காட்டுப் பக்கி

காட்டுப் பக்கி
தென்னிந்திய ஆனைமலையில்
ஓசை
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
கேப்ரிமுல்கிபார்மசு
குடும்பம்:
பேரினம்:
கேப்ரிமுல்கசு
இனம்:
கே. இண்டிகசு
இருசொற் பெயரீடு
கேப்ரிமுல்கசு இண்டிகசு
(லேத்தம், 1790)

காட்டுப் பக்கி (Indian Jungle Nightjar)(கேப்ரிமுல்கசு இண்டிகசு) என்பது இந்தியத் துணைக் கண்டத்தில் காணப்படும் ஒரு வகை இரவு பக்கி பறவை சிற்றினம் ஆகும். இது முக்கியமாகக் காடுகளின் ஓரங்களில் காணப்படுகிறது. இவை இங்கு அந்தி வேளையில் காணப்படுகிறது. இது மற்றும் தொடர்புடைய இரவு பக்கிகளை வகைப்படுத்தி அறிதல் மிகவும் சிக்கலானது. இது முன்பு சாம்பல் பக்கி அல்லது இந்தியக் காட்டுப் பக்கி என்று அழைக்கப்பட்டது. சில சமயங்களில், கிழக்கு ஆசிய சாம்பல் பக்கின் (கே. ஜோடகா) துணையினமாகக் கருதப்பட்டது.

விளக்கம்

பறக்கும் நிலையில் (மேற்கு தொடர்ச்சி மலையில்
பந்திப்பூர் தேசிய பூங்காவில் இளம் காட்டுப் பக்கி

காட்டுப் பக்கியின் உடல் நீளம் 21 முதல் 24 செ.மீ. நீளமுடையது. இலங்கையின் இவற்றின் எண்ணிக்கை குறைவானதே. இலங்கையில் காணப்படும் காட்டுப் பக்கி சற்று சிறிய அளவிலானது. பெரும்பாலும் உச்சியின் மீது கறுப்புக் கோடுகளுடன் சாம்பல் நிறத்தில் காணப்படும். இதன் வால் நன்கு பிளவுபட்டு, குறுகிய கருப்பு கோடுகளுடன் சாம்பல் நிறத்திலாது. ஆணின் தொண்டைப் பகுதி வெண்ணிறத்தில் நடுப்பகுதியில் பிளவுபட்டு காணப்படும். பெண் பறவையில் பழுப்புநிற தொண்டைத் திட்டு மற்றும் கோடுகள் உள்ளன. வழக்கமான இதன் அழைப்பு ஒரு தொலைதூர இயந்திர ஒசை போன்று தாகூ அல்லது சக் குறிப்புகளின் தொடராகக் காணப்படும் (ஒவ்வொரு 2 வினாடிக்கும் 5 வீதம் ஒலிக்கும்).[2] அலி மற்றும் ரிப்லே அவர்களின் கையேட்டில் இந்த சிற்றினத்தின் ஓசை என யுக்-க்ரூக்ரூ என விவரிக்கப்பட்டது பிழையானது. இந்த ஓசையானது ஓரியண்டல் சிறிய ஆந்தையின் (ஓடசு சுனியா) ஓசையாகும்.[3][4]

உணவு

பறக்கும் பூச்சிகளை அப்படியும் இப்படியுமாகச் சுற்றிப் பறந்து லாகவமாக பிடிக்கும். மிகக் குறுகிய கால்களைக் கொண்ட இது எப்போதாவது தரையில் ஓடியும் பூச்சிகளைப் பிடிக்கும்.[5]

இனப்பெருக்கம்

இந்தியாவில் காட்டுப் பக்கியின் இனப்பெருக்க காலம் சனவரி முதல் சூன் வரையிலும், இலங்கையில் மார்ச் முதல் சூஜூலை வரையிலும் நடைபெறும். கூடு என்பது தரையில் ஒரு வெற்றுப் பகுதியில் அமையும். இதில் இரண்டு முட்டைகள் வரை இடப்படுகின்றன.[6][7] ஆண் பெண் என இரண்டு பறவைகளும் சுமார் 16 முதல் 17 நாட்களுக்கு முட்டைகளை அடைகாக்கும்.[8]

காணப்படும் பகுதிகள்

சமவெளிப் பகுதிகளிலிருந்து மலைகளில் 2000மீ. உயரம் வரை தமிழகம் எங்கும் காணலாம். தேக்குமரக் காடுகள், மூங்கில் காடுகள் ஆகியவற்றில் பகலில் நிழலான இடங்களில் பதுங்கி இருக்கும். இது இரவு தொடங்கியதும் வெளிப்பட்டு இரைதேடத் தொடங்கும். காட்டுப் பாதையில் புழுதியில் எதிர்வரும் வாகனங்களின் விளக்கு வெளிச்சத்தில் கண்கள் சிவப்பு மாணிக்கக்கல் போல் மின்ன அமர்ந்திருக்க காணலாம். இருட்டத் தொடங்கியவுடன் சுக். சுக். சுக்' எனவும் சுக்கோ சுக்கோ எனவும் தொடர்ந்து குரல் கொடுக்கும்.

நடத்தை

காட்டுப் பக்கி அந்தி வேளையில் சுறுசுறுப்பாக இருக்கும். பெரும்பாலும் மலைபகுதி புல்வெளி அல்லது புதர்கள் மீதோ, விருப்பமான வெறுமையான தூண்கள் அல்லது பாறைகளில் தொடர்ந்து அமர்ந்திருக்கும். இது மரங்களில், ஒரு நீண்ட கிளையில் அமர்ந்திருக்கும்.[9][10]

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=காட்டுப்_பக்கி&oldid=3784443" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்