கரிபியக் கடல்

கடல்

கரிபியக் கடல் ( Caribbean Sea) (எசுப்பானியம்: Mar Caribe; பிரஞ்சு: Mer des Caraïbes இடச்சு: Caraïbische Zee) மேற்கு அரைக்கோளத்தின் அயனமண்டலத்திலுள்ள அட்லாண்டிக் பெருங்கடலுடன் 0°N 25°W / 0°N 25°W / 0; -25{{#coordinates:}}: cannot have more than one primary tag per page இணையும் ஒரு கடல் ஆகும். மேற்கிலும் தென்மேற்கிலும் மெக்சிகோவும் மத்திய அமெரிக்காவும், வடக்கில் கியூபாவில் தொடங்கும் பெரிய அண்டிலிசு தீவுக்கூட்டமும், கிழக்கில் சிறிய அண்டிலுசு அல்லது கரிபீசு தீவுக்கூட்டமும், தெற்கில் தென் அமெரிக்க வடக்கு கடற்கரையும் கரிபியக் கடலின் எல்லைகளாக அமைந்துள்ளன.

கரிபியக் கடல்
ஆள்கூறுகள்15°N 75°W / 15°N 75°W / 15; -75
வகைகடல்
மேற்பரப்பளவு10,63,000 சதுரமைல்கள்
அதிகபட்ச ஆழம்7686 மீட்டர்
மத்திய அமெரிக்காவினதும் கரிபியக்கடலினதும் வரைப்படம்

கரிபியக்கடலின் முழுப்பகுதியும், மேற்கிந்தியத் தீவுகளின் அனைத்துத் தீவுகளும், அருகே அமைந்துள்ள கடற்கரைகள் அனைத்தும் கூட்டாக கரிபியன் என அழைக்கப்படுகின்றன. 1,063,000 சதுரமைல் பரப்பளவைக் கொண்டுள்ள கரிபியக் கடல் மிகப்பெரிய கடல்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது[1]. இக்கடலின் மிக ஆழமான கடலடி ஆழப்பகுதி கேமான் பள்ளமாகும். 7686 மீட்டர் ஆழம் கொண்ட இப்பள்ளம் கேமான் திவுக்கும் யமைக்காவுக்கும் இடையில் அமைந்துள்ளது.

கரீபியன் கடலோரப்பகுதிகளில் பல வளைகுடாக்களும் விரிகுடாக்களும் இடம்பெற்றுள்ளன. கோணாவ் வளைகுடா, வெனிசுலா வளைகுடா, தாரைன் வளைகுடா, மசுகிட்டோ வளைகுடா, பாரியா வளைகுடா மற்றும் ஓண்டுராசு வளைகுடா போன்றவை அவற்றில் சிலவாகும்.

சான் ஆண்டிரசு தீவு, ஒரு புகழ்பெற்ற அயனமண்டல கரிபியன் தீவின் உருவப்படம்

கரிபியக் கடலில் மெசோ அமெரிக்கன் பவளத்திட்டு என்ற உலகின் இரண்டாவது மிகப்பெரிய பவளத்திட்டு அமைந்துள்ளது. மெக்சிகோ, பெலிசு, குவாட்டிமாலா மற்றும் ஓண்டுராசு கடலோரங்களில் 1000 கிலோமீட்டர் தொலைவுக்கு இப்பவளத்திட்டு நீண்டுள்ளது [2].

வரலாறு

1942 இல் கிறிசுடோபர் கொலம்பசு இசுபானியோலாவில் இறங்கிய காட்சி

15 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ஐரோப்பியர்களுடன் தொடர்பு தொடங்கிய நேரத்தில் அப்பிராந்தியத்தில் மேலாதிக்கம் செலுத்திய அமெரிக்க குழுக்களில் ஒன்றான கரிபியர்களிடமிருந்து கரீபியன் என்ற பெயர் தோன்றியுள்ளது. 1492 ஆம் ஆண்டில் கிறிசுடோபர் கொலம்பசு அமெரிக்காவை கண்டுபிடித்த பின்னர் எசுப்பானிய சொல்லான அண்டிலிசு என்ற பெயர் இப்பகுதிக்கு வந்தது. இதிலிருந்தே அண்டிலிசு கடல் என்ற பெயர் பல்வேறு ஐரோப்பிய மொழிகளில் கரீபியன் கடல் என்ற பெயருக்கான பொதுவான மாற்றுப் பெயராக மாறியது. வளர்ச்சிக்கான முதல் நூற்றாண்டின் போது எசுப்பானியா நிலையாக ஆதிக்கம் செலுத்தியது.

