ஏலூரு மாவட்டம்

ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள மாவட்டம்

ஏலூரு மாவட்டம் (Eluru district), ஆந்திரப் பிரதேசத்தின் 26 மாவட்டங்களில் ஒன்றாகும்.[3] இதன் நிர்வாகத் தலைமையிட நகரம் ஏலூரு ஆகும். மேற்கு கோதாவரி மாவட்டத்தின் ஏலூரு வருவாய் கோட்டம், ஜெங்கரெட்டிகுடேம் வருவாய் கோட்டம் மற்றும் கிருஷ்ணா மாவட்டத்தின் நுஸ்வித் வருவாய் கோட்டங்களைக் கொண்டு 4 ஏப்ரல் 2022 அன்று புதிதாக நிறுவப்பட்டது.[4][5][6][7][8]

ஏலூரு மாவட்டம்
ఏలూరు జిల్లా
ஏலூரு மாவட்ட ஆட்சியர் அலுவலகம், துவாரகை திருமலை கோயில் கோபுரம்
நாடு இந்தியா
மாநிலம்ஆந்திரப் பிரதேசம்
நிறுவப்பட்ட நாள்4 ஏப்ரல் 2022
தலைமையிடம்ஏலூரு
மண்டல்கள்28
அரசு
 • சட்டமன்றத் தொகுதிகள்7
பரப்பளவு
 • மாவட்டம்6,679 km2 (2,579 sq mi)
மக்கள்தொகை
 (2011)
 • மாவட்டம்39,36,966
 • அடர்த்தி590/km2 (1,500/sq mi)
 • நகர்ப்புறம்
8,08,777
மக்கள் தொகை
 • பாலின விகிதம்1004
அஞ்சல் சுட்டு எண்
534 XXX [1]
வாகனப் பதிவுAP-37 (பழையது)
AP–39 (புதியது, 30 சனவரி 2019 முதல்)[2]
நெடுஞ்சாலைகள்NH-16, NH-216, NH-216A, NH-365BB, NH-516D, NH-516E
இணையதளம்https://eluru.ap.gov.in
ஏலூருவில் புத்த பூங்கா
துவாரகை திருமலை கோயில் பக்தர்கள்
குண்டுபள்ளியில் தம்மலிங்கேஷ்வர சுவாமி மலையின் குடைவரை

மக்கள் தொகை பரம்பல்

6411.56 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட ஏலூரு மாவட்டத்தின் மொத்த மக்கள் தொகை 16,18,288 ஆகும். இதன் மக்கள் தொகையில் பட்டியல் சமூகத்தவர்கள் 4,38,087 (21.87 %) உள்ளனர். இதன் எழுத்தறிவு 71.44% ஆகும்.

புவியியல்

6,679 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட ஏலூரு மாவட்டத்தின் வடக்கில் கம்மம் மாவட்டம் மற்றும் அல்லூரி சீதாராம இராஜு மாவட்டம், தெற்கில் மேற்கு கோதாவரி மாவட்டம் மற்றும் கொனசீமா மாவட்டம், கிழக்கில் கிழக்கு கோதாவரி மாவட்டம் மற்றும் மேற்கில் கோதாவரி ஆறும் எல்லைகளாகக் கொண்டுள்ளது.

மாவட்ட நிர்வாகம்

ஏலூரு மாவட்டம் ஏலூரு, ஜெங்கரெட்டிகுடேம் மற்றும் முழிவீடு என 3 வருவாய்க் கோட்டங்களாகவும், 28 மண்டல்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இம்மாவட்டத்தில் ஏலூரு மாநகராட்சி உள்ளது. இம்மாவட்டத்தில் 624 கிராமங்கள் உள்ளது.

மண்டல்கள்

ஏலூரு வருவாய் கோட்டம் 13 மண்டல்களையும், ஜங்காரெட்டிகூடம் வருவாய் கோட்டம் 10 மண்டல்களையும், நுசிவீடு வருவாய் கோட்டம் 6 மண்டல்களையும் கொண்டுள்ளது.

#ஜங்காரெட்டிகூடம் வருவாய் கோட்டம்ஏலூரு வருவாய் கோட்டம்நுசிவீடு வருவாய்க் கோட்டம்
1ஜங்காரெட்டிகூடம்ஏலூருநுசிவீடு
2போலவரம்தெந்துலூர்லிங்கபாலம்
3புட்டாயகூடம்பெதவேகிஅகிரிபள்ளி
4ஜீலுகுமில்லிபெதபாடுசத்திரை
5கொய்யலகூடம்உங்குட்டூர்முசுன்னூரு
6குக்குனூர்பீமடோலுசிந்தலபூடி
7வேலேருபாடுநிடமர்ரு
8காமவரப்புகோட்டைகணபவரம்
9நரசாபுரம்கைக்காலூரு
10துவாரகா திருமலைமந்தவள்ளி
11காளிதிந்தி
12முடிநெப்பள்ளி
13தாடேபள்ளிகூடம்

அரசியல்

ஏலூரு மாவட்டத்தில் ஏலூரு மக்களவைத் தொகுதி]]யும், 7 சட்டமன்றத் தொகுதிகளையும் கொண்டுள்ளது[9]. அவைகள்:

இதனையும் காண்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=ஏலூரு_மாவட்டம்&oldid=3742670" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்