கருங்கொண்டை வல்லூறு

பறவைச் சிற்றினம்
கருங்கொண்டை வல்லூறு
கருங்கொண்டை வல்லூறு
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
இனம்:
A. leuphotes
இருசொற் பெயரீடு
Aviceda leuphotes
(Dumont, 1820)
Global range     Year-Round Range     Summer Range     Winter Range
வேறு பெயர்கள்

Falco leuphotes

கரும் குயிற்பாறு அல்லது கருங்கொண்டை வல்லூறு (Black Baza) இவை தெற்காசியா, மற்றும் தென்மேற்கு ஆசியா காடுகளில் காணப்படும் சிறியவைகையான ஊன் உண்ணிப் பறவை ஆகும். இப்பறவை பல இடங்களுக்கு இடப்பெயர்ச்சி செய்கிறது. இந்தியப்பகுதிகளில் காணப்படும் இவ்வகையான பறவைகள் இந்திய தீபகற்பப்பகுதிகளிலும், இலங்கைதீவுகளுக்கும் இடப்பயற்சி செய்கிறது. இவை கருப்பு நிற கொண்டையுடன், வலுவான கால் நகங்களைக்கொண்டு காணப்படுகிறது. இவை உயரமான மரங்களின் மேல் பல நேரங்களில் அமர்ந்திருப்பதைக் காணமுடியும்.

விவரணம்

கருங்கொண்டை வல்லூறு பறவையான இது பிற உயிரனங்களை வேட்டையாடி உண்ணும் மாமிச பட்சியாயாகும். இதன் நீளம் 30 முதல் 35 செமீ வரையும் சிறகு விரிந்த நிலையில் 66 செமீ முதல் 88 செமீ வரை நீளம் கொண்டதாக உள்ளது.[2] இதன் எடை 168 முதல் 224 கிராம் வரை உள்ளது. இவை மற்ற பறவைகளை விரைந்து தாக்குவதற்கு இதன் எடை உறுதுணையாக இருக்கிறது. இவற்றில் ஆண்களுக்கு மட்டும் வெள்ளை நிற பட்டை கொண்டு வித்தியாசப்படுத்தப்பட்டுள்ளது.[3]

இப்பறவைகள் இடப்பெயற்வின் போது சிறு சிறு கூட்டம் கூட்டமாகவே பறந்து செல்லும், ஆனால் இவை தங்கும் இடங்களில் மட்டும் பெரிய மந்தையாகக் காணப்படுகிறது.[4] அந்திப்பொழுதுகளில் இவை கூட்டம் கூட்டமாக வானில் பறந்து செல்லும். இப்பறவை வானில் பறந்து செல்லும்போதே சிறிய பூச்சிகளைப் பிடித்து உண்ணும் பழக்கம் கொண்டது. மேலும் இலைகளின் மேல் காணப்படும் சிறிய பூச்சிகளைப் பிடித்து உண்ணும் பழக்கமும் உள்ளது.

பரவல்

தெற்கு ஆசியா, மற்றும் தென்கிழக்காசியா வாழ்விட பறவையான இவை தாய்லாந்து, காங்காங் போன்ற நாடுகளுக்கு சென்று தனது எல்லையை விரிவுபடுத்திக்கொள்கின்றன.[5] தென்னிந்தியப்பகுதிகளில் அமைந்துள்ள மேற்கு தொடற்சி மலை, கிழக்கு தொடற்சி மலைப்பகுதிகளிலும் காணப்படுகிறது. அதிக அளவாக இந்தியாவிஅலும் பர்மாவைலும் இனப்பெருக்க காலத்தைக்கழிக்கிறது. இப்பறவை சென்னையின் மையப்பகுதியில் அமைந்துள்ள சிறுவர் பூங்காவிலும் எப்போதாவது காணப்படுகிறது.[6]இப்பறவைகள் இரு பாலினரும் சேர்ந்தே புல் நாறு மற்றும் சிறு செடிகளின் கிளைகளைக்கொண்டு கூடுகட்டி அதன் முட்டைகளை பாதுகாத்து 26 முதல் 27 நாட்களில் குஞ்சு பொரிக்கிறது.[7]

தலையின் மேல் கொண்டை போன்ற அமைப்பு

மேற்கோள்கள்

🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்