ம. ஆ. சுமந்திரன்

(எம். ஏ. சுமந்திரன் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

எம். ஏ. சுமந்திரன் என அழைக்கப்படும் மதியாபரணன் ஆபிரகாம் சுமந்திரன் (Mathiaparanan Abraham Sumanthiran, பிறப்பு: பெப்ரவரி 9, 1964), இலங்கை அரசியல்வாதியும், நாடாளுமன்ற உறுப்பினரும், இலங்கைத் தமிழ் மனித உரிமை ஆர்வலரும், வழக்கறிஞரும், சனாதிபதி சட்டத்தரணியும் ஆவார்.[1][2]

எம். ஏ. சுமந்திரன்
M. A. Sumanthiran
நாடாளுமன்ற உறுப்பினர், சனாதிபதி சட்டத்தரணி
2013 இல் சுமந்திரன்
இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியில்
ஆகத்து 2020
தொகுதியாழ்ப்பாண மாவட்டம்
பதவியில்
ஆகத்து 2015 – மார்ச் 2020
தொகுதியாழ்ப்பாண மாவட்டம்
பதவியில்
2010–2015
தொகுதிதேசியப் பட்டியல்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு
மதியாபரணன் ஆபிரகாம் சுமந்திரன்

9 பெப்ரவரி 1964 (1964-02-09) (அகவை 60)
இணுவில், இலங்கை
குடியுரிமைஇலங்கையர்
தேசியம்இலங்கைத் தமிழர்
அரசியல் கட்சிஇலங்கைத் தமிழரசுக் கட்சி
பிற அரசியல்
தொடர்புகள்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு
முன்னாள் கல்லூரிசென்னைப் பல்கலைக்கழகம்
மொனாஷ் பல்கலைக்கழகம்
தொழில்வழக்கறிஞர்
இணையத்தளம்www.sumanthiran.com

ஆரம்ப வாழ்க்கை

சுமந்திரன் 1964 பெப்ரவரி 9 இல்[2] இலங்கையின் யாழ்ப்பாண மாவட்டம், இணுவிலில் பிறந்தார்.[3][4] இவரது குடும்பம் வடமராட்சி பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள். தந்தை கரவெட்டியைச் சேர்ந்தவர். தாயார் குடத்தனையைச் சேர்ந்தவர்.[4] கொழும்பில் வளர்ந்த சுமந்திரன் கொழும்பு றோயல் கல்லூரியில் கல்வி கற்றார்.[4][5] பின்னர் சென்னைப் பல்கலைக்கழகத்தில் இயற்பியலில் இளங்கலைப் பட்டம் பெற்றார்.[6] பின்னர் இலங்கை சட்டக் கல்லூரியில் சட்டம் பயின்று வழக்குரைஞரானார்.[6]

2001 ஆம் ஆண்டில் ஆத்திரேலியாவின் மொனாஷ் பல்கலைக்கழகத்தில் இணைய மற்றும் இலத்திரனியல் சட்டத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார்.[6][7]

சுமந்திரன் மெதடிய கிறித்தவர் ஆவார்.[8] இலங்கை மெதடிசத் திருச்சபையின் துணைத் தலைவராகப் பணியாற்றியவர்.[9][10]

சட்டப் பணி

1991 ஆம் ஆண்டு முதல் கொழும்பில் வழக்குரைஞராகப் பணியாற்றி வரும் சுமந்திரன் உரிமையியல் வழக்குகளில் மீயுயர், மேன்முறையீட்டு, உயர், மற்றும் மாவட்ட நீதிஅமன்றங்களில் வாதாடி வருகிறார்.[6] இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபன, மற்றும் இலங்கை கடல்வள சேவைகள் ஆகியவற்றைத் தனியார் மயமாக்கல் போன்றவற்றில் இவர் வெற்றிகரமாக வாதாடியுள்ளார்.[6] அடிப்படை மனித உரிமை மீறல்கள், நாடாளுமன்ற சட்டமூலங்களுக்கான சட்டமீளாய்வு போன்ற வழக்குகளில் வாதாடியுள்ளார்.[6] கொழும்பில் இருந்து தமிழர் கட்டாய வெளியேற்றங்களை இவர் தடுத்து நிறுத்தியுள்ளார்.[6][11]

