ஏ. மு. பாபு

கேரள உயர்நீதி மன்ற நீதிபதி

ஏட்டுப்பாங்கு முகமதுகான் பாபு (Aettupanku Mohammedkhan Babu) இந்தியாவின் கேரள மாநிலத்தைச் சேர்ந்த உயர் நீதிமன்ற நீதிபதியாவார். 1957 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 26 ஆம் தேதியன்று இவர் பிறந்தார். இந்நீதிமன்றம் கேரள மாநிலம் மற்றும் இலட்சத்தீவு ஒன்றியப் பிரதேசத்தில் உள்ள மிக உயர்ந்த நீதிமன்றமாகும். கேரள உயர் நீதிமன்றத்தின் தலைமையகம் எர்ணாகுளம் மாவட்டம், கொச்சியில் அமைந்துள்ளது. [1] [2] [3] [4] [5] [6] [7]

மாண்புமிகு நீதிபதி
ஏ. மு. பாபு
A. M. Babu
நிதிபதி, கேரள உயர் நீதிமன்றம்
பதவியில்
05 அக்டோபர் 2016 – 26 அக்டோபர் 2019
பரிந்துரைப்புடி.எசு. தாக்கூர்
நியமிப்புபிரணப் முகர்ஜி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு26 அக்டோபர் 1957 (1957-10-26) (அகவை 66)
கஞ்சிரப்பள்ளி, கோட்டயம்
குடியுரிமைஇந்தியர்
தேசியம் இந்தியா
முன்னாள் கல்லூரிபுனித பெர்ச்சிமான்சு கல்லூரி
இணையத்தளம்கேரள உயர்நீதி மன்றம்

ஆரம்ப வாழ்க்கை மற்றும் கல்வி

பாபு 1957 ஆம் ஆண்டு கேரளாவின் கோட்டயத்தில் உள்ள காஞ்சிரப்பள்ளியில் பிறந்தார். கீழில்லம் புனித தாமசு உயர்நிலைப் பள்ளியில் பள்ளிப் படிப்பை முடித்தார். சங்கனாச்சேரியில் உள்ள புனித பெர்சிமன்சு கல்லூரியில் பட்டம் பெற்றார். உடுப்பி சட்டக் கல்லூரியில் சட்டப் பட்டம் பெற்றார். [1]

தொழில்

பாபு 1981 ஆம் ஆண்டு வழக்கறிஞராகப் பதிவு செய்தார். 1989 ஆம் ஆண்டு கேரள நீதித்துறையில் முன்சிப் பதவியில் சேர்ந்த இவர் 1992 ஆம் ஆண்டு துணை நீதிபதியாகவும், 2002 ஆம் ஆண்டு மாவட்ட நீதிபதியாகவும் பதவி உயர்வு பெற்றார். 2010 ஆம் ஆண்டு கொச்சியில் உள்ள கேரள நீதித்துறை அகாடமியின் கூடுதல் இயக்குனராகவும், 12.04.2012 அன்று இயக்குநராகவும் நியமிக்கப்பட்டார். 2016 ஆம் ஆண்டு அக்டோபர் 5 ஆம் தேதியன்று இவர் கேரள உயர்நீதி மன்றத்தின் கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்டார். 2018 ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் 16 ஆம் தேதி முதல் நிரந்தர நீதிபதியானார். 2019 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 26 ஆம் நாள் பணியிலிருந்து ஓய்வுபெற்றார்.[1]

மேற்கோள்கள்

புற இணைப்புகள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=ஏ._மு._பாபு&oldid=3995437" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்