16 ஆம் நூற்றாண்டு முதல், கரீபியன் பகுதிக்கு வருகின்ற ஐரோப்பியர்கள் இப்பகுதியை தெற்கு கடல் என்றும் (பனாமாவின் பூசந்திக்குத் தெற்கேயுள்ள பசுபிக் பெருங்கடல்) என்றும் வட கடலுக்கு எதிரானது (அதாவது அதே பூசந்திக்கு வடக்கே உள்ள கரிபியக் கடல்) என்றும் அடையாளப்படுத்தினர் [3].

மெக்சிகோவின் குயிண்டானா ரூ மாநிலத்தில் உள்ள கரிபியக் கடற்கரையில் அமைந்துள்ள மாயா நகரத்தின் டுலும் தளம்

கிறிசுடோபர் கொலம்பசு கரீபியன் கடல் வழியாக ஆசியாவிற்கு கடல் வழியை கண்டுபிடிப்பதற்கான வேட்டையில் ஈடுபடும் வரை யூரேசியாவின் மக்கள் கரிபியக் கடலை அறிந்திருக்கவில்லை. அந்தச் சமயத்தில்; பொதுவாக மேற்கு அரைக்கோளத்தைப்பற்றியும் அவர்கள் அறிந்திருக்கவில்லை. மேற்கிந்தியத் தீவுகளை கொலம்பசு கண்டறிந்ததைத் தொடந்து அங்கு மிக விரைவாக மேற்கத்திய குடியேற்றங்கள் நடைபெற்றன. தொடக்கத்தில் எசுப்பானியர்கள் பின்னர் ஆங்கிலேயர்கள், டச்சுக்காரர்கள், பிரெஞ்சுக்காரர்கள், டென்மார்க் நாட்டவர்கள் என பல்வேறு குடியேற்றங்கள் இங்கு நிகழ்ந்தன. கரீபியத் தீவுகளில் நிகழ்ந்த குடியேற்றத்தைத் தொடர்ந்து கரீபியக் கடல் பகுதி ஐரோப்பிய வணிகம் சார்ந்த கடல் வர்த்தகத்திற்கும் போக்குவரத்திற்கும் ஒரு சுறுசுறுப்பு மிக்க இடமாக மாறியது. இந்த பரபரப்பான வர்த்தகம் இறுதியில் சாமுவேல் பெல்லமை மற்றும் பிளாக்பேர்டு போன்ற கடற் கொள்ளையர்களை ஈர்த்தது.

ஆண்டு முழுவதும் ஏராளமான சூரிய ஒளி கிடைக்கின்ற காரணத்தாலும் வெப்பமண்டல வெப்பநிலை காரணமாகவும் இப்பகுதியில் கிட்டத்தட்ட நிலையான வர்த்தக காற்றுகள் வீசின. பார்வையிடுவதற்கு அழகிய இடங்களும் தோன்றின. 20 ஆம் நூற்றாண்டின் இரண்டாம் பாதியிலும், 21 ஆம் நூற்றாண்டிலும் கரிபியக் கடல் பிரபலமான சுற்றுலாத்தலமாக வளர்ந்தது.

பிரித்தானிய கன்னித் தீவுகளில் உள்ள பவழப்பாறகள்

2015 ஆம் ஆண்டு நிலவரப்படி கரிபியக் கடலில் 22 தீவு பிரதேசங்கள் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 12 நாடுகளுக்கு எல்லையாகவும் இக்கடல் விளங்குகிறது.

கரிபியக் கடலின் எல்லை

அனைத்துலக நீர்நிலையியல் நிறுவனம் பின்வருமாறு கரீபியன் கடல் எல்லையை வரையறுக்கிறது:[4].

