ஓசோன் அடுக்கு பாதுகாப்பிற்கான வியன்னா கருத்தரங்கு

ஓசோன் அடுக்கு பாதுகாப்பிற்கான வியன்னா கருத்தரங்கு (Vienna Convention for the Protection of the Ozone Layer) என்பது பன்னாட்டுச் சுற்றுச்சூழல் உடன்படிக்கையைக் குறித்தது ஆகும். இவ்வொப்பந்தம் 1985ஆம் ஆண்டு நடைபெற்ற வியன்னா மாநாட்டில் ஒப்புக்கொள்ளப்பட்டு 1988ஆம் ஆண்டு முதல் நடைமுறைக்கு வந்தது. பொதுமை நோக்கில், நாடுகளுக்கிடையிலான அனைத்து காலத்திற்கும் உகந்த மிகவும் வெற்றிகரமான உடன்படிக்கைகளில் வியன்னா உடன்படிக்கையும் ஒன்றாகும். ஐக்கிய நாடுகள் அவையின் 197 உறுப்பு நாடுகள் அனைத்தும் இவ்வுடன்படிக்கையில் கையெழுத்திட்டு உறுதிசெய்துள்ளன. மற்றும் கத்தோலிக்க திருச்சபையின் தலைமையகமாகக் கருதப்படும் திரு ஆட்சிப்பீடம், தென் பசிபிக் பெருங்கடல் பகுதியில் அமைந்துள்ள நியுவே மற்றும் குக் தீவுகள் போன்ற அமைப்புகளும் இவ்வுடன்படிக்கையை உறுதி செய்துள்ளன[1]

ஓசோன் அடுக்கு பாதுகாப்பிற்கான வியன்னா கருத்தரங்கு
Vienna Convention for the Protection of the Ozone Layer
கையெழுத்திட்டது22 மார்ச்சு 1985
இடம்வியன்னா
நடைமுறைக்கு வந்தது22 செப்டம்பர் 1988
நிலை20 நாடுகள் உறுதி செய்தன
கையெழுத்திட்டோர்28[1]
அங்கீகரிப்பவர்கள்197[1]
வைப்பகம்செயலர், ஐ.நா
மொழிகள்அரபி, சீனம், ஆங்கிலம், பிரெஞ்சு, உருசியம், எசுப்பானியம்

ஓசோன் படலத்தைப் பாதுகாக்க, சர்வதேச அளவிலான முயற்சிகளை ஒரு கட்டமைப்புடன் இவ்வுடன்படிக்கை செயல்படுகிறது. எனினும், ஓசோன் அடுக்கு பாதிப்பிற்குக் காரணமான பிரதான இரசாயன முகவரான சி.எப்.சி எனப்படும் குளோரோபுளோரோகார்பன்[2] நுகர்வைக் கட்டுப்படுத்தும் இலக்குடைய சட்டப்பூர்வமான நடவடிக்கைகள் ஏதும் இவ்வுடன்படிக்கையில் உறுதி செய்யப்படவில்லை. இந்த இலக்குகளையும் உடன்சேர்த்து மாண்ட்ரியல் உடன்படிக்கை தீட்டப்பட்டது.[3]

மேற்கோள்கள்

புற இணைப்புகள்

🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்