கனக் முகர்ஜி

இந்திய அரசியல்வாதி

கனக் முகர்ஜி (Kanak Mukherjee) (கனக் தாஸ்குப்தா ; 1921 – 2005) ஒரு பொதுவுடைமைவாதியும் மற்றும் மேற்கு வங்கத்தில் பெண்கள் இயக்கத்தின் முன்னோடியாகக் கருதப்படுபவரும் ஆவார்.[1] இவர் இந்தியப் பொதுவுடைமைக் கட்சியின் (மார்க்சிஸ்ட்) மத்திய குழு உறுப்பினராக இருந்தார். இவர் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் நிறுவனர் ஆவார்.[2] இவர் இலக்கியத் துறையிலும் பங்களித்துள்ளார். அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கமானது இந்தியாவில் இம்மாதிரியான மகளிர் அமைப்புகளுக்கு முன்னோடியான அமைப்பாகும். உறுப்பினர்களின் எண்ணிக்கையிலும், முன்னெடுத்துப் போராடிய பிரச்சனைகளிலும், இந்தியாவில் இன்றைய நிலையில் உள்ள மகளிர் அமைப்புகளுக்கு முன்னுதாரணமாகத் திகழ்ந்த இயக்கமாகும்.

கனக் முகர்ஜி
কনক মুখোপাধ্যায়
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு
கனக் தாஸ்குப்தா

(1921-12-30)30 திசம்பர் 1921
இறப்பு9 மார்ச்சு 2005(2005-03-09) (அகவை 83)
குடியுரிமைஇந்தியர்
அரசியல் கட்சிஇந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்)
பிற அரசியல்
தொடர்புகள்
அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம்
துணைவர்சரோஜ் முகர்ஜி

ஆரம்ப கால வாழ்க்கை

கனக் முகர்ஜி டிசம்பர் 1921 ஆம் ஆண்டில் பிரிக்கப்படாத இந்தியாவின் ஜெசோர் மாவட்டத்தில் பிறந்தார். இவரது தந்தை சதீஷ் சந்திர தாஸ்குப்தா, ஒரு சிறந்த வழக்கறிஞர். இவரது தாயார் மோலினா தேவி. 1937 ஆம் ஆண்டில் பத்தாம் வகுப்புத்தேர்வில் தேர்ச்சி பெற்று, கல்கத்தாவுக்கு வந்து , கல்கத்தா பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள பெதுன் கல்லூரியில் சேர்க்கை பெற்றார். ஏற்கனவே 8 ஆம் வகுப்பு படித்ததிலிருந்து, கிருஷ்ணா பினோத் ரே, சுகுமார் மித்ரா, சாந்திமோய் கோஷ் போன்ற ஜெஸ்ஸோரில் உள்ள பொதுவுடைமைத் தலைவர்களுடன் இவர் தொடர்பு கொண்டிருந்தார். கல்கத்தாவுக்கு வந்த பிறகு இவர் அகில இந்திய மாணவர் கூட்டமைப்பில் பணியாற்றினார். 1938 ஆம் ஆண்டில் இந்தியப் பொதுவுடைமைக் கட்சியில் சேர்ந்தார் [3]

பிற்கால வாழ்வு

இந்தியப் பொதுவுடைமைக் கட்சியின் வங்காள மகளிர் துணைக்குழுவின் அழைப்பாளராக இருந்தார். 1964 ஆம் ஆண்டில் கட்சி பிரிக்கப்பட்டபோது, இவர் இந்தியப் பொதுவுடைமைக் கட்சியில் (மார்க்சிஸ்ட்) சேர்ந்தார். இவர் 1978 முதல் 1998 வரை இந்தியப் பொதுவுடைமைக் கட்சியின் (மார்க்சிஸ்ட்) மேற்கு வங்க மாநிலக் குழு உறுப்பினராகவும், 1989 முதல் 1998 வரை இந்தியப் பொதுவுடைமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) மத்திய குழுவின் உறுப்பினராகவும் இருந்தார். 1943 ஆம் ஆண்டில், பம்பாயில் இந்தியப் பொதுவுடைமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) முதல் கட்சி காங்கிரசில் ஒரு பிரதிநிதியாக சேர்ந்தார். இவர் சில காலம் கட்சியின் முழுநேர ஊழியாராகப் பணியாற்றினார். 1941 ஆம் ஆண்டில் இவர் பொதுவுடைமை இயக்கத் தலைவராக இருந்த சரோஜ் முகர்ஜியை மணந்தார்.[4] இவர் 1978 முதல் 1990 வரை உள்ள காலகட்டத்தில் இரண்டு முறை ( 1978 மற்றும் 1984 இல் ) மாநிலங்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

வங்காளத்தில் 1942-43 ஆம் ஆண்டு ஏற்பட்ட பஞ்சத்தில், பாங்கியோ மகளிர் ஆத்மரக்ச சமிதியின் தலைவராக பணியாற்றினார். அதே நேரத்தில் இவர் பெண்கள் இயக்கத்தின் ஆர்வலராக ஆனார். பின்னர் இவர் கணதந்திரிக் மகிளா சமிதியின் தலைவரானார். மேலும் இவர் இந்த அமைப்பை நிறுவவும் உதவினார். 1957 ஆம் ஆண்டு முதல் 1967 ஆம் ஆண்டு வரை, இவர் "கரே-பைர்" பத்திரிகையின் ஆசிரியராக இருந்தார். 1968 ஆம் ஆண்டில், இவர் "ஏக்சதே" இதழின் நிறுவனர்-ஆசிரியராக இருந்தார்.

இவர் இளங்கலைப் பட்டம் பெற்றவர் ஆவார். இவர் சில காலம் பள்ளியில் கற்பித்தார். 1967 ஆம் ஆண்டு முதல் 1981 ஆம் ஆண்டு வரை, கல்கத்தா மகளிர் கல்லூரியில் ஆங்கிலப் பேராசிரியராக இருந்தார். 1998 ஆம் ஆண்டில் கல்கத்தா பல்கலைக்கழகத்தின் இலக்கியப் பங்களிப்புக்காக அவருக்கு "புவன்மோகினி தாசி" விருது வழங்கப்பட்டது.

அவர் 9 மார்ச் 2005 அன்று காலமானார்.

மேற்கோள்கள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=கனக்_முகர்ஜி&oldid=3658379" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்