கபாலி
கருவிகள்
பொது
அச்சு/ஏற்றுமதி
பிற திட்டங்களில்
கபாலி | |
---|---|
![]() முற்தயாரிப்பு சுவரொட்டி | |
இயக்கம் | பா. இரஞ்சித் |
தயாரிப்பு | எஸ். தாணு |
கதை | பா. இரஞ்சித் |
இசை | சந்தோஷ் நாராயணன் |
நடிப்பு | ரஜினிகாந்த் ராதிகா ஆப்தே ஜான் விஜய் ரித்விகா தினேஷ் கலையரசன் தன்சிகா கிசோர் குமார் |
ஒளிப்பதிவு | ஜி. முரளீ |
படத்தொகுப்பு | கே. எல். பிரவீன் |
கலையகம் | வி கிரியேசன்சு |
வெளியீடு | சூலை 22, 2016 (2016-07-22) |
ஓட்டம் | 137 நிமிடங்கள் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
ஆக்கச்செலவு | ₹165 கோடி[1] |
மொத்த வருவாய் | ₹307.45 கோடி |
கபாலி (Kabali) 2016 ஆம் ஆண்டு வெளிவந்த ஓர் இந்தியத் தமிழ்த் திரைப்படம் ஆகும். இத்திரைப்படத்தை பா. இரஞ்சித் இயக்கினார். இத்திரைப்படத்தில் ரஜினிகாந்த் முதன்மைக் கதாப்பாத்திரமாக நடித்தார். இவருடன் ராதிகா ஆப்தே, கிசோர் குமார், தாய்வான் நடிகர் வின்சுடன் சாவோ, ராதிகா ஆப்தே, தன்சிகா, அட்டகத்தி தினேஷ், கலையரசன், ஜான் விஜய் மற்றும் பலர் நடித்தனர். 21 ஆகத்து 2015 இல் சென்னையில் அமைந்துள்ள ஏவிஎம் கலையகத்தில் படப்பிடிப்பு தொடங்கியது.[2] மேலும் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு மலேசியா, ஹொங் கொங் போன்ற நாடுகளிலும் பாங்கொக் நகரிலும் நடைபெற்றது.[3][4][5] கபாலி இந்தியாவில் மட்டும் 3200 திரையரங்குகளில் 2016 சூலை 22 அன்று வெளியிடப்பட்டது. இவற்றில் தென்னிந்தியாவில் 2200 அரங்குகளில் திரையிடப்பட்டது.[6] உலக அளவில் அதிக வசூலான இந்தியத் திரைப்படம் என்ற சாதனையைப் பெற்றது.
இப்படத்தின் கதைக்களம் மலேசியாவில் உள்ள ஒரு தாதாவின் கதையாக அமைந்துள்ளது. தன்சிகா தாய்லாந்தில் உள்ள ஒரு தாதாவாகவும் ரசினிகாந்தின் மகளாகவும் நடித்துள்ளார்.[7] ராதிகா ஆப்தே தோட்டத் தொழிலாளி குமுதவல்லியாக நடித்துள்ளார். இவர்தான் கபாலியின் மனைவி.
இசை: சந்தோஷ் நாரயணன். இசை வெளியீடு ஜூன் 12, 2016 என்று திட்டமிடப்பட்டது. ஆனால் அதற்கு முந்தைய நாள் (ஜூன் 11,2016) இணையதளத்தில் வெளியிடப்பட்டதால், அன்று மாலையே அதிகாரப்பூர்வமாக இசை வெளியீடப்பட்டது.
மாய நதி, வீர துறந்தரா பாடல்களை உமாதேவி எழுதியுள்ளார்.
1. உலகம் ஒருவனுக்கா-([ரோஷன் ஜாம்ராக், அனந்து, கானா பாலா, அனந்து, சந்தோஷ் நாராயணன், கானா பாலா, ரோஷன் ஜாம்ராக்])
2. வீரத் துரந்தரா-([ லாரன்ஸ் ஆர், ரோஷன் ஜாம்ராக், பிரதீப் குமார், கானா பாலா)]
3. வானம் பார்த்தேன்-([ பிரதீப் குமார்])
4.மாயா நதி-([ பிரதீப் குமார், ஸ்வேதா மோகன், அனந்து)]
5. நெருப்பு டா-( [அருண்ராஜா காமராஜ்])
பா. ரஞ்சித் இயக்கிய திரைப்படங்கள் | |
---|---|
|