காண்டால்ப்பு

காண்டால்ப்பு (ஆங்கில மொழி: Gandalf) என்பவர் ஆங்கில எழுத்தாளர் ஜே. ஆர். ஆர். டோல்கீன் என்பவரால் உருவாக்கப்பட்ட ஒரு கனவுருப்புனைவு காதாபாத்திரம் ஆகும். இந்த கதாபாத்திரம் 1937 ஆம் ஆண்டு வெளியான த காபிட்டு மற்றும் த லோட் ஒவ் த ரிங்ஸ் போன்ற புதின புத்தகத்தில் தோற்றுவிக்கிப்பட்டது. இவர் ஒரு மந்திரவாதி, இசுடாரி வரிசையில் ஒருவர் மற்றும் பெல்லோஷிப் ஆப் த ரிங்கின் தலைவர் மற்றும் மூன்று மோதிரங்களில் ஒன்றைத் வைத்துள்ளார், அத்துடன் பெரும் சக்தியைக் கொண்டிருக்கிறார், ஆனால் பெரும்பாலும் இவர் மற்றவர்களை ஊக்குவிப்பதன் மூலம் தனது லட்சியத்தில் வெற்றி கொள்ளகிறார்.

காண்டால்ப்பு
ஜே. ஆர். ஆர். டோல்கீன் கதை மாந்தர்
ஓர்க் உடன் போரிடும் விசார்ட் (காண்டால்ப்பு)
முதல் தோற்றம்த காபிட்டு (1937)
இறுதித் தோற்றம்அன்பினிஷெட் தலேசு (1980)

இவர் 'காண்டால்ப்பு த கிரெய்' ஆகப் புறப்படுகிறார்,[1] அத்துடன் சிறந்த அறிவைப் பெற்றவர் மற்றும் தனது நோக்கத்திற்காக தொடர்ந்து பயணம் செய்கிறார். இவர் ஒரு மோதிரத்தை அழிப்பதன் மூலம் டார்க் லார்ட் சௌரோனை எதிர்க்கும் பணியில் கவனம் செலுத்துகிறார். இவர் நெருப்புடன் தொடர்புடையவர் மற்றும் இவரது சக்தி மோதிரம் நர்யா நெருப்பு மோதிரம் ஆகும். எனவே இவர் ஷையரின் ஹொபிட்களை மகிழ்விப்பதற்காக பட்டாசு வெடிப்பதில் மகிழ்ச்சியடைகிறார், அதே நேரத்தில் மிகுந்த தேவையின் காரணமாக நெருப்பை ஆயுதமாகப் பயன்படுத்துகிறார். மாயர்களில் ஒருவராக இருப்பதனால், இவர் வாலினரின் அழியாத ஆவி ஆவார். ஆனால் இவரது உடல் கொல்லப்படலாம். இவர் த காபிட்டில் குள்ளர்களுக்கும், பில்போவிற்கும் லோன்லி மலையை சிமாக்கு என்கிற டிராகனிடம் இருந்து மீட்டெடுப்பதற்கான அவர்களின் தேடலில் உதவுகிறார்.

எழுத்தாளர் ஜே. ஆர். ஆர். டோல்கீன் ஒருமுறை காண்டால்ப்பை ஒரு தேவதை அவதாரம் என்று விவரித்தார்; பின்னர், அவரும் மற்ற அறிஞர்களும் கந்தால்பை அவரது "வாண்டரர்" வேடத்தில் நோர்சு தொன்மவியல் கடவுள் ஒடினுடன் ஒப்பிட்டனர். அறிஞர்கள் இவர் வெள்ளை நிறத்தில் திரும்புவதை கிறிஸ்துவின் உருமாற்றத்திற்கு ஒப்பிட்டுள்ளனர்; அவர் மேலும் ஒரு தீர்க்கதரிசி என்று விவரிக்கப்படுகிறார்.

இந்த காண்டால்ப்பு கதாபாத்திரம் வானொலி,[2] தொலைக்காட்சி, மேடை, நிகழ்ப்பட ஆட்டம்,[3] இசை மற்றும் திரைப்படத் தழுவல்களில் இடம்பெற்றது, இந்த கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுக்குக்கும் விதமாக நடிகர் இயன் மெக்கெல்லன் என்பவர் த லார்டு ஆப் த ரிங்ஸ்: த பெலொசிப் ஆப் த ரிங்[4][5] (2001), த லார்டு ஆப் த ரிங்ஸ்: த டூ டவர்ஸ் (2002) அன் அன்எக்ஸ்பெக்டட் ஜெர்ன்னி (2012), த பாட்டிலே ஆப் த பைவ் அர்மிசு (2014), அன் அன்எக்ஸ்பெக்டட் ஜெர்ன்னி[6][7] (2012), த டெசோலேசன் ஆப் சிமாக் (2013) மற்றும் த பாட்டிலே ஆப் த பைவ் அர்மிசு (2014) போன்ற திரைப் படங்களில் நடித்துள்ளார்.[8][9]

சான்றுகள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=காண்டால்ப்பு&oldid=3580955" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்