(திரைப்படம்)

ஷங்கர் இயக்கத்தில் 2015 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

(I) என்பது 2015 ஆம் ஆண்டு சனவரி மாதத்தில் வெளிவந்த காதல், அசத்தல், தமிழ் விஞ்ஞானத் திரைப்படமாகும். இப்படத்தினை சங்கர் இயக்க, வேணு ரவிச்சந்திரன் தயாரித்தார். இப்படம் விக்ரம் நடிக்கும் ஐம்பதாவது திரைப்படமாகும். ஐ என்றால் அழகு, கடவுள், அரசன், தலைவன், ஆசான் எனப் பொருள்படுகின்றது.[8] இந்தி மற்றும் தெலுங்கு மொழிகளிலும் அதே தலைப்பில் மொழியாக்கப்பட்டு வெளியானது.[9][10]

ஐ திரைப்படத்தின் முதல் விளம்பர சுவரொட்டி
இயக்கம்சங்கர்
தயாரிப்புவேணு ரவிச்சந்திரன்
கதைசுபா (எழுத்தாளர்கள்)
இசைஏ. ஆர். ரகுமான்
நடிப்புவிக்ரம்
ஏமி ஜாக்சன்
ஒளிப்பதிவுபி. சி. ஸ்ரீராம்
படத்தொகுப்புஆண்டோனி
கலையகம்ஏவிஎம்
வெளியீடுசனவரி 14, 2015
ஓட்டம்188 நிமிடங்கள்[1]
நாடுஇந்தியா{{{}}}
மொழிதமிழ்
ஆக்கச்செலவுரூ.100 கோடி[2][3][4][5][6][note 1]
மொத்த வருவாய்ரூ.239.50 கோடி(உலகளாவிய மொத்த வருவாய்)[7]

கதாபாத்திரங்கள்

  • விக்ரம் - லீ (எ) லிங்கேசன்
  • ஏமி ஜாக்சன் - தியா
  • சுரேஷ் கோபி - வாசுதேவன்
  • உபேன் படேல் - ஜான்
  • ராம்குமார் கணேசன் - இந்திர குமார்
  • ஓஜாஸ் ரஜனி - ஓஸ்மா
  • காமராஜ் - ரவி
  • சந்தானம் - ஜிம் பாபு
  • மோகன் கபூர் - விளம்பரப்பட இயக்குனர்
  • டி.கே கலா - லிங்கேசனின் தாய்
  • அழகு - லிங்கேசனின் தந்தை
  • சீனிவாசன் - கீர்த்தி வாசன்
  • சரத் குமார் (சிறப்புத் தோற்றம) - தானாகவே

கதை

ஆர்னால்ட் என்ற பெயரில் உடற்பயிற்சிக் கூடத்தை நடத்திவருகிறார் லிங்கேசன் என்ற லீ (விக்ரம்). அவருக்கு ஆணழகன் போட்டியில் வெல்ல வேண்டும் என்பது கனவு. தமிழக ஆணழகன் போட்டியில் வென்றால் மட்டுமே அடுத்த பெரிய போட்டிகளில் பங்கேற்க முடியும். இரவி தான் தமிழக ஆணழகன் போட்டியில் வென்றால் மட்டுமே இரயில்வேயில் பணி கிடைக்கும் என்பதால் லீயை போட்டியில் இருந்து விலகிக்கொள்ளச்சொல்கிறார். லீ மறுத்து விடுகிறார். தமிழக ஆணழகன் போட்டியில் வென்று விடுகிறார். அவருக்கு விளம்பர அழகி தியா (எமி ஜாக்சன்) மேல் காதல். தியா விளம்பரத்திற்கு வரும் அரங்கிற்கு சென்று அவருடன் தன் கைபேசியில் படம் எடுத்துக்கொள்கிறார். தியாவுக்கு உடன் நடிக்கும் விளம்பர அழகன் ஜான் தொந்தரவு செய்கிறார், காம இச்சைக்கு தியாவை இணங்கச்சொல்கிறார். தியா அதற்கு மறுத்து விடவே அவரை எல்லா விளம்பர உடன்படிக்கையிலிருந்தும் நீக்கிவிடுகிறார். இதையறிந்த தியா சீனா உடன்படிக்கை தன்னைவிட்டு போகாமல் பார்த்துக்கொள்கிறார். அவ்விளம்பரத்துக்கு தகுந்த ஆளை தேடுகிறார். லீ நினைவுக்கு வர அவரை அணுகிறார். அச்சமயம் பன்னாட்டு ஆணழகன் போட்டி நடைபெறுவதாலும் தான் அதில் கலந்துகொள்ள இருப்பதாலும் முடியாது என லீ மறுத்து விடுகிறார். லீயின் மனதை மாற்றி அவரை சீனா வர ஒப்புக்கொள்ள வைக்கிறார். சீனாவில் லீ தியாவுடன் நெருக்கமாக நடிக்கத் தயங்குவதால் அவரை தான் காதலிப்பதாக தியா சொல்கிறார். லீ தியாவுடன் நெருக்கமாக நடிக்கிறார். லீயின் ஒப்பனைக் கலைஞர் திருநங்கையான ஓஸ்மா லீயை காதலிக்கிறார். ஓஸ்மா காதலை லீ ஏற்காததால் தியா நடிப்புக்காக காதலிப்பதாக பொய் சொல்கிறார் என்று லீயிடம் கூறுகிறார். அது உண்மை என்று அறிந்த லீ மனம் வெறுக்கிறார். பின்பு தியா உண்மையாகவே லீ மீது காதல் கொள்கிறார். லீயும் தியாவும் விளம்பர உலகில் பெரும்புகழ் பெறுகிறார்கள். ஜான் விளம்பர வாய்ப்புகளை இழக்கிறார். இந்திர குமார் குளிர்பான விளம்பரத்தில் நடிக்குமாறு கூற அது தீங்கான பானம் என்பதால் அதில் நடிக்க லீ மறுத்து விடுகிறார். ஏன் தான் நடிக்கவில்லை என்பதையும் தொலைக்காட்சிகளுக்குச் சொல்லி விடுகிறார். அதனால் இந்திர குமார் நிறவன பங்குகள் விலை மிகவும் குறைந்து விடுகிறது. லீக்கும் தியாவுக்கும் நிச்சயம் நடக்கிறது. லீயின் உடல் கோணலாகி முடி உதிர்ந்து விடுவதால் திருமணம் செய்யாமல் தான் செத்தது போல் அனைவரையும் ஏமாற்றுகிறார். தனக்கு வந்திருப்பது ஒரு வகையான மரபணு மாற்றம் என்று நினைக்கிறார். வேறொரு மருத்துவர் அவருக்கு வந்தது மரபணு மாற்றமல்ல தீநுண்மத்தால் (Virus) வந்தது என சொல்கிறார். இதை லீயின் உடலில் யாரோ செலுத்தியுள்ளார்கள் என்று கூறுகிறார்.

