கவின் (நடிகர்)

பக்க நெறி

கவின் ராஜ் (பிறப்பு: 22 சூன் 1990) என்பவர் தமிழ்நாட்டை சேர்ந்த தொலைக்காட்சி நடிகர் மற்றும் நிகழ்ச்சி தொகுப்பாளர் ஆவார். இவர் சரவணன் மீனாட்சி 2 (2012-2016) என்ற தொலைக்காட்சி தொடரிலும் மற்றும் பிக் பாஸ் தமிழ் 3 (2019) என்ற நிகழ்ச்சியிலும் பங்குபெற்றதன் மூலம் பரிசியமான நடிகர் ஆவார்.

கவின் ராஜ்
பிறப்பு22 சூன் 1990 (1990-06-22) (அகவை 34)
திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு
இருப்பிடம்சென்னை
பணிநடிகர், தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒகுப்பாளர்
செயற்பாட்டுக்
காலம்
2011-தற்போதுவரை

தொழில் வாழ்க்கை

ஊடகத்துறையில் இருந்த ஆர்வத்தினால் முதலில் நண்பர்களின் மூலமாகவே குறும்படங்கள் நடிக்க ஆரம்பித்தார். முறையாக நடிப்பைக் கற்றுக்கொள்ள, கூத்துப்பட்டறையில் சேர்ந்து மூன்று மாதங்கள் பயிற்சி எடுத்தார்.[1] அதன் பின்னர் விஜய் தொலைக்காட்சியில் நடிகராக தன் வாழ்வைத் துவக்கினார்.2011 ஆம் ஆண்டு கனா காணும் காலங்கள் என்ற தொடரில் 'சிவா' என்னும் கதாபாத்திரம் மூலம் சின்னத்திரையில் நடிகராக அறிமுகமானார். அதை தொடர்ந்து அதை தொடர்ந்து சரவணன் மீனாட்சி (2012-2013), தாயுமானவன் (2013-2014), போன்ற தொடர்களில் நடித்தார்.

2013 ஆம் ஆண்டு சரவணன் மீனாட்சி 2 என்ற தொடரின் மூலம் கதாநாயகனாக நடித்தார். இந்த தொடர் இவருக்கு மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது. அதை தொடர்ந்து 2017 ஆம் ஆண்டு சத்ரியன் என்ற திரைப்படத்தில் துணைக் கதாபாத்திரத்தில் நடித்தார். 2019 ஆம் ஆண்டு நட்புன்னா என்னான்னு தெரியுமா என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக நடித்தார். இவருக்கு ஜோடியாக நடிகை ரம்யா நம்பீசன் என்பவர் நடித்துள்ளார். 2019 ஆம் ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் தமிழ் 3 என்ற நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்குபெற்றார்.

தொலைக்காட்சி

ஆண்டுநிகழ்ச்சிபாத்திரம்தொலைக்காட்சிகுறிப்பு
2011-2012கனா காணும் காலங்கள்சிவாவிஜய் தொலைக்காட்சி
2013-2014தாயுமானவன்விக்கி
2012-2013சரவணன் மீனாட்சிமுருகன்
2013-2016சரவணன் மீனாட்சி 2வேட்டையன்சிறந்த கதாநாயகனாக விஜய் தொலைக்காட்சி விருது
2015வேட்டையாடு விளையாடுதொகுப்பாளர்விஜயதசமி சிறப்பு நிகழ்ச்சி
விஜய் தொலைக்காட்சி விருதுகள்
2016கிங் ஒப்பி டான்சர் 1
2017விஜய் தொலைக்காட்சி விருதுகள்
2019பிக் பாஸ் தமிழ் 3போட்டியாளராக

திரைப்படம்

ஆண்டுதிரைப்படம்பாத்திரம்குறிப்பு
2012பீட்சாசிறப்பு தோற்றம்
2015இன்று நேற்று நாளை
2017சத்ரியன்சந்திரன்
2019நட்புன்னா என்னான்னு தெரியுமாசிவா
2023டாடாமணிகண்டன்[2]

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=கவின்_(நடிகர்)&oldid=3950203" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்