வடக்கிலுள்ள காற்றோட்டக் கால்வாய்-எயிட்டியில் உள்ள பியர்ல் புள்ளியையும் (19°40′வ) காலிட்டா புள்ளியையும் (74°15′மே) இணைக்கும் கால்வாய்.

மோனா செல்வழியில் - புவேர்ட்டோ ரிக்கோவிலுள்ள அகுயெரியடாவின் (18°31′வ 67°08′மே) கடைகோடி மற்றும் இங்கானோ முனையை இணைக்கும் கால்வாய்.

பெலிசு கடற்கரைக்கு வெளியே உள்ள அபார நீலத்துளை

கிழக்கு எல்லை: சான் டியாகோ (புவேர்ட்டோ ரிக்கோ) விலிருந்து நெடுவரை வழியாக வடக்கு திசையில் (65°39′மே) 100 அடி ஆழக்கால்வாய் மற்றும் இவ்விடத்திலிருந்து தெற்கும் கிழக்கும். மேலும் இதேபோல அமைந்திருக்கும் அனைத்து தீவுகள், மணல் திட்டுகள், சிறிய அண்டிலிசு பகுதியின் குறுகிய நீர்வழிகள், கலேரா புள்ளிவரை (டிரினிடாட் தீவின் வடகிழக்கில் உள்ள கடைகோடித் தீவு) விரிந்துள்ள பகுதிகள் உள்ளிட்டவையும் கரிபியக் கடலில் அடங்குகின்றன.கலேரா புள்ளியில் தொடங்கி டிரினிடாட் வழியாக கேலியோட்டா புள்ளி (தென்கிழக்கு கடைகோடி) வரை மற்றும் அங்கிருந்து வெனிசுலாவிலுள்ள பாயா புள்ளி (9 ° 32'வ 61 ° 0'மே) வரைக்கும் இக்கடல் பகுதி விரிந்துள்ளது.

பார்படோசு அதே கண்டத்தின் பரப்பில் உள்ள ஒரு தீவு என்றாலும், பார்படோசு கரீபியன் கடலுக்கு பதிலாக அட்லாண்டிக் பெருங்கடலில் உள்ளதாகக் கருதப்படுகிறது.

நிலவியல்

கரிபியத் தட்டின் பெரும்பகுதியாக கரிபியன் கடல் அமைந்துள்ளது. மேலும் இது பல்வேறு வயதுடைய தீவுகளின் பல தீவு வளைவுகள் மூலம் பெருங்கடலில் இருந்து பிரிக்கப்பட்டுள்ளது. வெனிசுவேலாவின் கடற்கரையோர டிரினிடாட் மற்றும் டொபாகோவின் வடகிழக்கில் வயது குறைந்த தீவுகள் சிறிய அண்டிலிசு முதல் கன்னித் தீவுகள் வரை நீண்டுள்ளன. கரீபியன் தட்டும் தென் அமெரிக்கத் தட்டும் மோதியதால் இந்த தீவுவளைவு உருவானது. அழிந்துவிட்ட குமுறும் எரிமலையான பெலே மலை, கரிபியன் நெதர்லாந்தின் அங்கமான சின்டு யுசுடாசியசில் கொயில் எரிமலை மற்றும் டொமினிக்காவில் மோர்ன் துரோயிசு பிடான்சு போன்ற செயல் திறமிக்க அழிந்த எரிமலைகள் இவ்வளைவில் உள்ளன. கியூபாவுக்கு வடக்குப் பகுதியிலுள்ள இசுபானியோலா, யமைக்கா மற்றும் புவேர்ட்டோ ரிக்கோ பகுதியில் இருக்கும் பெரிய தீவுகள் ஒரு பழைய தீவு வளைவில் இடம்பெற்றுள்ளன.

