கருப்பு மரங்கொத்தி

கருப்பு மரங்கொத்தி
பெண் பறவை
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
Piciformes
குடும்பம்:
Picidae
பேரினம்:
Dryocopus
இனம்:
D. martius
இருசொற் பெயரீடு
Dryocopus martius
(Linnaeus, 1758)
Black woodpecker range

கருப்பு மரங்கொத்தி (The black woodpecker) மரங்கொத்திப் பறவை இனத்தைச் சார்ந்த இப்பறவை வடக்கு நாடுகளில் அடர்ந்த இயற்கைச் சூழல் நிறைந்த பகுதிகளில் வாழுகிறது. வடக்குப் பிராந்தியமான இந்தியாவின் இமயமலை, வடக்கு ஆப்பிரிக்கா, அராபியத் தீபகற்பம் போன்ற பகுதிகளில் காணப்படும் பேரினத்தின் ஒரே பிரதிநிதியாக அடையாளம் காட்டப்படுகிறது. இப்பறவையின் பரவல் ஐரோவாசியாப் பகுதிவரை நீண்டுள்ளது. ஆனால் இதன் பரவல் புலம் பெயருவதைக் குறிப்பதல்ல. அது குடியேறுவதற்கான இல்லை. இவை சூழலியல்படி அமெரிக்கப் பகுதிகளில் காணப்படும் மரங்கத்திகளுடன் தொடர்புடையதாகவே உள்ளது.


பரவல்

உலகில் கிழக்கு ஸ்பெயின், ஐரோப்பா முலுவதிலும், மேலும் ஐக்கிய இராச்சியம் மற்றும் ஸ்காண்டினேவியா போன்ற நாடுகளில் காணப்படுகிறன. இப்பறவையின் பூர்வீகம் ஆசியாப் பகுதிகளில் அமைந்துள்ள கொரியா, ஜப்பான், சீனா, மத்திய கிழக்கு நாடுகள், மற்றும் கசக்கஸ்தான் போன்ற நாடுகள் ஆகும். [2] இந்தியாவில் தமிழ் நாடு மாநிலத்தில் அமைந்துள்ள மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடரின் ஆனை மலைக் காடுகளிலும் இவை காணப்படுகின்றன. உலகின் தெற்குப் பகுதியாக போர்சுகல், ஸ்பெயின், மற்றும் இத்தாலி போன்ற நாடுகளிலும் காணப்பட்டுள்ளதாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. படுகின்றன.

விளக்கம்

இப்பறவையின் நீளம் 45 முதல் 55 செமீற்றர்கள் சாதரண நிலையிலும் சிறகு விரிந்த நிலையில் 64 முதல் 84 செ. மீற்ரர்கள் கொண்டதாகவும் உள்ளது. [3] இப்பறவையின் குஞ்சுகளில் உடல் எடை சாதரணமாக 250 கிராம் முதல் 400 கிராம் வரை உள்ளது. இவை தென் அமெரிக்கவில் காணப்படும் மேகலினிக் மரங்கொத்தியைப் (Magellanic woodpecker) போன்ற தோற்றத்தில் ஒத்து காணப்படுகிறது. மேலும் பிலிடெட் மரங்கொத்திக்கும் (Pileated woodpecker) வெள்ளை வயிற்று மரங்கொத்தி (White-bellied woodpecker) தொடர்புடையதாக உள்ளது. இதன் தோகை கரியன் காகம் போன்று உடல் முழுவதிலும் கருப்பு நிறத்துடன் மூடிக்கொண்டுள்ளது.

வாழ்விடம்

கருப்பு மரங்கொத்தி வகைகள் அடிகமாக முதிர்ந்த வனப்பகுதி, ஊசியிலை வெப்பமண்டலக் காடுகள், துணை வெப்பமண்டலக் காடுகள், மற்றும் தைகா காடுகளையே தேர்வு செய்கின்றன. மேலும் இவை மலைப்பாங்கான மற்றும் தாழ்நில காடுகள் போன்ற பகுதிகளிலும் கானப்படுகின்றன. மனிதர்கள் வசிப்பிடங்களிலும் வாழ்ந்தாலும் இவை 100 மீ முதல் 2400 மீற்றர்கள் உயரம் கொண்ட பகுதியில் வாழுகின்றன.

இயல்புன்மை

இதன் முக்கிய உணவாக காய்ந்த மரப்பட்டைகளின் ஊடால் வசிக்கும் கார்பெண்டர் எறும்புகள் (Carpenter ant) மற்றும் மரப் பூச்சிகளைப் பிடித்து உட்கொள்கின்றன.[4]

வாழ்வு நிலை

குறிப்புகள்

ஆதார நூற்பட்டியல்

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Dryocopus martius
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=கருப்பு_மரங்கொத்தி&oldid=3762400" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்