இந்திர குமார், ஜான், ஓஸ்மா, வாசுதேவன் தான் இதற்கு காரணம் என்று அறிகிறார். வாசுதேவன் மருத்துவர் அவர் தான் மருந்தை இவருக்கு செலுத்தியது. வாசுதேவன் லீயின் உடற்பயிற்சி கூடத்துக்கு வருபவர். அவரே லீக்கும் மருத்துவம் பார்ப்பவர். வாசுதேவனுக்கும் தியாவுக்கும் திருமணம் நடப்பதை அறிந்த லீ தியாவை கடத்தி ஒரு கிடங்கில் அடைத்து விடுகிறார். லீ இறக்கவில்லை என்று தியா அறிகிறார். நான்கு பேரையும் கொல்லாமல் அவர்கள் அழகைக் கெடுத்து ஒரு வித தண்டனை கொடுக்கிறார்.

இசை

இப்படத்திற்கு ஏ. ஆர். ரகுமான் இசையமைத்திருந்தார்.

எண்பாடல்பாடகர்கள்பாடலாசிரியர்நீளம் (நி:வி)
1மெர்சலாயிட்டேன்அனிருத், நீத்தி மோகன்கபிலன்05:04
2என்னோடு நீ இருந்தால்சித் ஸ்ரீராம், சுனிதா சாரதி05:52
3லேடியோநிகிதா காந்திமதன் கார்க்கி04:42
4பூக்களே சற்று ஓய்வெடுங்கள்ஹரிசரண், ஷ்ரேயா கோஷல்05:08
5அய்ல அய்லஆதித்யா ராவ், நடாலி டி லூசியோ05:34
6என்னோடு நீ இருந்தால் (மறுசெய்கை)சின்மயி, சித் ஸ்ரீராம்கபிலன்04:12
7மெர்சலாயிட்டேன்… (மறு கலவை)அனிருத், நீத்தி மோகன்03:20

தயாரிப்பு

இப்படத்தை ஆஸ்கர் பில்ம்ஸ் வேணு ரவிச்சந்திரன் தயாரித்திருந்தார். சங்கர் மற்றும் விக்ரம் இணைந்து பணியாற்றும் ஆஸ்கர் பில்ம்ஸ் தயாரிக்கும் இரண்டாவது திரைப்படமிது. இம்மூவர் கூட்டணி ஏற்கனவே அந்நியன் படத்தில் பணியாற்றியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இத்திரைப்படத்தில் படத்தொகுப்பாளராக ஆண்டனி, ஒளிப்பதிவாளராக பி. சி. ஸ்ரீராம், கலை இயக்குனராக முத்துராஜ், நடன ஆசிரியர்களாக பாஸ்கோ-சீசர் மற்றும் எழுத்தாளர்களாக சுபா ஆகியோர் பணியாற்றினர்.

வெளியீடு

2015 ஆம் ஆண்டு சனவரி மாதம் பொங்கல் திருநாளன்று இப்படம் திரைக்கு வந்தது. மேலும் தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் இத்திரைப்படம் மொழியாக்கப்பட்டு வெளியாகியது.

குறிப்பு

மேற்கோள்கள்

வெளியிணைப்பு

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=ஐ_(திரைப்படம்)&oldid=3709275" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்