கம்மின்ஸ் மகளிர் பொறியியல் கல்லூரி, புனே

மகரிஷி கார்வே ஸ்திரீ சிக்ஷன் சம்ஸ்தாவின் கம்மின்ஸ் மகளிர் பொறியியல் கல்லூரி, புனே (CCOEW, புனே) என்பது இந்தியாவின் மகாராஷ்டிர மாநிலம் புனேவில் உள்ள ஒரு தன்னாட்சி பெற்ற பொறியியல் கல்லூரி ஆகும். [1]

மகரிஷி கார்வே ஸ்திரீ சிக்ஷன் சம்ஸ்தாவின் கம்மின்ஸ் மகளிர் பொறியியல் கல்லூரி
குறிக்கோளுரைशीलं परं भूषणम्
ஆங்கிலத்தில் குறிக்கோளுரை
குணமே சிறந்த ஆபரணம்
வகைதன்னாட்சி பெற்ற பொறியியல் கல்லூரி
உருவாக்கம்1991
நிறுவுனர்மகரிஷி கார்வே ஸ்திரீ சிக்ஷன் சம்ஸ்தா
சார்புபுனே பல்கலைக்கழகம்
தரநிர்ணயம்அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழு
தலைவர்ஜெயந்த் இனாம்தார்
முதல்வர்முனைவர் எம்.பி.காம்ளே
கல்வி பணியாளர்
127
மாணவர்கள்1,872
பட்ட மாணவர்கள்1800
பட்டப்பின் படிப்பு மாணவர்கள்72
அமைவிடம்
கார்வே நகர்
, , ,
411052
,
வளாகம்11422.84 சதுர மீ
இணையதளம்கல்லூரி இணையதளம்

சாவித்ரிபாய் புலே புனே பல்கலைக்கழகத்தோடு இணைக்கப்பட்டுள்ள இக்கல்லூரியானது மகரிஷி கார்வே ஸ்திரீ சிக்ஷன் சம்ஸ்தா நிறுவனத்தால் நிர்வகிக்கப்படுகிறது.

வரலாறு

1896 ஆம் ஆண்டில் மகரிஷி கார்வே என்பவர் சமூக ரீதியாக ஒடுக்கப்பட்ட பெண்களின் கல்வி மற்றும் விடுதலை ஆகியவைகளுக்காக ஹிங்னே ஸ்திரீ சிக்ஷன் சம்ஸ்தா என்ற தொண்டு நிறுவனத்தை தொடங்கியுள்ளார். இதுவே பிற்பாடு மகரிஷி கார்வே ஸ்திரீ சிக்ஷன் சம்ஸ்தா(MKSSS), என மாறியுள்ளது.[2]

1991 ஆம் ஆண்டு இந்த கல்வி நிறுவனத்தால் பெண்களுக்கு கல்வி கற்பதன் மூலம் அவர்களை சுயசார்புடையவர்களாக மாற்றும் நோக்கத்துடன் கிழக்கின் ஆக்ஸ்போர்டு' என்று அழைக்கப்படும் புனே நகரில் தொடங்கப்பட்டதே இக்கல்லூரியாகும்[3].

இக்கல்லூரி, புனே பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது மேலும் அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழுவினால் (AICTE) தொழில்நுட்ப படிப்புகளையும் வழங்கிவருகிறது [4]

தரவரிசைகள்

கல்வி நிறுவனங்களுக்கான தேசியத் தரவரிசைக் கட்டமைப்பின் படி, இக்கல்லூரி 2020 ஆம் ஆண்டில் பொறியியல் கல்லூரிகளில் 173 ஆம் தரவரிசையில் உள்ளது.

தொழில் முனைவோர் மேம்பாட்டு பிரிவு

ஆசிரியர்களின் உதவியுடன் E-செல் உறுப்பினர்களால் உருவாக்கப்பட்ட தயாரிப்புகள் [5]

தொழில் முனைவோர் மேம்பாட்டு பிரிவு என்பது அதன் உறுப்பினர்களின் தொழில்முனைவு திறன்களை மேம்படுத்துவதற்கான ஒரு அமைப்பாகும். தொழில்முனைவோர் திறன்களை மேம்படுத்துவதற்கான பல்வேறு நிகழ்ச்சிகள் ஆண்டு முழுவதும் நடத்தப்படுகின்றன. இது தேசிய தொழில்முனைவோர் வலையமைப்பின் (NEN) ஒரு பகுதியாக இக்கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ளது. [6]

மேற்கோள்கள்

🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்