அரசியலில்

சுமந்திரன் இலங்கை நாடாளுமன்றத்துக்காக ஏப்ரல் 2010 தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேசியப் பட்டியல் உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டார்.[12][13][14] 2012 மே மாதத்தில் இவர் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வெளிவிவகார மற்றும் சட்ட விவகாரங்களுக்கான செயலாளராக நியமிக்கப்பட்டார்.[15][16] 2014 செப்டம்பரில் தமிழரசுக் கட்சியின் இரண்டு உதவிச் செயலாளர்களில் ஒருவராக நியமிக்கப்பட்டார்.[17][18][19][20] சுமந்திரன் 2015 நாடாளுமன்றத் தேர்தலில் யாழ்ப்பாண மாவட்டத்தில் ததேகூ வேட்பாளராகப் போட்டியிட்டு 58,043 விருப்பு வாக்குகள் பெற்று மீண்டும் நாடாளும்ன்றம் சென்றார்.[21][22]

2017 சனவரியில் சுமந்திரனைக் கொலை செய்யத் திட்டமிட்டதாகக் குற்றம் சாட்டி இலங்கை காவல்துறையின் பயங்கரவாத புலனாய்வுத் திணைக்களத்தினர் விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள் சிலரைக் கைது செய்தனர்.[23][24] 2016 திசம்பர் 12 இலும் 2017 சனவரி 13 இலும் மருதங்கேணி அருகே சொரணம்பட்டு-தாளையடி வீதியில் கொலை முயற்சி இடம்பெற்றதாகக் குற்றம் சாட்டப்பட்டது.[25][26] விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள் ஐவர் கைது செய்யப்பட்டனர்.[23][27][28] ஐந்து சந்தேக நபர்களும் 2017 செப்டம்பரில் யாழ்ப்பாணம் உயர் நீதிமன்றால் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.[29] 2018 சூலையில் இவர்கள் கொழும்பு உயர்நீதிமன்றத்தில் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்பட்டனர்.[30][31][32]

2020 நாடாளுமன்றத் தேர்தலில் சுமந்திரன் மீண்டும் தெரிவு செய்யப்பட்டு நாடாம்ளுமன்றம் சென்றார்.[33][34][35] யாழ்ப்பாண மாவட்ட வேட்பாளர்களுக்கான விருப்பு வாக்குகள் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் 2020 ஆகத்து 6 இல் எண்ணப்பட்டன. இதன்போது பல்வேறு வேட்பாளர்களின் ஆதரவாளர்களுக்கிடையே வாக்குவாதங்களும் கைகலப்புகளும் இடம்பெற்றன.[35] ததேகூ வேட்பாளர் சசிகலா ரவிராஜ் (நடராஜா இரவிராஜின் மனைவி) வாக்கு எண்ணப்படுதலில் சுமந்திரன் தலையிட்டதாக குற்றம் சாட்டினார்.[36][37] சுமந்திரன் இக்குற்றச்சாட்டுகளை மறுத்திருந்தார்.[35][38][39] வாக்குக் கணிப்பீட்டில் கலந்து கொண்ட சுயாதீனமான தேர்தல் கண்காணிப்பு அமைப்பு, வேட்பாளர்களும் அவர்களது ஆதரவாளர்களும் வாக்குகள் எண்ணப்படும் செயல்முறையை சரியாகப் புரிந்து கொள்ளாமையும், சமூக ஊடகங்களில் ஆதாரமற்ற வதந்திகள் பரப்பப்பட்டமையுமே இந்த வன்முறைச் சம்பவத்திற்குக் காரணம் எனக் குற்றம் சாட்டியது.[40]

தேர்தல் வரலாறு

எம். ஏ. சுமந்திரனின் தேர்தல் வரலாறு
தேர்தல்தொகுதிகட்சிகூட்டணிவாக்குகள்முடிவு
2015 நாடாளுமன்றம்[41]யாழ்ப்பாண மாவட்டம்இலங்கைத் தமிழரசுக் கட்சிதமிழ்த் தேசியக் கூட்டமைப்பு58,043தெரிவு
2020 நாடாளுமன்றம்[42]யாழ்ப்பாண மாவட்டம்இலங்கைத் தமிழரசுக் கட்சிதமிழ்த் தேசியக் கூட்டமைப்பு27,834தெரிவு

மேற்கோள்கள்


"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=ம._ஆ._சுமந்திரன்&oldid=3901638" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்