காக்ஸ்பர்ஷ்

2012 மராத்தி திரைப்படம்

கக்ஸ்பர்ஷ் (Kaksparsh) என்பது 2012 ஆம் ஆண்டு வெளியான இந்திய மராத்தி வரலாற்று நாடகத் திரைப்படமாகும். மகேஷ் மஞ்ரேக்கர் இயக்கிய இப்படத்தில் அனிருத்தா தேஷ்பாண்டே, மேதா மஞ்ச்ரேக்கர் ஆகியோர் தயாரித்ததனர். இந்த படத்தில் சச்சின் கேடேகர், பிரியா பாபட், மேதா மஞ்ச்ரேக்கர், சவிதா மல்பேகர் கேடகி மாதேகன்கர் ஆகியோர் நடித்துள்ளனர் . இந்த படத்தின் கதையானது இதே பெயரில் உஷா தந்தார் எழுதிய ஒரு சிறுகதையை அடிப்படையாகக் கொண்டது. படத்தின் கதைக்களமானது கொங்கன் மண்டலத்தின் சித்பவன் பிராமணரின் 1930-1950 காலக்கட்ட குடும்பத்தைச் சுற்றியதாக உள்ளது. இந்த படம் வணிக ரீதியான வெற்றியைப் பெற்றது. மேலும் இயக்கம், கிரிஷ் ஜோஷியின் திரைக்கதை, நடிகர்களின் நடிப்பிற்காக, குறிப்பாக கேடேகரின் குடும்பத் தலைவராக அரி டாம்லேயின் நடிப்பிற்காக விமர்சன ரீதியான பாராட்டைப் பெற்றது.

காக்ஸ்பர்ஷ்
இயக்கம்மகேஷ் மஞ்ச்ரேக்கர்
தயாரிப்புமேதா மஞ்ச்ரேக்கர்
திரைக்கதைகிரிஷ் ஜோஷி (உரையாடலும்)
இசைபின்னணி இசை:
ராகுல் ரானடே
அஜித்-சமீர்
பாடல் வரிகள்:
கிஷோர் கடம்
மிட்டாலி ஜோஷி
நடிப்புசச்சின் கேடேகர்
பிரியா பாபட்
மேதா மஞ்ச்ரேக்கர்
சவிதா மல்பேகர்
கேதகி மாதேகன்கர்
வைபவ் மாங்கல் </> அபிஜித் கேல்கர்
ஒளிப்பதிவுஅஜித் ரெட்டி
படத்தொகுப்புராகுல் படங்கர்
விநியோகம்ஜீ தொலைக்காட்சி
வெளியீடுமே 4, 2012 (2012-05-04)
ஓட்டம்147 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிமராத்தி
ஆக்கச்செலவு1.4 கோடி (US$1,80,000)[1]
மொத்த வருவாய்14 கோடி (US$1.8 மில்லியன்)[1]

இப்படமானது மகாராட்டடிர அரசு திரைப்பட விருதுகள், மற்றும் 11 வது புனே சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த திரைப்படத்துகான விருது உட்பட பல விருதுகளைப் பெற்றது. நீலக்கதிர் வட்டில் வீட்டு ஊடகங்களுக்காக வெளியிடப்பட்ட முதல் மராத்தி திரைப்படம் இதுவாகும். கக்ஸ்பர்ஷின் வெற்றியையடுத்து, அரவிந்த்சாமி மற்றும் டிஸ்கா சோப்ரா ஆகியோர் முக்கிய பாத்திரத்தில் நடிக்க இந்தி மற்றும் தமிழ் மொழிகளில் மறுஆக்கப் படத்தை மகேஷ் மஞ்சரேக்கர் இயக்கவுள்ளார்.

கதை

சித்பவன் பிராமண குடும்பத் தலைவரான அரி தாம்லே (சச்சின் கேடேகர்) கொங்கணில் உள்ள தோர்கான் கிராமத்தில் தன் மனைவி தாரா (மேதா மஞ்ரேகர்), அவர்களின் மூன்று குழந்தைகள், அவரது தம்பி மகாதேவ் (அபிஜித் கேல்கர்), அவரது விதவை அத்தை நம் ஆத்யா ஆகியோருடன் வசித்துவருகிறார். தன் தம்பி மகாதேவனுக்கு திருமணம் முடிக்க அரி நினைக்கிறார். துர்கா (கேதகி மாதேகன்கர்) என்ற பூப்பெய்தாத சிறுமியுடன் மகாதேவனுக்கு நிச்சயமாகிறது. அவளுக்கு உமா என்று பெயர் மாற்றபட்டுகிறது. உமா பூப்பெதியவுடன், வெளியூரில் படித்துக் கொண்டிருக்கும் மகாதேவனுக்குத் தகவல் தரப்படுகிறது. திருமண ஏற்பாடு நடக்கிறது. இருப்பினும், திருமணம் முடிவதற்குள் மகாதேவன் நாள்பட்ட நோயால் இறந்துவிடுகிறார். மகாதேவனுக்கு அரி இறுதிச் சடங்குகள் செய்து சிராத்தம் செய்யும்போது அந்தப் படையலை ஒரு காகமும் (இந்து சமயத்தில் இறந்தவரின் ஆத்மாவுக்கு அடையாளமாக) தொடவில்லை. படையலை காகத்துக்கு வழங்கும்போது அரி ஏதோ முணுமுணுக்கிறார், அதன் பிறகு ஒரு காகம் படையலை உண்கிறது.