கரிபியக் கடலின் புவியியல் வயது 160 முதல் 180 மில்லியன் ஆண்டுகள் வரை இருக்கலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது, இது மெக்சிகோ சகாப்தத்தில் பான்கையா என்ற மீக்கண்டத்தில் ஏற்பட்ட ஒரு கிடைமட்ட முறிவு மூலமாக உருவாக்கப்பட்டது [5]. இது டெவோனியக் காலத்திலிருந்த புரோட்டோ-கரிபியன் வடிநிலத்தைக் கொண்டிருப்பதாகக் கருதப்படுகிறது. வடக்கில் கோண்ட்வானாவின் ஆரம்பகால கார்போனீஃபரசு கால நகர்வுடன் யுரோ அமெரிக்க வடிநிலத்தின் கூட்டிணைவால் இதன் அளவு குறைந்தது. 17 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் தொடங்கிய டிராசிக் காலத்தில் கரிபியன் கடலின் அடுத்தக்கட்ட உருவாக்கம் தொடங்கியது. சக்தி வாய்ந்த வெடிப்புகளால் நவீன நியூஃபவுண்ட்லேண்ட்லிருந்து மெக்ஸிகோ வளைகுடாவின் மேற்கு கரையோரம் வரை நீட்சியடைந்து மணல்மிகு வண்டல் பாறைகள் உருவாகின. சக்திவாய்ந்த கடற்கோள் காரணமாக ஆரம்பகால சுராசிக் காலத்தில், தற்போதைய மெக்சிகோ வளைகுடா பகுதியில் ஒரு பரந்த ஆழமற்ற குளம் உருவாகியது. கரீபியனில் உள்ள ஆழமான வடிநிலங்கள் மத்திய சுராசிக் பிளவின் போது வெளிப்பட்டன. இந்த வடிநிலங்களின் வெளிப்பாடு அட்லாண்டிக் பெருங்கடலின் துவக்கத்தைக் குறிக்கின்றது மற்றும் பிற்கால சுராசிக் கால முடிவில் பான்கையா என்ற ஒரு நிலத்தை அழிப்பதற்கு பங்களித்தது. கிரீத்தேசியக் காலத்தில் கரிபியன் கடல் கிட்டத்தட்ட தற்காலத்தில் இருக்கும் வடிவத்தைப் பெற்றதாகக் கூறப்படுகிறது. ஆரம்பகால தொன்னெழு காலப்பகுதியில் கடல் பின்னடைவு காரணமாக கரிபியன் பகுதி மெக்சிகோ வளைகுடா மற்றும் அட்லாண்டிக் பெருங்கடலில் இருந்து கியூபா மற்றும் எயிட்டி நிலப்பகுதிகளால் பிரிக்கப்பட்டிருந்தது. அண்மைய ஊழிக்காலத்தில் ஒலோசின் காலம் வரை இப்படியே இருந்த கரிபியன் பகுதி கடல்களின் நீர் அளவு உயர்ந்து அட்லாண்டிக் பெருங்கடலோடு தொடர்பு கொள்ளத்தொடங்கின.

கரீபியன் கடலின் தரைப்பகுதியானது வடிநிலங்களிலும், பெரும் பள்ளங்களிலும் ஆழ்ந்த சிவப்புக் களிமண் படிவுகளால் உருவாகியுள்ளது. கண்டச் சரிவுகள் மற்றும் முகடுகளில் சுண்ணாம்புப் படிவுகள் காணப்பட்டன. பெருநிலப்பகுதிகளின் ஆறுகளான ஒரினாக்கோ மற்றும் மெக்தாலினா ஆறுகள் களிமண் தாதுக்களை படியச் செய்தன. இப்படிவுகள் கரீபியன் கடல் மற்றும் மெக்சிகோ வளைகுடாவின் அடிப்பகுதியில் சுமார் 1 கிமீ (0.62 மைல்) தடிமன் அளவில் உள்ளது. இடை ஊழிக்காலம் தொடங்கி அண்மை ஊழிக்காலம் வரை (250 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு இருந்து தற்போது வரை) மேல் வண்டல் அடுக்குகளுக்கும், தொல்லூழிக் காலம் முதல் இடை ஊழிக்காலப்பகுதி வரை கீழ் வண்டல் அடுக்குகளுக்கும் தொடர்புடைய காலப்பகுதிகளாக இருந்துள்ளன.

