கார்த்தி செல்வம்

இந்திய வளைதடிப் பந்தாட்டக்காரர்

கார்த்தி செல்வம் (Selvam Karthi ) இந்தியாவின் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு வளைதடிப் பந்தாட்ட வீரராவார். 2001 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 1 ஆம் தேதியன்று இவர் பிறந்தார். இந்திய வளைதடிப் பந்தாட்ட அணியில் கார்த்தி ஒரு முன்கள ஆட்டக்காரராக விளையாடுகிறார். 2022 ஆசிய கோப்பை போட்டியில் விளையாடும் இந்திய தேசிய அணியில் ஓர் உறுப்பினராகவும் உள்ளார்.[1]

கார்த்தி செல்வம்
Selvam Karthi
தனித் தகவல்
பிறப்பு1 செப்டம்பர் 2001 (2001-09-01) (அகவை 22)
தமிழ்நாடு, இந்தியா
விளையாடுமிடம்முன்களம்
தேசிய அணி
2018–2022இந்தியா 21 வயதினருக்கு கீழ்
2022–இந்தியா1(1)
பதக்க சாதனை
Last updated on: 23 மே 2022

ஆரம்ப கால வாழ்க்கை

கார்த்தி இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் உள்ள அரியலூர் என்ற ஊரைச் சேர்ந்தவர். இவரது தந்தை செல்வம் அரசு கல்லூரியில் காவலாளியாக பணிபுரிகிறார். இவருடைய குடும்பத்தில் பிறந்துள்ள மூன்று குழந்தைகளில் இரண்டாவது குழந்தை கார்த்தி செல்வம் ஆவார். [2]

தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ விளையாட்டு அமைப்பான விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கீழ் செயல்பட்டு வந்த கோவில்பட்டியில் உள்ள விளையாட்டு விடுதியில் வளைதடி பந்தாட்ட வீரராக கார்த்தி பயிற்சி பெற்றார். 2022 ஆம் ஆண்டு நிலவரப்படி, அவர் கோவில்பட்டிக்கு அருகிலுள்ள எசு.எசு.துரைசாமி மாரியம்மாள் கலைக் கல்லூரியில் பட்டப்படிப்பைத் தொடர்ந்தார். [3]

தொழில்

2018 ஆம் ஆண்டில், இளையோர் தேசிய வெற்றியாளர் போட்டியில் தமிழ்நாட்டிற்காக விளையாடுகையில் தொடர்ச்சியான சிறந்த செயல்பாட்டிற்குப் பிறகு கார்த்தி 21 வயதுக்குட்பட்டவர்களுக்கான இந்திய தேசிய அணியில் சேர்க்கப்பட்டார். [2] 2022 ஆம் ஆண்டு மே மாதத்தில் இவர் ஆசிய கோப்பைக்கான இந்திய அணியில் ஒருவராக இடம் பெற்றார்.[4] மாரீசுவரன் சக்திவேலுடன் இணைந்து, கடந்த 13 வருடங்களில் தமிழ்நாட்டிலிருந்து இந்திய தேசிய அணிக்குத் தெரிவான முதல் நபர் கார்த்தி செல்வன் ஆவார். [5]

மேற்கோள்கள்

புற இணைப்புகள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=கார்த்தி_செல்வம்&oldid=3440846" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: காமராசர்நான்கு புனித தலங்கள், உத்தரகண்ட்சிறப்பு:Searchமுதற் பக்கம்பகுப்பு:ஆந்திர ஆறுகள்சுப்பிரமணிய பாரதிமுகேசு அம்பானிபாரதிதாசன்தமிழ்நாட்டில் சமணம்தமிழ்ஐம்பெருங் காப்பியங்கள்இந்தியன் (1996 திரைப்படம்)வீரமாமுனிவர்கழுமலம்கி. ஆம்ஸ்ட்ராங்சிலப்பதிகாரம்திருக்குறள்மூவேந்தர்தொல்காப்பியம்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்இந்தியன் 2நில அளவை (தமிழ்நாடு)நான்கு புனித தலங்கள், இந்தியாஇலவச மதிய உணவுத் திட்டம், தமிழ்நாடுசமணம்பெண் தமிழ்ப் பெயர்கள்தமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்திருவள்ளுவர்சூரரைப் போற்றுசிறப்பு:RecentChangesஅம்பேத்கர்அறுபடைவீடுகள்கல்விபி. எச். அப்துல் ஹமீட்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)எட்டுத்தொகைவிக்கிரவாண்டி (சட்டமன்றத் தொகுதி)சுஜாதா (எழுத்தாளர்)தமிழ்நாடு