காட்டலான் மொழி வல்கர் இலத்தீனிலிருந்து பைரெனி மலைத்தொடர்களின் கிழக்கு பகுதியிலிருந்து பேசப்படத் துவங்கியது. இது கால்லோ-உரோமானியம், ஐபெரோ-உரோமானியம் மற்றும் கால்லோ-இத்தாலியம் போன்ற மொழிகளை ஒத்தது.
மேற்கண்ட எண்கள் காட்டலான் மொழியைத் தாய்மொழியைக் கொண்டவர்களை மட்டுமின்றி அதை பேசக்கூடிய அனைவரையும் குறிக்கிறது.
குறிப்பு: மேற்கண்ட பட்டியல்களில், புரிந்துகொள்ளக் கூடியவர்களின் எண்ணிக்கை பேசக்கூடியவர்களின் எண்ணிக்கையையும் தன்னுள்ளடக்கியதே.
வட்டார மொழி வழக்குகள்
கிழக்கு காட்டலான்
மேற்கு காட்டலான்
வாலேன்சியன்
மொழியோலியும் எழுதுமுறையும்
மையக் கட்டுரை: காட்டலான் எழுத்து
இலக்கணம்
மையக் கட்டுரை: காட்டலான் இலக்கணம்
காட்டலான் பெயர்கள்
காட்டலான் பெயரிடும் வழக்கங்கள் எசுபானியாவிலுள்ள பெயரிடும் வழக்கங்களைத் தழுவியே வரும். ஒரு நபருக்கு இரண்டு இறுதிப்பெயர்கள் வைக்கப்படுகிறது. அந்நபரின் தந்தையினுடைய பெயர் ஒன்று, தாயினுடைய பெயர் மற்றொன்று. அவ்விரு இறுதிப்பெயர்கலும் "i" (பொருள்: மற்றும்) என்ற எழுத்தால் பிரித்தெழுதப்படுகிறது. (எசுப்பானியத்தில் இதற்கு இணையான எழுத்து "y" ஆகும். ஆனால், அநேகநேரங்களில் இது எழுதப்படுவதில்லை; தவிர்க்கப்படுகிறது.)
(எ-டு) Antoni Gaudíயின் முழுப்பெயர் Antoni Gaudí i Cornet என அவர் பெற்றோரின் பெயர்களைத் தழுவியே வருகிறது. அவரது தந்தையின் பெயர்: Francesc "Gaudí" i Serra ; அவரது தாயாரின் பெயர்: Antònia "Cornet" i Bertran.
எடுத்துக்காட்டுகள்
காட்டலோனியாவில் பொதுவாக பேசப்படும் சில வார்த்தைகள் (மத்திய வட்டார மொழி வழக்கின்படியான உச்சரிப்பு - பார்செலோனிய (Barcelona) மற்றும் புறநகரம்).