கரீபியன் கடலின் தரைப்பகுதியானது தொடர் குன்றுகள் மற்றும் மலைத்தொடர்கள் மூலம் ஐந்து வடிநிலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.அட்லாண்டிக் பெருங்கடலின் தண்ணீர் சிறிய அண்டிலிசுக்கும் கன்னித்தீவுகளுக்கும் இடையில் உள்ள அனெகடா செல்வழி வழியாக கரிபியன் கடலுக்குள் நுழைகிறது. கியூபாவிற்கும் எயிட்டிக்கும் இடையில் விண்ட்வார்டு செல்வழி அமைந்துள்ளது. மெக்சிகோவுக்கும் கியூபாவுக்கும் இடையிலுள்ள யூகேடான் கால்வாய் மெக்சிகோ வளைகுடாவை கரிபியன் கடலுடன் இணைக்கிறது. கரிபியன் கடலின் ஆழமான பகுதி கேய்மான் பள்ளத்தில் தோரயமாக 7686 மீட்டர் ஆழத்துடன் காணப்படுகிறது. இருந்த போதிலும், கரிபியன் கடல் மற்ற கடல்களுடன் ஒப்பிடுகையில் ஒப்பீட்டளவில் ஆழமற்ற கடலாகவே கருதப்படுகிறது.

மகா கேமானில் உள்ள போத்தென் நகரத்திலிருந்து கரிபியன் கடலின் தோற்றம்
கரிபியன் தட்டின் புவிமேலோடு இயக்கம்

கரிபியன் கடலுக்கு கிழக்கிலுள்ள தென் அமெரிக்கத் தட்டின் அழுத்தம் காரணமாக கீழ் அண்டிலிசு பகுதி எரிமலை செயல்திறன் அதிகமாக கொண்டிருக்கிறது. 1902 ம் ஆண்டு இங்குள்ள பெல்லே எரிமலை வெடித்ததில் மிகப்பெரிய சேதங்கள் ஏற்பட்டன, கரிபியன் கடலின் தரைத்தளத்தில் இரண்டு பெருங்கடல் அகழிகள் காணப்படுகின்றன. கேமன் அகழி மற்றும் புவேர்ட்டோ ரிக்கோ அகழி ஆகிய இவ்விரண்டு அகழிகளால் இப்பகுதிக்கு பூகம்பம்ப ஆபத்து அதிக அளவில் உள்ளது. சுனாமியை உருவாக்கும் அச்சுறுத்தலை நீருக்கடியில் நிகழும் பூமியதிர்ச்சிகள் ஏற்படுத்துகின்றன, இதனால் கரீபியன் தீவுகளில் பேரழிவு தரக்கூடிய விளைவுகள் ஏற்படலாம். கடந்த 500 ஆண்டுகளில் இந்த பகுதியில் மட்டும் ரிக்டர் அளவு 7.5 ஆக உள்ள 12 பெரிய பூகம்பங்கள் ஏற்பட்டுள்ளதாக அறிவியல் தரவுகள் தெரிவிக்கின்றன [6]. மிகச்சமீபத்தில் எயிட்டியில் 7.1 ரிக்டர் அளவில் ஒரு பூகம்பம் சனவரி 2010 இல் நிகழ்ந்தது.

கடலியல்

கரிபியன் கடலின் நீரியல் உயர் சமச்சீர்மை தன்மையுடன் காணப்படுகிறது. கடலின் மேற்பரப்பில் மாதாந்திர சராசரி வெப்பநிலை ஒவ்வொரு ஆண்டும் மாறுபாடுபவது 3 ° செல்சியசு வெப்பநிலையை தாண்டாது. கடந்த 50 ஆண்டுகளில் கரிபியன் கடலில் வெப்பநிலை குறைவு மாறுபாடுகள் மூன்று நிலைகளில் நிகழ்ந்துள்ளது. 1974-1976 மற்றும் 1984-1986 ஆண்டுகளில் மிகக் குளிரான காலநிலை கட்டமும், இதையடுத்து ஆண்டுக்கு 0.6 செல்சியசு வெப்பநிலை உயர்வு காலகட்டமும் நிகழ்ந்துள்ளது. கரிபியன் கடலின் உவர்ப்புத் தன்மை 3.6%, அடர்த்தி 1,023.5–1,024.0 கிலோகிராம்/மீ3 ஆகும். மேற்பரப்பு கடல் நீரானது நீலமும் பச்சையுமாக அல்லது பச்சையாக காணப்படுகிறது.

மேற்கோள்கள்

புற இணைப்புகள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=கரிபியக்_கடல்&oldid=3862755" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்