கழுகும் சிறுமியும்

கழுகும் சிறுமியும் அல்லது போராடும் சிறுமி என்பது கெவின் கார்ட்டரினால் எடுக்கப்பட்ட ஒரு புகைப்படமாகும். இது மார்ச் 26, 1993ல் நியூ யோர்க் டைம்சு இதழில் முதன்முதலில் வெளியானது. இப் புகைப்படத்தில் ஒரு நலிந்த, பஞ்சத்தில் வாடுகின்ற சிறுவன் (முதலில் அது ஒரு சிறுமி என நம்பப்பட்டது [1]) புகைப்படத்தின் முன்னணியில் நிலைகுலைந்து காணப்படுவதோடு, அவனுக்கண்மையில் சிறுவனை நோட்டமிட்டபடி ஒரு கழுகும் காணப்படுகின்றது. இச் சிறுவன், மார்ச் 1993ல், அரை மைல் தூரத்தில் சூடானின் அயோத் நகரில் அமைந்திருந்த ஐக்கிய நாடுகளின் உணவு வழங்கல் மையத்தை அடைய முயற்சித்ததாகக் குறிப்பிடப்படுகிறது. மேலும், அவன் இறக்காமல் தப்பித்து விட்டதாகவும் அறிக்கையிடப்பட்டுள்ளது. இப் புகைப்படம் 1994ல் புலிட்சர் சிறப்புப் புகைப்படத்துக்கான பரிசை வென்றது. இப் பரிசைப் பெற்ற நான்கே மாதங்களில் கார்ட்டர் தற்கொலை செய்து கொண்டார்.

கெவின் கார்ட்டரின், புலிட்சர் பரிசு பெற்ற புகைப்படமான பட்டினியில் வாடும் சூடானியச் சிறுமியும் பின்னணியில் உள்ள கழுகும்

மேற்கோள்கள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=கழுகும்_சிறுமியும்&oldid=3671243" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்