தயாரிப்பாளராக கிம் கி-டக் பெற்ற விருதுகளில் குறிப்பிடத்தக்கவை, 69வது வெனிஸ் சர்வதேச திரைப்பட விழாவில் கோல்டன் லயன் விருது 'பயட்டா' திரைப்படத்திற்காகவும், 61வது வெனிஸ் சர்வதேச திரைப்பட விழாவில் சில்வர் லயன் விருது சிறந்த இயக்குனருக்காக 3-அயன் திரைப்படத்திற்காகவும், 54வது பெர்லின் சர்வதேச திரைப்பட விழாவில் சிலவர் பீர் விருது சிறந்த இயக்குனருக்காக சமாரியா திரைப்படத்திற்காகவும் கிடைத்தது. மேலும் 2011 கேன்ஸ் பட திருவிழாவில் 'அன் சர்டர்ன் ரிகாட் பரிசு அரிராங்' படத்திற்காகவும் கிடைத்தது.

வாழ்க்கை மற்றும் தொழில்

கிம் கி-டக் திசம்பர் 20, 1960 ல் தென் கொரியாவில் போங்குவா எனும் இடத்தில் பிறந்தார். பாரிசில் நுண்கலையை 1990 லிருந்து 1993 வரை படித்தார். அதன் பின்பு தென் கொரியாவிற்கு வந்து திரைகதையாசிரியாராகப் பணியாற்றினார். 1995ல் நாடகமெழுதும் போட்டியில் முதற்பரிசு பெற்றார்.[1] அதனைத் தொடர்ந்து குரோக்கோடைல் எனும் குறைந்த செலவினாலான படத்தை 1996ல் எடுத்தார். தென்கொரியாவில் இப்படம் உணர்ச்சிகரமான அதிர்வலையை ஏற்படுத்தியது. இவரது ரியன் பிரிக்சன் திரைப்படம் 23வது மாஸ்கோ சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது.[2]

2004ல் இவருடைய இயக்குனர் திறமைக்கு இரு திரைப்பட விழாவிருதுகள் வேறுவேறு படங்களுக்காக கிடைத்தது. பெர்லின் சர்வதேசத் திரைப்பட விழாவில் இவரது 'சமாரிடன் கேள்' (2004) மற்றும் வெனிஸ் திரைப்பட விழாவில் 3-அயன் (2004) படங்களுக்கா விருது பெற்றார். 2011ல் இவரது ஆவணப்படமான 'அரிராங்' திரைப்படத்திற்கு அன் சர்டர்ன் ரிகாட்விருது கான் திரைப்பட விழாவில் வழங்கப்பட்டது. 2012 வெனிஸ் சர்வதேச திரைப்பட விழாவில் இவரது பயட்டா திரைப்படத்திற்கு கோல்டன் லயன் விருதும் கிடைத்தது. இது சர்வதேச மூன்று திரைப்பட விழாக்களான வெனிஸ், பெர்லின், கேன்ஸ் ஆகியவற்றில் சிறந்த திகில் படத்திற்கான விருது வாங்கிய பெருமை பெற்றது.

திரைப்படங்கள்

ஆண்டுதலைப்புகொரியன் தலைப்புமொழிபெயர்க்கப்பட்ட தலைப்பு
1996குரோக்கோடைல்악어Ageo
வைல்ட் அனிமல்ஸ்야생동물 보호구역Yasaeng dongmul bohoguyeog
1998பேர்ட்கேஜ் இன்파란 대문Paran daemun
2000தி அயில்Seom
ரியல் பிரிக்சன்실제 상황Shilje sanghwang
2001அட்ரஸ் அன்னௌன்수취인불명Suchwiin bulmyeong
பேட் கை나쁜 남자Nabbeun namja
2002தி கோஸ்ட் காட்해안선Haeanseon
2003ஸ்பிரிங், சம்மர், பால், விண்டர்... அன்ட் ஸ்பிரிங்봄 여름 가을 겨울 그리고 봄Bom yeoreum gaeul gyeoul geurigo bom
2004சமாரிடன் கேர்ள்사마리아Samaria
3-அயன்빈 집Bin-jip
2005தி பௌHwal
2006டைம்시간Shigan
2007பிரத்Soom
2008டிரீம்비몽Bimong
2011அரிராங்아리랑Arirang
அமென்아멘Ahmen
2012பயட்டா피에타Pieta
2013மோபியஸ்[3]뫼비우스Moebius
2014ஒன் ஆன் ஒன்일대일Il-dae-il
2015ஸ்டாப்스톱Seutop
2016நெட்[4]그물Geumul

பிற செயல்பாடுகள்

  • பியூட்டிப்புல் (2008, எழுத்தாளர்/தயாரிப்பாளர்)
  • ரப் கட் (2008, எழுத்தாளர்/தயாரிப்பாளர்)
  • சீக்ரெட் ரியூனியன் (2010, எழுத்தாளர்- மதிப்பிடப்படாத)
  • பூங்சான் (2011, எழுத்தாளர்/தயாரிப்பாளர்)
  • ரப் பிளே (2013, எழுத்தாளர்/தயாரிப்பாளர்)
  • ரெட் பேமிலி (2013, எழுத்தாளர்/தயாரிப்பாளர்)
  • காட்சென்டு (2014, எழுத்தாளர்/தயாரிப்பாளர்)

இறப்பு

இவர் 11 திசம்பர் 2020 அன்று, தனது 60வது பிறந்தநாளுக்கு ஒன்பது நாட்களுக்கு முன்பு, லாட்வியாவில் கோவிட்-19 தொற்றுநோயின் போது 59 வயதில் கோவிட்-19ஆல் ஏற்பட்ட சிக்கல்களால் இறந்தார்.[5][6][7][8][9]

ஆதாரங்கள்

வெளி இணைப்புகள்

🔥 Top keywords: காமராசர்நான்கு புனித தலங்கள், உத்தரகண்ட்சிறப்பு:Searchமுதற் பக்கம்பகுப்பு:ஆந்திர ஆறுகள்சுப்பிரமணிய பாரதிமுகேசு அம்பானிபாரதிதாசன்தமிழ்நாட்டில் சமணம்தமிழ்ஐம்பெருங் காப்பியங்கள்இந்தியன் (1996 திரைப்படம்)வீரமாமுனிவர்கழுமலம்கி. ஆம்ஸ்ட்ராங்சிலப்பதிகாரம்திருக்குறள்மூவேந்தர்தொல்காப்பியம்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்இந்தியன் 2நில அளவை (தமிழ்நாடு)நான்கு புனித தலங்கள், இந்தியாஇலவச மதிய உணவுத் திட்டம், தமிழ்நாடுசமணம்பெண் தமிழ்ப் பெயர்கள்தமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்திருவள்ளுவர்சூரரைப் போற்றுசிறப்பு:RecentChangesஅம்பேத்கர்அறுபடைவீடுகள்கல்விபி. எச். அப்துல் ஹமீட்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)எட்டுத்தொகைவிக்கிரவாண்டி (சட்டமன்றத் தொகுதி)சுஜாதா (எழுத்தாளர்)தமிழ்நாடு