கருநாடக சனதா கட்சி

கர்நாடக மாநில அரசியல் கட்சி

கர்நாடக ஜனதா பக்‌ஷா (Karnataka Janata Paksha, KJP) அல்லது கருநாடக சனதா கட்சி தென்னிந்திய மாநிலம் கர்நாடகத்தில் இயங்கும் ஓர் அரசியல் கட்சி ஆகும். இதனை பத்மநாப பிரசன்னா என்பவர் துவக்கினார். இருப்பினும் 2012ஆம் ஆண்டின் பிற்பகுதியில் இந்தக் கட்சியில் முன்னாள் கர்நாடக முதல்வர் பி. எஸ். எதியூரப்பா இணைந்து இதன் தலைமையை ஏற்றபிறகே பலராலும் அறியப்பட்டது. எதியூரப்பா நவம்பர் 30, 2012இல் தமது சட்டப் பேரவை உறுப்பினர் பதவியிலிருந்தும் பாரதிய ஜனதா கட்சியிலிருந்து அடிப்படை உறுப்பினராக இருப்பதிலிருந்தும் விலகினார். திசம்பர் 9, 2012 அன்று கருநாடக சனதா கட்சியின் அவேரி மாநாட்டின்போது அக்கட்சியில் இணைந்தார். 2013ஆம் ஆண்டில் கருநாடக மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களில் இக்கட்சியைத் தலைமையேற்று வழிநடத்துவார்.[1][2][3][4] 2013 மார்ச்சு மாதம் நடந்த உள்ளாட்சித் தேர்தல்களில் முதன்முறையாகப் போட்டியிட்டு இக்கட்சி எதிர்பார்த்த வெற்றியைப் பெறாதபோதும் ஆளும் பாரதிய ஜனதா கட்சியின் தோல்விக்கு பெரும் பங்காற்றியது. [5]

கர்நாடக ஜனதா பக்சா (KJP)
தலைவர்பி. எஸ். எதியூரப்பா
நிறுவனர்பத்மநாப பிரசன்ன குமார்
தொடக்கம்09 டிசம்பர் 2012, ஆவேரி
கலைப்பு09 சனவரி 2014, பெங்களூரு
இணைந்தவைபாரதிய ஜனதா கட்சி
பிரிவுபாரதிய ஜனதா கட்சி
தலைமையகம்எண் 11, சாந்தி நகர், பெங்களூரு- 560055, கருநாடகம்
கொள்கைசமூக மக்களாட்சி
கூட்டணிதேசிய ஜனநாயகக் கூட்டணி
(2013-2014)
தேர்தல் சின்னம்
இணையதளம்
http://kjpkarnataka.org/
இந்தியா அரசியல்

மேற்சான்றுகள்

வெளி இணைப்புகள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=கருநாடக_சனதா_கட்சி&oldid=3959827" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்