மகாதேவன் இறந்த பிறகு உமாவை அவளது பிறந்தகத்துக்கு அனுப்பாமல் தன் வீட்டிலேயே வைத்துக் கொள்கிறார். கிராமத்தில் உள்ள பிராமண சமூகத்தின் வழக்கத்தின்படி கைம்பெண்ணான உமாவின் தலையை மொட்டையடிக்க வேண்டும் (ஒரு சடங்கு). ஆனால் அரி அவளுக்கு விதவைக்கான எந்த சடங்குகளையும் செய்ய எதிர்த்து அதை அனுமதிக்க மறுக்கிறார். இதனால் அவரது மனைவியாலேயே வீட்டில் சிக்கல்கள் எழுகின்றன. பல ஆண்டுகள் கழிந்த பிறகு, தாராவுக்கு ஒரு கொடிய நோய் இருப்பது கண்டறியப்படுகிறது. இப்போது வளர்ந்த உமா (வளர்ந்த உமாவாக பிரியா பாபட் நடித்துள்ளார் ) வீட்டின் பொறுப்பை ஏற்கிறார். தாரா இறப்பதற்கு முன், அவள் தன் தவறுகளை உணர்ந்து, அரி உமாவை திருமணம் செய்துகொள்ளும்படி கேட்கிறாள். அதை அரி ஏற்க மறுக்கிறார்.

இதற்கிடையில், அரி தன் மகன் சங்கர்ஷனுக்கு ( சாக்ஷம் குல்கர்னி ) திருமணம் செய்து வைக்கிறார். முதலிரவில் தம்பதிகள் கொஞ்சிக் குலவுகின்றனர். அந்த சத்ததால் தூக்கம் கலைந்த உமா, அவர்கள் இருக்கும் தாழிடப்பட்ட கதவுகளுக்கு முன் அமர்ந்து, அந்த குலாவுதல்களை இரசிக்கிறாள். இதை அரி பார்த்துவிடுகிறார். உமாவின் நடத்தையால் வெறுப்படைந்த அரி, அவளிடம் பேசுவதை தவிர்க்கத் தொடங்குகிறார். இடையே தன் மனைவி உமாவிடம் வாங்கிய சத்தியத்தைப் பற்றி அறிகிறார். அரியின் நடத்தை மாறியதற்கான காரணத்தை அறியாமல், உமா வருந்தி விலகி இருக்கத் தொடங்குகிறாள். அதே நேரத்தில் அவளுடைய உடல்நிலை மோசமடையத் தொடங்குகிறது.

அரி தன்னை வெறுப்பதால் உமா உண்ணா நோன்பு இருக்க முடிவு செய்கிறாள். அவளது உண்ணா நோன்பை முடிக்க, ஹரி, வேறு வழியில்லாமல், தனது நடத்தைக்கான கரணத்தை விளக்குகிறார். மகாதேவனுக்கு அரி இறுதிச் சடங்குகள் செய்தபோது, படையலை காகங்கள் உண்ணாததால், உமாவை வேறு எந்த ஒருவனும் தொட அனுமதிக்க மாட்டேன் என்று சத்தியம் செய்ததாக கூறுகிறார். இதனால், அவள் தலையை மொட்டையடிக்கும் சடங்குகளைச் செய்ய அவர் அனுமதிக்கவில்லை. மேலும் உமாவை திருமணம் செய்துகொள்ளும்படி தாராவின் கோரிக்கையையும் அவர் நிராகரித்தார். உமா தன்னை நேசிக்கத் தொடங்கியதை தாராவின் மூலம் அறிந்ததும், உமா மீதான அன்பை மீறி அவர் அவளுடன் பேசுவதை நிறுத்திக்கொண்டார்.

அவர் உமாவை காதலிப்பதாகவும், தான் செய்த சத்தியத்தை மீறி அவளை திருமணம் செய்து கொள்ளவும் ஒப்புக்கொள்கிறார். உண்மையை அறிந்த உமா, அரியை மன்னித்து அதற்கு உடன்படுகிறாள். அரியிடம் தாலியை பெறுகிறாள். ஆனால் அதன்பிறகு உமா இறந்துவிடுகிறாள். அரி தன் சத்தியத்தை மீறுவதை விரும்பாத உமா தன் காதலுக்காக தன் உயிரை தியாகம் செய்ததை அரி உணர்கிறார்.

நடிப்பு

  • ஹரி தாதா - டாம்லேவாக சச்சின் கேடேகர் ஹரி தாதா டாம்லேவாக
  • பிரியா பாபட் - விதவை உமா டாம்லேவாக
  • அபிஜித் கேல்கர் - அரியின் தம்பி, உமாவின் இறந்த கணவர் மகாதேவ் டாம்லேவாக
  • சவிதா மல்பேகர் - நமீ ஆத்யா, அரியின் விதவை அத்தை
  • சஞ்சய் காப்ரே - சல்வந்த் பட்கேவாக
  • வைபவ் மாங்கல் - உபாத்யாயாக
  • மேதா மஞ்ச்ரேக்கர் - அரியின் மனைவி தாரா டாம்லேவாக
  • கேடகி மாதேகன்கர் - இளம் உமா/துர்கா
  • சாக்ஷம் குல்கர்னி அரி -தாராவின் மகன் சங்கர்ஷன் டாம்லேவாக
  • மானவ நாயக் - ஹரி -தாராவின் மகள் சாந்தியாக
  • சாயி மஞ்ச்ரேகர் ஹாய் -தாராவின் மகள் குஷியாக
  • கிஷோர் ராவரனே - ஜானுவாக

விருதுகள்

இப்படம் பல விருதுகளைப் பெற்றது.

2012 11 வது புனே சர்வதேச திரைப்பட விழா [awards 1]
  • மகாராட்டிரா அரசின் சிறந்த மராத்தி திரைப்படத்திற்கான "சான்ட் துக்காராம்" விருது
  • சிறப்பு ஜூரி விருது: சச்சின் கேடேகர்
2012 மகாராட்டிரா அரசு திரைப்பட விருதுகள்.[awards 2]
  • சிறந்த படம்: கிரேட் மராத்தா என்டர்டெயின்மென்ட்
  • சிறந்த நடிகர்: சச்சின் கேடேகர்
  • சிறந்த ஒப்பனை கலைஞர்: விக்ரம் கெய்க்வாட், ஹென்றி மார்டிஸ்
  • சிறந்த இயக்குனர்: மகேஷ் மஞ்சரேக்கர்
  • சிறந்த நடிகை: பிரியா பாபட்
  • சிறந்த கலை இயக்குனர்: பிரசாந்த் ரானே, அபிஷேக் விஜய்கர்
2012 மராத்தி சர்வதேச திரைப்படம் மற்றும் திரையரங்க விருதுகள் (MICTA) [awards 3]
  • சிறந்த படம்: கிரேட் மராத்தா என்டர்டெயின்மென்ட்
  • சிறந்த நடிகர்: சச்சின் கேடேகர்
  • சிறந்த துணை நடிகை பெண்: மேதா மஞ்ச்ரேக்கர்
  • சிறந்த கலை இயக்குனர்: பிரசாந்த் ரானே, அபிஷேக் விஜய்கர்
  • சிறந்த ஒப்பனை கலைஞர்: விக்ரம் கெய்க்வாட், ஹென்றி மார்டிஸ்
  • சிறந்த இயக்குனர்: மகேஷ் மஞ்சரேக்கர்
  • சிறந்த நடிகை: கேடகி மேட்கோங்கர்
  • சிறந்த ஒளிப்பதிவாளர்: அஜித் ரெட்டி
  • சிறந்த ஆடை வடிவமைப்பாளர்: லக்ஷ்மன் யெல்லப்பா கோல்லர்
2012 பிரபாத் திரைப்பட விருதுகள் [awards 4]
  • சிறந்த நடிகருக்கான விருது: சச்சின் கேடேகர்
  • சிறந்த பின்னணி இசை: அஜித்-சமீர்
2012 திரை விருதுகள் மராத்தி [awards 5]
  • சிறந்த நடிகை: பிரியா பாபட்
2012 ஜீ கௌரவ் புரஸ்கர் [awards 6]
  • சிறந்த நடிகர் : சச்சின் கேடேகர்
  • சிறந்த துணை நடிகர் : சஞ்சய் காப்ரே
  • சிறந்த கதை: உஷா தத்தார்
  • சிறந்த ஒலி: மனோஜ் மொச்செமட்கர்
  • சிறந்த நடிகை : பிரியா பாபட்
  • சிறந்த பின்னணி பாடகி : ராஜஸ்ரீ பதக்
  • சிறந்த உரையாடல்கள்: கிரிஷ் ஜோஷி
பிற விருதுகள்
  • அகில இந்திய மராத்தி திரைப்பட கூட்டமைப்பு - யஷஸ்ரீ புரஸ்கார்[awards 7]
  • மஜா விருதுகள்;- மேதா மஞ்ச்ரேக்கர்[awards 8]

மேற்கோள்கள்

விருதுகள் 

வெளி இணைப்புகள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=காக்ஸ்பர்ஷ்&oldid=3954431" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்